நல்ல படம்.. ஆனால் ஒரு வாரம் கூட ஒடாது. தொப்புள் காட்டும் பெண்கள் இந்த படத்தில் இருக்கமாட்டார்கள்.பைட்,பாட்டு சென்டிமென்ட எதுவும் இருக்காது. உலகநாயகனோ,சூப்பர் ஸ்டாரோ,பவர் ஸ்டாரோ நடித்தபடம் அல்ல.ஆனால் தமிழர்களை தலைநிமிரச்செய்த தமிழனை பற்றி படம். உலகம் தெரிந்த பிரபலத்தை பற்றிய படம். 100 கோடிக்கு மேல் வசூல் செய்ய வேண்டிய படம்.ஆனால் நாம் ரூ.100 கொடுத்துக்கூட இந்த படத்தை பார்க்க மாட்டோம். கணித மேதை ''சீனிவாச ராமானுஜத்தின்' வாழ்க்கை படமாக வெளிவர உள்ளது. ஏற்கனவே பாரதி,பெரியார் போன்றவர்களின் வாழ்க்கை படமாக்க பட்ட போது ஏற்பட்ட நிலைமை தான் இந்த படத்திற்கும். தமிழ் சமூகத்திற்கும், இந்திய சுதந்திரத்திற்கும் பாடுபட்டவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை இது தான். நடிகை அஞ்சலியை பற்றி பக்கம் பக்கமாக எழுதுகிற பதிவர்கள் இந்த படத்தை பற்றி எழுதுவார்களா?..
பாரதி,பெரியார் இயக்குனரின் படம்..
கணித மேதை ராமானுஜன் வாழ்க்கையை மையமாக வைத்து ராமானுஜன் என்ற பெயரில் புதுப்படம் தயாராகிறது. இப்படத்தை ஞானராஜசேகரன் எழுதி இயக்குகிறார். இவர் மோகமுள், முகம், பாரதி, பெரியார் ஆகிய படங்களை டைரக்டு செய்தவர்.தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளில் இப்படம் தயாராகிறது. இதில் ராமானுஜன் கேரக்டரில் பழைய நடிகை சாவித்திரியின் பேரனும், விஜய சாமுண்டீஸ்வரியின் மகனுமான அபிநய் நடிக்கிறார். நாயகியாக பாமா நடிக்கிறார்.
சுஹாசினி, நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு, ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், வெண்ணிற ஆடை மூர்த்தி, ராதாரவி, தலைவாசல் விஜய், மதன்பாப், டி.பி.கஜேந்திரன், ஏ.ஆர்.எஸ்.பெல்லிகுமார், டி.வி.வரதராஜன், மோகன்சர்மா ஆகியோரும் நடிக்கின்றனர்.இவர்களுடன் லண்டனை சேர்ந்த கெவின் மெக்கோவன், கிரஹாம் சியாடில், மைக்கேல் லியபர் ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர்.படப்பிடிப்பு ராமானுஜன் வாழ்ந்த கும்பகோணம் மற்றும் நாமக்கல், வேலூரிலும், லண்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும் நடக்கிறது.
சீனிவாச ராமனுஜம் பற்றி சுருக்கமாக...
இராமானுஜனின் தந்தையும் தந்தைவழிப் பாட்டனாரும் துணிக் கடைகளில் எழுத்தராக வேலை பார்த்தவர்கள்.. தாய்வழிப் பாட்டனாரும் ஈரோட்டு முனிசீப்பு அறமன்றத்தில் அமீனாக வேலை பார்த்தவர். ஆகவே இவர் எளிய குடும்பத்தில், ஏழ்மையான நிலையில் இருந்தார். எனினும் இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண்கோட்பாடுகளிலும் (n theory),), செறிவெண் (complex number) கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தபபட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
என்ன நண்பர்களே இந்தபடம் நிச்சயம் தோல்வி படம் தானே?.
-செல்வன்
Comments
RameshS
நம் பல்கலைக்கழக கணிதங்களில் 97 விழுக்காடு எந்தப் பயனும் இல்லாதவை. மூளைக்கு விளையாட்டு கொடுக்கும் வெற்று தேற்றங்களே.
மீதி 3 விழுக்காடு மட்டுமே நடைமுறை இயற்பியல் வேதியியல் மின்னணுவியல், கணிதவியலில் பயன்பட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம் ராமானுஜம் கணினி, தொலைக்காட்சி, திரைப்படம், தொலைபேசி, மின்சார விளக்கு போன்ற பயனுள்ள விஷயங்களைக் கண்டுபிடித்திருந்தால் நாம் பாராட்டலாம். வெற்றுக் கணித தேற்றங்களைக் கண்டுபிடித்தவருக்கு ஏன் இந்த டாம்பீகப் பெருமை?
படம் வந்தது போனது தெரியாமல் இருக்கும்.