பாலா மனிததன்மைகளுக்கு அப்பாற்பட்டவர் என்கிறார் எழுத்தாளர் அ.மார்க்ஸ். நிஜவாழ்க்கையில் பாலா எப்படியோ தெரியாது அவரது சினிமா அவரை அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது.சேது படத்தில் விக்ரமை பயித்தியகாரனாக மாற்றினார், நான்கடவுள் படத்தில் ஆர்யாவை கஞ்சா அடிக்கும் சாமியாக மாற்றினார், இவை மட்டுமல்ல அவரது எல்லாபடங்களிலும் ஒரு கதாபாத்திரம் மனரீதியாக தாக்கத்தை எற்படுத்தும் விதமாகவே உள்ளன. அவரே சொல்லுவதை போல சினிமாவுக்கு வரவிட்டால் நான் செத்திருப்பேன்,.... என்கிறார் அப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்திருகிறார். நடிப்பு சரியாக வராத நடிகர்களை கம்பால் அடிக்கிறார் பாலா என்கிறார்கள். இல்லை அது சினிமாவுக்கு பயன்படுத்தும் போலி கம்பு என்கிறார்கள். எது உண்மையோ...பாலா. சரி பரதேசி கதைக்கு வருவேம்....
நடிப்பு... நடிப்பு எப்படி?
இந்த படத்தின் கதாநாயகன் அதர்வாவை பற்றி சொல்லவேண்டுமானால் .... ஊர் கோடங்கியாக வரும் அதர்வா, முதல் பாதி முழுவதும் விளையாட்டு, சண்டை, காதல் என தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். கண் அசைவில் இருந்து நடை, உடை, பாவனை என அனைத்திலும் அருமையாக செய்திருக்கிறார்.
வேதிகா இப்படத்தின் முதல்பாதியில் நடிப்பு யுத்தமே நடத்தியுள்ளார்.
தன்னுடைய முகத்தை மட்டுமல்லாமல், கை, நகம் என அனைத்தையும் கருப்பாக்கி, உடல் அமைப்பையே மாற்றி வாழ்ந்துள்ளார். கிளைமாக்சில் இவருடைய நடிப்பு உறைய வைக்கிறது.அதர்வாவை சற்றே பின்னுக்குத் தள்ளியிருக்கிறது ‘அரவான்’ புகழ் தன்சிகாவின் நடிப்பு நம் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. இப்படி நடிகர்களிடம் இருந்து நடிப்பை வெளிகொண்டுவர பாலாவால்தான் முடியும்.
கதை என்ன?...
1930 ம் ஆண்டு காலாத்துக் கதை என்கிறார்கள்.படத்தில் உடைகள், பேச்சு,பின்புலம் போன்வவற்றை எதார்தமாக கொண்டுவர ரெம்பவே முயற்சித்திருக்கிறார்கள். எழுத்தாளர் நாஞ்சில் நாடன் மொழிபெயர்ப்பு செய்த ‘எரியும் தணல்’ நாவலின் தழுவலே இந்த பரதேசி. பழைய கதையாக இருந்தாலும் போராடிக்காமல் போகிறது படம்.
அதர்வா, உருப்படியாக எந்த வேலையும் செய்யாமல், தெருதெருவாக சென்று கொட்டடித்து சேதி சொல்லி, பிச்சை எடுத்து வாழ்க்கை நடத்தி வருகிறார். அப்பா, அம்மாவை இழந்த அதர்வாவுக்கு பாட்டி மட்டுமே துணையாக இருக்கிறார். அந்த ஊரிலேயே வசிக்கும் வேதிகா மீது அதர்வா காதல் வயப்பட்டு, இந்த காதல் ஊடலாகவும் மாறுகிறது.
அதை ஏற்றுக்கொள்ளும் கிராம மக்களிடம், கங்காணி வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு, முன்பணத்தையும் கொடுத்து தேயிலைத் தோட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார்.
இந்நிலையில், ஊரில் அதர்வாவுடன் நெருங்கிப் பழகிய வேதிகா கற்பம் அடைகிறாள். இதுதெரிந்து, அவளது வீட்டில் பிரச்சினைவர அவளை வீட்டைவிட்டு வெளியேற்றுகின்றனர். இதனால், அதர்வாவின் பாட்டி வேதிகாவுக்கு அடைக்கலம் தந்து, தனது வீட்டிலேயே தங்க வைக்கிறாள்.
தேயிலை தோட்டத்தில் கணவனால் கைவிடப்பட்டு, 2 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழும் தன்சிகாவை சந்திக்கிறார் அதர்வா. ஆதரவற்று இருக்கும் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் அதர்வா.
வேதிகா கற்பமான விஷயம் பாட்டி அனுப்பும் கடிதம் மூலம் அதர்வாவிற்கு தெரிய வருகிறது. எனவே, வேதிகாவைப் பார்க்கத் துடிக்கும் அதர்வா, விடுமுறையில் ஊருக்கு சென்றுவர நினைக்கிறான். ஆனால், விடுமுறை கொடுக்கமுடியாது. மேலும் சில ஆண்டுகள் நீங்கள் இங்கு பணிபுரிய வேண்டும் என சம்பளத்தை பிடித்துக் கொண்டு ஊர் மக்களை ஏமாற்றுகிறார் கங்காணி.
இதனால் ஏமாற்றமடைந்த அதர்வா, தேயிலைத் தோட்டத்திலிருந்து தப்பித்து செல்ல முடிவெடுக்கிறார். ஒருமுறை தப்பித்துச் செல்லும்போது, கங்காணியின் ஆட்கள் அதர்வாவை பிடித்து, கால் நரம்பை துண்டித்துவிடுகிறார்கள்.மேலும் தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் நிறைய பேருக்கு விஷ காய்ச்சல் வந்து இறந்து போகிறார்கள். இந்த விஷக்காய்ச்சலுக்கு தன்ஷிகாவும் பலியாகிறாள்.இவற்றையெல்லாம் தாண்டி
அதர்வா, வேதிகாவை சந்தித்தாரா? தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை விடுவித்தார்களா? என்பதே மீதிக்கதை.
ஜி.வி.பிரகாஷ் இசையில் வைரமுத்துவின் அனைத்துப் பாடல்களும் ஏற்கெனவே ஹிட்டாகியுள்ளன. அவற்றை படத்தில் காட்சியப்படுத்திய விதத்தைப் பார்க்கும்போது மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.‘பரதேசி’ பயபுள்ள விருதுகள் பல குவிப்பான்.
கடைசியா பாலாகிட்ட கேட்கவேண்டிய கேள்வி என்னோட கனவுகன்னிகளான தன்சிகா,வேதிகாவை ஏன் அசிங்கமா காட்டுனீங்க?...
- செல்வன்
Comments
எனது விமர்சனம் கீழே
சமயம் இருந்தால் பார்க்கவும் நண்பரே.
http://dohatalkies.blogspot.com/2013/03/blog-post.html