காதல் சொல்ல மெனக்கெடுறது தான் தமிழ் சினிமாவின் பிரச்சனையா? இயக்குனர் மகேந்திரன்


தமிழ் சினிமாவில் படத்தின் இடைவேளை வரை காதலியை துரத்துவது தான் ஹீரோவின் வேலையே. சினிமால நல்ல,கெட்ட சினிமா இருக்கா?... ஆமா இருக்கு. காதாநாயகன் அப்பாவோடு சேர்ந்து தண்ணியடிப்பது,ரத்தம் சொட்ட... சொட்ட பைட், ஆபாச நடனங்கள், இப்படி இருந்தால் அது கெட்ட சினிமா. மக்கள் பிரச்சனைகள், யாதார்த்தமான வாழ்க்கையை ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் சொல்வது நல்ல சினிமா.
இயக்கனர் மகேந்தின் தற்போதைய தலைமுறைக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
இவரின் முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்த நடித்த நடிப்பை தொடர்ந்திருந்தால் இந்தியாவின் சிறந்த நடிகர்களுள் ரஜினி இருப்பார்( தற்போது வசூல் நாயகன் தான் ரஜினி)ஜானி, உதிரிப்பூக்கள்,நெஞ்சத்தை கிள்ளாதே என 13 படங்கள் மட்டுமே இயக்கியவர். இவரின் படங்களுக்கு பிறகு தமிழ்சினிமா கொஞ்சம் நல்ல பாதையில் பயணிக்க தொடங்கியது. இத்தனைக்கும் சினிமா இயக்குவதை முறையாக கற்றவரல்ல மகேந்திரன்.அவரின் படங்களை பார்த்தவர்கள் கதைகளை கையாண்ட விதம் குறித்து இன்றும் பேசுகிறார்கள். நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும்? தமிழ்சினிமா மாறியிருக்கிறதா?... என்ற கேள்விகளுக்கு நான் படித்த மகேந்திரனின் பதில் தகவல்களிலிருந்து ....

தமிழ் சினிமா எப்படி இருக்கிறது?...
                         
                         
இந்தியாவுல எவ்வளவு ஊழல் நடக்குது.நிலக்கரி ஊழல், ஹலிகாப்டர் ஊழல்,மின்வெட்டுனு நாட்டுல எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் அது எதையும் கண்டுக்காம காதலை மட்டுமே படமா எடுத்துதள்றோம்.வெளிநாட்டு மக்கள் இந்திய சினிமாக்களைப் பார்த்துட்டு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு  பிரச்சனை இருக்கு ... உங்க நாட்டுல ஐ லவ் யூ சொல்றது மட்டும் தான் சார் பிரச்சனையா இருக்குனு கேலி பேசும் அளவுக்குதான் தமிழ்சினிமாக்கள் இருக்கு. காதல் சொல்ல மெனக்கெடுறது தான் சினிமாவா? லாஜிக் இல்லாத ஆக்ஷனும் டூயட்டும் எங்கேயும் ரீச் ஆகாது.

எது நல்ல சினிமா?

                      வழக்கமான பாதையில் இருந்து கொஞ்சம் விலகினாலே அது நல்ல சினிமா தான். நல்ல சினிமாவுக்கு பெரிய பட்ஜெட்,பெரிய ஆர்ட்டிஸ்ட் தேவை இல்லை. மனசு தான் தேவை. ஊதாரணம் சொல்லி விளக்கும் அளவுக்கு கூட இங்கே சூழல் இல்லை. பல மராட்டிய,ஈரானிய ,கொரியன் படங்கள் தென்னிந்திய ரசிகர்களின் பார்வைக்கே  வர்றதேயில்லை. மல்டிஃபிளெக்ஸ் தியோட்டர்களில் தமிழ்,மலையாளம், தெலுங்கு, இந்தி,ஹாலிவுட் படங்களை மட்டும்தான் திரையிடுறாங்க.டி.வி.,டி.வி.டி ,திரைப்பட விழாக்கள்ளுனு எங்கேயும் யதார்த்த படங்களை பார்க்கும் வாய்ப்பில்லாத  சமான்ய ரசிகனுக்கு நாம் காட்டுவதுதான் சினிமா. பாட்டு,டான்ஸ்,ஃபைட் இருக்கும் மசாலா படம் பார்த்துட்டு இதுக்கு மேல் சினிமானு ஒண்ணும் கிடையாதுனு நிணைப்பாங்க. இப்படி ஒரே மாதரியான படங்கள் வர்றதாலை மக்கள் அதைதான் விரும்புராங்கனு ஒரு கருத்து பிம்பம் உருவாகும்.

ஆனா உண்மை என்ன? கேரளாவுல கமர்ஷியல் படங்களுக்கு நடுவில் பரீட்சார்த்த முயற்சிகளிலும் ஈடுபடுறாங்க. அதுக்கு முக்கிய காரணம் அங்கே தரமான இலக்கிய ரசனையின் மேல் சினிமா கட்டமைக்கப்பட்டு இருக்கு.மக்கள் மனநிலையை ஆரோக்கியமான திசைகளை நோக்கி மோல்டு பண்ற கலை தான் சினிமா. சும்மா ரசிகர்களுக்குப் பிடிக்கம்னு தியோட்டரில் அரட்டை அரங்கம் நடத்தக் கூடாது.

மகேந்திரனின் கருத்து படி உண்மையில் தமிழ்சினிமா மோசமாக இருக்கிறதா? நல்ல சினிமாவுக்கு  அவர் சொல்லும்  விளக்கம் சரிதானா? சத்யராஜ் நடிக்கும் படம் ஒன்றை 35 ஆண்டுகளுக்கு பிறகு இயக்க உள்ளார் மகேந்திரன். அவர் படம் நல்ல சினிமாவாக இருக்குமா என பார்ப்போம்?
- செல்வன்     


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
Thanks for sharing such a nice thinking, piece of writing is nice, thats why i have read it fully

my web page: custom squeeze page