மனம் விட்டு சிரிக்க தெரியுமா உங்களுக்கு?....


இதுக்கெல்லாம் டிரைனிங்கா போகமுடியும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நம்மில் எல்லோருமே மனம் விட்டு சிரிப்பதில்லை. சிலருக்கு உதடுகள் மட்டும் லோசாக பிரியும், சிலர் கொஞ்சம் பல்லை காட்டுவார்கள். மனம் விட்டு சிரிப்பது என்பது அபூர்வமானது தான். மனம் விட்ட சிரிக்காதவர்களுக்கு மன இறுக்கம் ஏற்பட்டு  மரணம் கொடுரமானதாக இருக்கும். தினசரி செய்திகளில் தற்போது அடிக்கடி நாம் படிக்கிற செய்தி வாலிபர் தற்கொலை, இளம் பெண் தூக்கு போட்டு தற்கொலை போன்ற செய்திகள் அதிகரிக்து  வருகின்றன. இதெற்கெல்லாம் காரணம்  வாழ்க்கையை எதிர்கொள்ளும் பயம், அதனால் ஏற்படுகிற மன இறுக்கம் மரணத்தில் கொண்டு போய்விடுகிறது.விண்ணை முட்டும் அளவிற்கு விஞ்ஞானம் உயர்ந்து நிற்கும் இந்த காலகட்டத்தில் மன இறுக்கம் என்பது அனைத்து வயதினரிடமும் காணப்படுகிறது.
கொஞ்சம் முயற்சித்தால் மன இறுக்கத்தை எளிதாக சரி செய்யலாம். இதோ சில வழிகள்....

1.சத்தான உணவு
வழக்கத்திற்குமாறாக சத்தான இயற்கை உணவு வகைகளை சாப்பிடும் போது மூளை எப்போதும் சுறுசுறுப்பான நிலையில் இயங்குவதால் மன இறுக்கம் மாயமாகிவிடும்.

2.நல்ல தூக்கம்
அமைதியான தூக்கம் அனைத்து மனிதர்களுக்கும் அவசியம். பகலில் செய்யும் வேலைகளினால் களைப்புறும் உடல் உறுப்புகள் உறக்கத்தில் மட்டுமே ரீப்ரெஷ் ஆவதால் மன இறுக்க பாதிப்பு வராது.

3.நடைப்பயிற்சி
தினமும் காலை எழுந்தவுடனோ அல்லது அந்தி மயங்கும் மாலை நேரத்திலோ மெல்லோட்டம் செய்ய வேண்டியது அவசியம். இல்லாவிட்டால் கைகால்களை வீசி விரைவாக நடக்கலாம். இது உடல் இறுக்கத்தை பெருமளவு தளர்த்தும் மனம் உற்சாகம் பெறும். நடைப்பயிற்சி தொடர்ந்து மேற்கொண்டால் வயதாதனவர்கள் க்ஊட சுறுசுறுப்புடன் உற்சாகமாக வேலை செய்வது திண்ணம்.

4.ஓய்வு
பணியிடையே அவ்வப்போது ஓய்வெடுத்தல் அவசியம். ஓய்வெடுத்தல் என்பது கண்களை மூடி நன்றாக மூச்சை ஆழ்ந்து இழுத்து சற்று நிறுத்தி மெதுவாக விடவேண்டும். கடினமான வேலைகளை செய்வோரின் சுவாசம் ஆழ்ந்து இல்லாமல் மேம்போக்காக இருக்கும். அதனால் மூளைக்கு பிராணவாயு செல்லாமல் தலைவலி உடல் சோர்வு ஏற்பட்டு மன இறுக்கம் ஆரம்பமாகும். எனவே ஒரு மணி நேர கடின வேலைக்கு 5 நிமிட ஓய்வு அவசியமாகும்.

5.சிரிப்பு
மனம் விட்டு வாய்விட்டு சிரியுங்கள். சிரிக்கும் போது மனதில் எ ந்த வித சிந்தனைகளும் இருக்கக்கூடாது. சிரிப்பின்போது நன்றாக முழுமையாக ரசித்து சிரிக்க வேண்டும். பாதியில் சிரிப்பை பட்டென்று நிறுத்தினால் பல்வேறு விளைவுகள் ஏற்படும். எனவே எக்காரணம் கொண்டும் சிரிப்பை பாதியில் நிறுத்தாதீர்கள். வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டுப்போகும் என்பது ஆன்றோர் வாக்கு.

6.மனம் விட்ட பேச்சு

உஙஅகள் நம்பிக்கைக்குரியவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள் எல்லோரிடமும், எல்லாநேரத்திலும் தெரிந்த எல்லாவற்றையும் குறித்து  பேசிக்கொண்டிருக்க வேண்டாம். மாரிடம் பேசினால் ஆத்மதிருப்தி கிடைக்கிறதோ அவர்களிடம் மனம் விட்டு பேசுங்கள். அவர்களின் வார்த்தையே மன இறுக்கத்திற்கு அருமருந்தாகும்.

7.மாற்றமுடியாததை ஏற்கும் மனப்பக்குவம்
இந்த உலகத்தில் ஒருவரே எல்லாவற்றையும் தன் வாழ்நாளில் ஒழுங்கு படுத்தமுடியாது. அது தேவையில்லாதது. மலையை தலையால் முட்டி உடைக்கமுடியாது. ஆனால் சிறிய பாறைகளை பெயர்த்து எடுக்கமுடியும். சமூகத்தில் உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளை செய்து மற்றவர்களையும் உத்வேகப்படுத்துதல் அவசியம். எனவே மாற்றமுடியாதவற்றை ஏற்றுக்கொள்ளும் மனபக்குவம் வேண்டும்.

8.தெளிவான செயல்பாடு
எந்த ஒரு வேளையைச் செய்தாலும் முழுமையான ஈடுபாட்டுடன் செய்யவேண்டும். வேண்டா வெறுப்பாக ஒரு வேலையை செய்வதை விட அதை செய்யாமல் இருப்பதே மேல்.

9.விளையாட்டு
உங்கள் கால அட்டவணையில் விளையாட்டிற்கு நேரம் ஒதுக்குங்கள்.விளையாட்டு என்பது உடலுக்கு மட்டும் அல்ல மனதிற்கும் புத்துணர்வு தரும்.

10.பிறர் மீது கவனம்
உங்கள் விருப்பங்களையும் தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக்கொண்டிருக்காதீர்கள். அது மன உளைச்சலில் கொண்டு போய் விட்டு விடும். நமது விருப்பு வெறுப்புகளுக்கு எல்லை ஏதும் கிடையாது. உங்களை சுற்றியிருப்பவர்களை கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால் தயங்காமல் செய்து மன அமைதி பெறுங்கள்.

11.தனிமை தவிர்

மன இறுக்கம் ஏற்படும் சமயங்களில் தனிமையான சூழ்நிலையில் இருத்தல் வேண்டாம். அது பல்வேறு தவறான சிந்தனைகளை தூண்டி தவறான பாதைக்கு அழைத்து சென்று விடும். தனிமையை தவிர்ப்பது மிக மிக அவசியம்.

12. போதைப் பொருட்கள் வேண்டாம்:
மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அதற்கு மாற்றாக மது மற்றும் பல்வேறு போதை பழக்கத்திற்கு அடிமையாகி மீள முடியாமல் தவிக்கின்றனர். மன இறுக்கத்திற்கு போதை பழக்கம் ஒருபோதும் மாற்றாக அமையாது. எனவே இவற்றை பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.

13. இறை வழிபாடு:
தியானத்தின் வழியாக நாம் மனதை அமைதியடைய செய்யலாம். குழப்பம் மன உளைச்சலில் இருந்து நம்மை வெளிக்கொணர இறை வழிபாடு பெரிதும் உதவும். அதிகாலையில் எழுந்து இறை வழிபாட்டுடன் அன்றைய நாளை துவங்கினால் நடப்பது எல்லாம் நல்லதாக அமையும். மன இறுக்கத்தை போக்கி ரம்மியமாக வாழுங்கள்.

செல்வராஜ்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஒவ்வொன்றையும் பற்றிய விளக்கம் அருமை...

இது போல் மேலும் தொடர வாழ்த்துக்கள்...
Er.Rajkumar P.P said…
உண்மையான வரிகள்.இவற்றில் சில்வற்றை நான் பின்பற்றி வெற்றியடைந்துள்ளேன்.அனைவர்க்கும் பகிர்ந்ததற்கு நன்றிகள்.