கொலைகள், வன்முறை மிகுந்த நகரம் என்ற பார்வை மதுரை பற்றி இருக்கிறது. உண்மைதான்... அரசியல் கொலைகள், சாதிய கலவரங்கள், அதிமான நகரம் தான் ... சங்கம் வைத்து தமிழ் வளர்த்த நகரம். 2000 ஆண்டுகள் எழுதப்பட்ட வரலாறு உள்ள நகரம் மதுரை. சிலப்பதிகாரம், மதுரைகாஞ்சி போன்ற 2000 ஆண்டுகளுக்கு முந்தைய இலக்கிய படைப்புகளில் இன்று இருப்பது போலவே அன்றும் வியாபாரம், அரசியில் போன்றவற்றி¤ல் முக்கிய நகரமாக இலக்கியங்கள் பேசுகின்றன.
இன்று மிகப்பெரிய கிராமமாகவே மதுரை மாநகரம் உள்ளது. கிராமிய பழக்கவழங்கள், தமிழின் ஆதி விளையாட்டான ஜல்லிகட்டு, கலாச்சாரம் போன்றவற்றை நடைமுறை படுத்துகிற நகரம்.இலக்கியங்களில் பேசப்படும் எத்தனையோ நகரங்கள் அழிந்து போனாலும் மதுரை இன்றும் உயிர்புடன் இயங்கி வருகிறது..
பிப்.7ம் தேதி 2300 ஆண்டுகள் பழமையான கல்வெட்ட உள்ள மதுரை, அழகர்கோயில் அருகேயுள்ள கிடாரிப்பட்டியில் இருந்து விழா தீபம்எடுத்துவரப்படுகிறது. அத் தீபத்திற்கு மீனாட்சியம்மன் கோயில், கோரிப்பாளையம் பள்ளிவாசல், செயின்மேரிஸ் சர்ச் அகிய இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிது. இத்தீபம் பிபி.8ல் தமுக்கம் மைதானத்தில் ஏற்ப்பட்டு மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சி துவங்குகிறது.மதுரையின் பழமையான கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
முன்றாவது நாளான பிப்.10 வைகையை போற்றுவோம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. மாலை 6மணி முதல் 7 மணிவரை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி அதனை தொடர்ந்து வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. இரவு 9 மணிக்கு தமுக்கம் மைதாத்தில் உள்ள தீபம் தெப்பகுளத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு அணைக்கும் நிகழ்ச்சி நடத்தபடும்
ஆக பிப். 8 ஒரு மினி சித்திரை திருவிழா .... மதுரையை போற்ற வாங்க ..வாங்க..
செல்வன்
Comments