ராசிபலன் பார்பவர்களுக்கு மட்டும்....


காலை எழுந்ததும்  ராசிபலன் பார்த்துவிட்டு தான் வேலையை துவங்குபவரா நீங்கள்....,ராசிபலன் படிதான் எல்லாம் நடக்கிறதா? இல்லையா? ராசிபலனை நம்பலாமா? இந்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக வந்திருக்கிறது கதிர் நூல் தொகுப்பில் வந்துள்ள ஒரு கதை.சமூகம் குறித்து அக்கரைப்படுகிற இளைஞர்கள் குறைந்து வரும் காலம் இது. டாஸ்மாக் மயக்கத்தில் பொழுதை கரைக்கும் காலம். சுற்றுச்சூழல், சமூக அக்கறை, விவசாயம், மூடநம்பிக்கை, தமிழ்,தமிழர்கள் குறித்த புதிய தகவல்களுடன் 16 வேறுபட்ட தலைப்புகளில் கதிர் நூல் தொகுக்கப்பட்டுள்ளது. கடந்த தை முதல் தேதியில் தமிழர் திருநாளான்று வெளியிடப்பட்ட தொகுப்பு..
                     
   1.இளமைபொங்கல் ... 

சாதி,மதம் கடந்த பொங்கல் குறித்த தகவல்கள் விரவிக்கிடக்கிறது. தைபாத்திஹா என்ற பெயரில் இஸ்லாமியர்கள் கொண்டாடும் தை பொங்கல் இக்கட்டுரையில் புதிய தகவல் நன்றி ஷாஜகான்...

 
   2.தைதிருநாள் .... 

                   சாதிகளின் நாதியாகி
                   மதங்களின் பிம்பமாகி
                   அரசியலின் அங்கமாகி
                   திரையுலகே சொப்பணமாகி
                   திசைக்கொன்றாய்
                   திசைமாறும்......        தமிழர்களே தை திருநாளில் ஒன்று சேருங்கள் என்று அழைக்கிறார்கவிஞர் மே.இளஞ்செழியன்

    3. நாட்காட்டி ....

ராசிபலன் பாருங்கள், அதன் படியா தினசரி வாழ்க்கை நடக்கிறது... வாழ்ந்து பார்த்த அனுபவம் சிறுகதையாய் கொடுத்திருக்கிறார் படைப்பாளி ரகுநாத். போகி என்ற பெயரில் தமிழர்களின் வரலாறு தொடர்ந்து அழிக்கப்படுகிறது என்பது புதிய பார்வை ....
         
     4.வயலும் சாவும்... 

ஊரில் வெட்டிப்பயல்கள் முன்பெல்லாம் எல்.ஐ.சி பாலிசி பிடிக்கிறேன் என்பார்கள்..இப்போது யாரை கேட்டாலும் ரியல்எஸ்டேட் பிசினஸ் என்கிறார்கள். அழிக்கப்படும் விவசாயம், விலைபோகும் பாராம்பரிய சொத்துக்கள்... இது கவிதையாய்...
                     
                        ......
                       இறந்து போனது என்னவோ?
                      விவசாயத்தில் எங்க அய்யாவும்
                      ரியல் எஸ்டேட்டில் எங்க வயலும்..

                        பா.உதயக்குமாரின் இந்த கவிதை மனதை என்னவோ செய்யும்... இந்த கவிதை தனக்கான வேலையை சரியாக செய்ததாக சொல்லலாம் ஒரு கவிதை  படித்து முடித்த பிறகும் தாக்கத்தை எற்படுத்தினால் தான் அது கவிதை .
         
      முன்னேறவழி கூறுங்கள் -            
      கடந்து வந்த பள்ளி நாட்கள்        
      அப்படி என்னதான் செய்து விட்டோம்,  
      உங்களின் ஒருநாள் பிரணவாயு தேவை என்ன? 
      நெனப்பு வந்துச்சு அவனுக்கு   

        என தகவல்கள் கொட்டிகிடக்கிறது ...விமர்சன பூர்வமாக பார்த்தால் பிரச்சனைகளை மட்டுமே பேசம் படைப்புகள்... தீர்வுகளை நோக்கி நகரவில்லை. குறிப்பாக அரசியல் சார்ந்த தீர்வுகளை முன் வைக்கப்படவில்லை. சமூகத்தை விமர்சிப்பது மட்டும் படைப்பாளியின் கடமையல்ல தீர்வு சொல்வதும், அதை செயல்படுத்தும் களத்தில் நிறுப்பதும் ஒவ்வொரு படைப்பாளியின் இன்றைய தேவை. ஆனாலும் நிச்சயம் படிக்க வேண்டி தொகுப்பு .சித்திரவீதிகாரன் ஓவியமும் அட்டை படமும்  அழகுக்கு அழகு சேர்க்கிறது

நூல் தேவைக்கு...

கதிர்நூல்தொகுப்பு
மே.இளஞ்செழியன்
மின்னஞ்சல்: ilanchezhiyankathir@gmail.com
அலைபேசி:9790827398

-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments