கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் facebook ல் - கமலஹாசன்சினிமாவையே தனது மூச்சாக நினைத்து வாழும் கமலுக்கு எற்பட்டுள்ள பிரச்சனை மிகுந்த வருத்தத்தையும்,வேதனையும் அளிக்கிறது. திரையுலகினரின் எந்த பிரச்சனைக்கும், சிறிய படவிழாக்கள்,இசைவெளியிடு போன்ற வற்றில் புதிய தலைமுறை நடிகர்களை உற்சாகபடுத்துகிற சினிமா ரசிகன் கமல்.
புதிய தொழில்நுட்பம்,புதுமையான கதை என தனக்கென பாதையில் செல்பவர். பணம் சம்பாதித்தால் போதும் என் நினைக்காத கலைரசிகன். அவர் செயல்பாடுகளில் விமர்சனம் இருக்கலாம் அனால் அதை காரணம் காட்டி அவரை முடக்க நினைப்பது தவறு. படம் வெளியாக இருந்த கடைசி நாளில் வழக்கு போடுவதும், அதை காரணம் காட்டி படத்தை நிறுத்தி வைப்பதும் என்ன விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை. அதிலும் சினிமா உலகம் வாய்மூடி மவுனமாக வேறு இருக்கிறது. இந்நிலையில்
விஸ்வரூபம் படம் விவகாரம் பற்றி நடிகர் கமல்ஹாசன் தனது பேஸ்புக் (முகநூல்) பக்கத்தில் ஒரு அறிக்கை வெளி யிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-விஸ்வரூபம் படத்துக்கும் எனக்கும் பலர் ஆதரவு தெரி வித்த நிலையில் திடீரென அந்தப் படம் என்னுடைய இஸ் லாமிய சகோதரர்களுக்கு எதிரானதாக உருவாக்கப்பட்ட தாகக் கருத்து வெளியிடப்பட்டுள்ளது. இது எனக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. இந்தப் படம் எந்த வகையில் முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எனக்குத் தெரிய வில்லை. ஒற்றுமைக்கான இந்தியா என்ற அமைப்பில் நான் உறுப்பினராக இருக்கிறேன். இந்த அமைப்பு இந்து-முஸ் லிம் ஒற்றுமைக்காக பாடுபட்டு வரும் அமைப்பாகும்.என் படத்துக்கு எதிரான தடையை சட்டப்படி சந்திப் பேன் அதற்கான உரிமை எனக்கு உள்ளது. யதார்த்தத்தை நம்பியே நான் களத்தில் நிற்கப்போகிறேன். இது போன்ற கலாச்சார தீவிரவாதம் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்