டூவிலர் பகுமானத்தை விட்டு சைக்கிள் ஓட்டலாமே....


இன்னும் நீங்க கார் வாங்கலயா?  என்ற கேள்விகள் வரத்தொடங்கி விட்டன. டூவிலர்,கார் வைத்திருப்பது தேவை என்ற நிலையில் மாறி கவுரவ பிரச்சனையாக மாறிவிட்டது. டூவிலர்,கார் என்பவை தமிழகத்தை பொறுத்தவரை ஒருவரின் கவுரவத்தை எடைபோடும் பொருள்..
ஆனால்உலகின் பல நகரங்கள் சிறு தூரப் போக்குவரத்திற்கு சைக்கிள்களுக்கு மாறத் தொடங்கியுள்ளன. இதனால் அந்த நகரங்களில் சாலையில் செல்வது எளிதாகியிருக்கிறது. சாலையில் செல்வ தில் உள்ள மகிழ்ச்சியையும் வசதியையும் மக்கள் மீண்டும் அடையத் தொடங்கியுள் ளனர். சாலை நெருக்கடியும் சுற்றுப்புறம் மாசுபடுவதும் குறைந்துள்ளது. சைக்கிள் களுக்குத் திரும்புவதென்பது கடந்த பத்தாண்டு காலத்தில் நடைபெற்றுள்ள உலக நகரங்களின் வரலாற்றில் அற்புதமான திருப்பம்.
ஆனால் இதெல்லாம் உலகின் பிற நாடுகளுக்குத்தான். இந்தியாவுக்கல்ல!

இந்த மறுமலர்ச்சியில் ஐரோப்பிய நக ரங்கள் முன்னணியில் உள்ளன. சீனா விலிருந்து அமெரிக்கா வரையிலான பல நாடுகள் போர்க்கால அவசரத்துடன் அவற்றைப் பின்தொடர்கின்றன. இந்திய நகரங்களோ சைக்கிள் பயண மீட்சியைத் தொடங்குவது பற்றிய எந்தத் திட்டமுமின்றி இருக்கின்றன. உலகின் பல நாடுகளில் அதன் வெற்றி கண்கூடாகத் தெரிந்த பிறகும் இந்திய நகரங்கள் அதைக் கண்டு கொள்வதாக இல்லை. இதன் பாதிப்பு நம் எல்லோருக்கும்தான்.

சைக்கிள் ஒன்றும் இந்தியாவுக்குப் புதிய வாகனம் அல்ல. மக்கள் பரவலாகப் பயன்படுத்தி வந்த வாகனம்தான். 1994 வரை நகரப் போக்குவரத்தில் 30 சதவீதம் சைக்கிள்கள் மூலமாகவேதான் இங்கே நடந்தது. இந்த நல்ல அம்சத்தை நகர முன்னேற்றத்திற்குப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பதிலாக, போக்குவரத்துக் கொள்கை வகுப்போர் மோட்டார் வாகனங் களை தனியார் உபயோகத்திற்குக் கொண்டுவருவதிலேயே முனைப்பாக இருந்தனர். விளைவு என்ன? சாலைகளி லிருந்து சைக்கிள்கள் விரட்டியடிக்கப்பட் டன. அவை மோட்டார் வாகனங்களின் ஏக போகமாக மாறின. 2008-க்குள் சைக் கிள் போக்குவரத்து 11 சதவீதமாக வீழ்ச்சி யடைந்தது.

ஐரோப்பிய நகரங்களும் சைக்கிள் களைப் புறக்கணித்து மோட்டார் வாகனங் களை நம்பி ஓடியவைதான். ஆனால் அவை சீக்கிரமாகவே விழித்துக் கொண் டன. பெட்ரோல்-டீசல் வாகனங்கள் எரி பொருள் பயன்பாட்டை அதிகரித்து, சாலை களை மூச்சுத்திணற வைத்தது, கார்பன் வெளியீடுகள் பெருகியது, சாலைகள் பயன்பாட்டில் அசமத்துவ நிலையைத் தோற்றுவித்தது ஆகிய அம்சங்களை அவை கணக்கில் எடுத்துக் கொண்டு, 1960-களிலேயே மீண்டும் சைக்கிள் களுக்குத் திரும்பத் தொடங்கி விட்டன. சைக்கிள்களுக்காக சாலைகளில் தனிப் பாதையை ஒதுக்கி பயணிகளின் பாது காப்பை வலுப்படுத்தியதோடு; ஒரு புதிய சைக்கிள் பயன்பாட்டுத் திட்டத்தை அறி முகப்படுத்தின. அதன்படி, சைக்கிளை வாடகைக்கு எடுத்த இடத்தில் கொண்டு போய்த் திருப்பிக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தாங்கள் சென்றடை யும் இடத்திற்குப் பக்கத்தில் உள்ள சைக்கிள் கொட்டடிகளில் விட்டால் போதும். இந்த வசதியின் காரணமாக சைக்கிளைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. கார் மோகம் அதிகமாக உள்ள அமெரிக்காவிலேயே 1977-க்கும் 2009-க்கும் இடையில் சைக்கிள் பயன்பாடு மும்மடங்கு அதிகரித் தது என்றால் மற்ற நாடுகளைப் பற்றிக் கூற வேண்டிய தில்லை. இந்தியப் பெரு நகரங்களில் மெல்ல நகரும் மோட்டார் வாகனங்களின் வேகத்தை விட சைக்கிள் களில் வேகமாகப் பயணித்துவிட முடியும். கார்பன் வெளியீடுகளில் 80 சதவீதம் நகரங்களிலிருந்து கிளம்பும் மாசுகளிலி ருந்துதான். சைக்கிள் உபயோகத்தை அதி கரிப்பது கார்பன் வெளியீடுகளைக் கணி சமாகக் குறைத்துவிடும். உதாரணமாக, பாரிஸ் நகரில் 312,000 கிலோமீட்டர் தூரத்தைக் கணக்கில் எடுத்துக் கொண் டதில் சைக்கிள் பயன்பாடு அதிகரித்ததன் காரணமாக ஒரு நாளைக்கு 57,720 கிலோ கிராம் கார்பன் வெளியீடு குறைந் திருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. காற்று மாசுபடுதல் குறைவது மக்களின் உடல்நலத்திற்கு நல்லது என்பதைச் சொல்ல வேண்டியதில்லை.

ஒரு காலத் தில் சைக்கிள்களின் சொர்க்கமாக இருந்த ஆசிய நகரங்கள், தற்போது மீண்டும் சைக்கிள் யுகத்திற்குத் திரும்பு வதில் வேகம் காட்டத் தொடங்கியுள்ளன. இந்தியாவில் 2011-இல் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் மிகக் கணிச மான மக்கள் இன்னமும் சைக்கிள் களைப் பயன்படுத்துகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. 2006 தேசிய நகரப் போக்குவரத்துக் கொள்கையும் 2010 பசுமை நகரங்கள் திட்டமும் மோட்டார் அல்லாத போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டும் என முடிவெடுத்த போதிலும் அதை அமல்படுத்துவதில் பெரிய முன் னேற்றம் இல்லை.

மத்திய-மாநில அரசுகளும் உள் ளாட்சி அமைப்புகளும் மன உறுதியுடன் இந்த மாற்றத்தைக் கொணர முயற்சிப்பது காலத்தின் கட்டாயம்.

-பேராசிரியர் கே. ராஜு

(உதவிய கட்டுரை : ‘தி இந்து’ நாளிதழில் திரு ஏ. ஸ்ரீவத்சன் எழுதியது).


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments