இயக்குனர் கௌதம்மேனனை கண்ணீர்விட்டு அழச்செய்த படம்


நம்மை போன்ற சினிமா ரசிகர்கள் படக்காட்சிகளில் ஒன்றிப்போய் கண்ணீர்விட்டு அழுவது எப்போதாவது நிகழ்கிற சம்பவம்.  நீண்ட நாட்களுக்கு பிறகு ''பரதேசி'' படத்தில் இடைவேளைக்கு பிறகான காட்சிகள் கண்ணீரை வரவழைத்தன. ஆனால் ஒரு இயக்குனர் மற்றொரு இயக்குனரின் சினிமாவை பார்த்து அழுவதென்பது ஆச்சரியமானதுதான்... நடிப்புதான் என்பது நமக்கும் தெரியும்,.. இயக்குனர்கள் அந்த நடிப்பை கொண்டு வருவதே அவர்கள் தானே. அவர்களின் மனதையே நெகிழச்செய்கிற படம் விரைவில் வெளிவரவுள்ள  தங்கமீன்கள்.

               இயக்குனர் ''கற்றது தமிழ்'' ராம் இயக்கி நடித்திருக்கிறார். கற்றது தமிழ் படம் பார்த்திருக்கீர்களா?.. நடிகர் ஜீவா, நடிகை அஞ்சலியும் நடித்தபடம் தமிழ்மொழி வழியாக படித்தவர்களின் நிலை என்ன? என்பதை சொன்ன படம். படம் பெரிதாக வியாபாரரீதியாக வெற்றியடைவில்லை என்றாலும் கதையின் மையகரு பேசப்பட்டது. தங்கமீன்கள் படத்தில் இயக்குனர் ராமுடன், சதனா என்ற சிறுமி மகளாகவும், ரோகினி,சிறப்பு தோற்றத்தில் பத்மபிரியாவும் நடித்துள்ளனர். படத்தின் ஒன்லைன் ஸ்டோரி என்னவென்றால் ''தாய்பாசத்திற்கு சற்றும் குறைவில்லாதது தந்தை பாசம்'' என்பதுதான் ( ஒன்லைன் ஸ்டோரி என்பது என்ன? படிக்க இங்கே கிளிக்)

தங்க மீன்கள் டிரைலர்


கௌதம் வாசுதேவ் மேனனின்  போட்டான்கதாஸ் நிறுவனம் தயாரிக்கிறது.இந்த படத்தின் கதையை ராம் சொன்னபோதே மனதை நெகிழச்செய்யும் விதமாக இருந்தாக கௌதம் கூறியுள்ளார். இந்த படத்தின் முதல் காப்பி பார்த்த கௌதம்,... பெண் குழந்தைகள் வைத்துள்ள அப்பாக்கள் பார்கக வேண்டியபடம். இறந்த பின்பும் அப்பாக்கள் கதாநாயகனாக வாழ்வது மகள்களின் மனதில் மட்டும் தான் என்கிறார்.


 தங்க மீன்கள் படத்தொகுப்பு


இயக்குனர் ராம்,... ''முத்தம் காமத்தில் சேர்ந்தில்லை'' என்பது மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டுமேதெரியும் என்கிறார். கௌதம்வாசுதேவ் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார பிரச்சனை காரணமாக மூன்று ஆண்டுகளாக தாயாரிப்பில் இருக்கும் படம்.யுவான்சங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார்.
இசைமட்டுமல்ல ஒரு பாடலுக்கு நடித்தும் கொடுத்துள்ளாராம்,குழந்தைகள் கீதம் என்ற பாடல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் இசையால் கட்டுப்போட்டுவிடும் என்கிறார்கள். இந்த படத்தை பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா,  ராம் என்னுடைய மகன்களில் ஒருவர், அவருடைய படம் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம், படத்தில் கவித்துவமும் அற்புதமான தமிழும் இருக்குமென கூறியுள்ளார். இந்த படத்தின் டிரைலரே மனதை நெகிழச்செய்யும் விதமாக இருக்கிறது,மகள்களை பெற்ற அப்பாக்கள் படம் பார்க்க தயாராக இருங்கள். கௌதம் பல முறை கண்ணீர் விட்டதாக தகவல் நமக்கும் கண்ணீர் வருகிறதா என பார்க்கலாம்?.

  -செல்வன்                                             

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்