இயக்குனர் வசந்தபாலனை மாற்றிய எதிர் வீடு


4 பாட்டு, 4பைட் காதாநாயகன்,வில்லன்,கவர்ச்சி நாயகிகள், குத்துபாட்டு என்ற பாதையில் பயணித்துக்கொண்டிருந்த தமிழ்சினிமாவில் பாலுமகேந்திரா, மகேந்திரன், போன்றவர்களுக்கு பிறகு சினிமாவின் முகத்தை மாற்றுகிற  பாலா, வசந்தபாலன், சிம்புத்தேவன்,பாலாஜி சக்திவேல்  இவர்களில் வசந்தபாலனுக்கு என்று தனியான பாதை உண்டு. அவரின் ''அங்காடித்தெரு'' படம் வெளிவந்த பிறகு சென்னையின் மிகப்பெரும் வியாபார பகுதியான ரங்கநாதன் தெரு தொழிலாளர்களின் பிரச்சனைகள்,வேதனைகள், வெளிச்சத்திற்கு வந்தன. அங்குமட்டுமல்ல தமிழகமுழுவதும் உள்ள வணிக நிறுவனங்கள் சோதனைக்குட்படுத்தபட்டன.வரலாற்று படம் என்றால் ராஜாகளே கதைநாயகர்கள் என்ற நிலையை மாற்றி ஒரு அடிமை குழுவின் வாழ்க்கை முறையை ''அரவான்'' முழமாக வெளிகொண்டுவந்தவர் வசந்தபாலன். எப்படி வசந்தபாலன் படைப்புகள் மாறுபட்டு வெளிப்படுகிறது... வசந்தபாலனே சொல்கிறார் என்னை மாற்றியது எதிர் வீடு தான் என்கிறார். எதிர் வீட்டில் என்னதான் இருந்தது..
 கோவையில் செயல்பட்டு வரும் அம்பேத்கார் கல்வி மைய மாணவ,மாணவிகளோடு பேசுகையில் ....

எனது வாழ்க்கைப் பயணம் மாறியதற்கு எதிர் வீடுதான் கார ணம். எங்கள் வீட்டில் ஏராளமான சாமிப்படங்கள் மாட்டப்பட்டிருக் கும். எப்போதும் அதற்கு பூ, ஊது பத்தி என்று வைத்துக் கொண்டே யிருப்பார்கள். எங்கள் எதிர் வீட் டிற்கு அடிக்கடி செல்வேன். அங் கும் ஏராளமான படங்கள் மாட்டப் பட்டிருக்கும். அந்த வீட்டில் குடி யிருந்தவர் தோழர் சீனிவாசன். அவரிடம் இந்தப் படங்களில் உள் ளவர்கள் யார் என்று கேட்பேன். அவர்தான் ஒவ்வொன்றாகக் காட்டி, இது மார்க்ஸ், இது லெனின், இது பகத்சிங் என்று சுட்டிக்காட்டு வார். அந்தப்படங்களுக்கு ஊது பத்தி, பூவெல்லாம் கிடையாது. இந்தப்படங்கள்தான் எனது பாதையை மாற்றும் படங்களாக அமைந்தன. இவர்கள் கம்யூனிஸ்டுகள் என்று தோழர் சீனிவாசன் கூறி னார்.


கம்யூனிசம் என்றால் என்ன என்று நான் கேட்டேன். எல்லா ரும் சமம் என்று கூறினார். அப் படி ஒரு சமூகமா என்று நான் ஈர்க் கப்பட்டேன். இதுதான் என்னை மாற்றிய நிகழ்வு. இல்லையென் றால், நானும் வங்கியிலோ அல்லது அரசு ஊழியராகவோ இருந்திருக் கலாம். அல்லது எனக்கு ஒரு பல சரக்குக்கடையை என்னுடைய அப்பா வைத்துக் கொடுத்திருப் பார். வசந்தபாலனாக மாறியிருக்க மாட்டேன் என்றார் .
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்