விஸ்வரூபம் இன்று இந்தியா முழுவதும் உச்சரிக்கப்படும் ஒரு சினிமா.கமல் படம் என்றால் அவரது ரசிகர்கள், அவர் ம¦து பிரியம் கொண்டவர்கள் என தியோட்டரில் 25 நாட்கள் ஓடும்.கமல் படங்களில் வரும் கதை சொல்லும் விதம் சிலருக்கு பிடிக்காது, சிலருக்கு புரியாது. இது தான் நிலைமை. ஆனால் விஸ்வரூபம் படத்தை பொருத்தவரை கமலுக்கு ஏற்படுத்தபட்ட தடைகளை வளர்ச்சி படிக்கட்டுகளாக மாற்றியிருக்கிறார் கமல். விஸ்வரூபத்திற்கு ஏற்படுத்தபட்ட தடை சில பின் விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது...
1.இந்திய அளவிலான சினிமா தணிக்கை சட்டத்தை மறுபரிசிலனை செய்யவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியுள்ளது.
2. கருத்துரிமையை முடக்க நினைக்கிற அதிகார மையங்களுக்கு எதிராக ஊடகங்களும், சினிமாதுறையினரும், அறிவுஜீவிகளும் பேச துவங்கியிருக்கிறார்கள்.
3. நோபால்பரிசு பெற்ற அறிஞர் அமர்தியாசென் சொன்னதைப் போல இஸ்லாமி அமைப்புகளும் இஸ்லாமியர்களும் முதிர்ந்த சிந்தனையை அடையவில்லை. இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடக்கிற பிரச்சனைகளை விட்டு விட்டு சினிமா தடை செய்வதில் ஆர்வம் காட்டுகிறார்களே என்ற உண்மையை புரிந்துகொள்ளாம்.
4.தமிழகத்தை பொருத்தவரையில் இனி ஒவ்வொரு படமும் இரண்டாவது முறை தணிக்கை செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆதிபகவன், கடல் திரைப்படம் தற்போது பிரச்சனைக்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.
5. தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் என்பது அப்போதைய ஆளும் கட்சியின் கைபாவையாகவே செயல்படும் என்பதை தெரிந்து புரியவைத்தது. நடிகர்சங்க தலைவர் சரத்குமார் ,கமலுக்கு ஆதரவாக வாய் திறக்கவேயில்லை.
6.கமலை பொறுத்தவரை தன் பலம் என்ன?, தன்னை ஆதரி¢ப்பவர்கள் யார்?யார்? என்பதை தெரிந்து கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
7.உலகநாயகன் என்று அன்பாக அழைக்கப்பட்ட கமல்,உண்மையில் அந்த பெயருக்கான தகுதியை பெற இந்த படம் உதவியுள்ளது.
8.டி.டி.எச் மூலமாக சினிமா உலகத்திற்கு புதிய வியாபார பாதையை துவக்கி வைத்துள்ளார்.
9.அரசியில்வாதிகள் தங்களின் தனிப்பட்ட விருப்பு,வெறுப்புகளுக்காக எப்படியெல்லாம் பிரச்சனைகளை உருவாக்குவார்கள் என்பதை விஸ்வரூம் காட்டியது
10.சினிமா உலக வரலாற்றில் விஸ்ரூபம், கமல்,படம் எடுக்கப்பட்ட விதம், தடைகள்,அரசியல் பின்னனி என அனைத்தும் சரித்திரம் படைக்கும். ஆக மொத்தமாக விஸ்வரூபம் படம் கமல் என்னும் கலைஞனை அனைத்துவகைகளிலும் விஸ்வரூபம் எடுக்க வைத்துள்ளது.
செல்வன்
Comments
அமெரிக்கனாக இரு, அமெரிக்காவை நேசி’ என்று தன்னை அமெரிக்க அடிமையாக அடையாளப்படுத்தியிருக்கிறார்.
ஆஸ்கர் விருதுக்காக எதையும் செய்ய துடிக்கும் தமிழ் நாயகன்
‘கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’; அமெரிக்க சார்பு இஸ்லாமிய எதிர்ப்பு படம்தான், மாற்று கருத்து எழ யாருக்கும் வாய்ப்பு இல்லை
தமிழக சினிமா ரசிகர்கள் அதிகம் எதிர்ப்பார்த்து எமரா போவது நிச்சயம்
அவ்வளவு அபத்தத்தை 90 கோடி செலவில் கொட்டி இறைத்துள்ளார். பாவம் அமெரிக்க முதலாளிகள் ஏமாந்து போவர்கள்