ஆச்சரியம்... அதிர்ச்சி .... ஆனால் உண்மை. மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய சாதனை இதுவாகத்தான் இருக்கு முடியும். ஸ்டெம் செல்கள் உதவியுடன் இறந்துபோனவருக்கும் இனிமேல் குழந்தை பிறந்திடும் என இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் புதிதாக கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.
என்னால் அப்பாவாக முடியவில்லையே என ஆண்கள் யாரும் இனிமேல் கலங்கிட தேவையில்லை, என்கிறது இங்கிலாந்து ஆராய்ச்சியாளர்களின் அரிய கண்டுபிடிப்பு.
விந்தணுவும், முட்டையும் இணைந்து கருவுருவாவது தான் இயற்கையின் நியதி. ஒருவேளை நோயின் காரணமாகவோ, வேறு ஏதாவது இயற்கையான பிரச்சனை காரணமாகவோ சரியான விந்தணுக்கள் இல்லாத ஆண்கள் இனி கவலைப்பட வேண்டாம். உடலில் உள்ள ஒரு ஸ்டெம் செல்லை எடுத்து பகுப்பாய்வு செய்து அவருக்கு சொந்தமான விந்தணுக்களை உருவாக்கலாம் என்பது தான் தற்போது இங்கிலாந்து விஞ்ஞானிகளின் இனிமையான முடிவு. இங்கிலாந்தில் நியூகாஸ்டில் பல்கலைக் கழகத்தில் நடந்த இந்த ஆராய்ச்சியை தலைமையேற்று நடத்தி உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியிருப்பவர் போராசிரியர் கிரீம்நார்னியா.
ஜீவன் இல்லா விந்தணு, வீரியம் இல்லாத விந்தணு. இயங்கு சக்தி குறைந்த விந்தணு குறைவான அணுக்கள் கொண்ட விந்தணு என ஏராளமான பிரச்சனைகள் ஆண்களை சுற்றியே காணப்படுகிறது. இந்த பிரச்சனைகளுக்குகெல்லாம் தீர்வாக இந்த ஸ்டெம் செல் ஆராய்ச்சியின் முடிவு இருப்பதாக மருத்துவ உலகம் நம்புகிறது. மருத்துவ உலக வரலாற்றிலேயே முதன்முறையாக எனும் அடைமொழியுடன் ஆண் கருவிலிருந்து ஒரு செல்லைப் பிரித்து அதை சோதனை கூடத்தில் ஸ்பெர்ம் செல்லாக மாற்றி வளரச்செய்துள்ளனர். கருவிலிருந்து மட்டுமே செல்லை என்பது கிடையாது , அதற்கு மாறாக ஆண்களில் கைகளிலிருந்தே ஒரு ஸ்டெம் செல்லை பிரத்தெடுத்து ஸ்பெர்ம்(விந்தணு) உருவாக்கிட முடியும் என்கிறார் போராசிரியர் கிரீம் நார்னியா.
இந்த ஆய்வில் ஸ்டெம்செல் ஒன்றினை திரவநைட்ரஜனில் பதப்படுத்தி அங்கிருந்து சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவந்து வைட்டமின்கள் உதவியுடன் ஸ்பெர்ம் ஆக வளர்த்தெடுக்க 4 முதல் 6 வாரங்கள் ஆகின்றன. இந்த விந்ணுவை ஐவிஎப் முறைப்படி நேரடியாக முட்டையில் செலுத்தினால் கரு தயாராகிவிடுகிறது. ஆண்மையில்லை ,விந்தணு இல்லை போன்ற ஆண்களின் குறைபாடுகளுக்கு இனி விடைகொடுக்கலாம். இந்த புதிய ஆராய்ச்சி மட்டும் அரசாங்கங்களால் அங்கீகரிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தால், அச்சுஅசலாக பொற்றோரின் குணாதிசியங்களுடன் இயற்கையாய் பிறக்கும் குழந்தைக்குரிய அத்தனை இயல்புகளோடு ஒரு குழந்தையை உருவாக்கிட முடியும்.
அப்போது திரவ நைட்ரஜனில் பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள இறந்த போனவரின் ஸ்டெம் செல்கள் சாதாரணவெப்பநிலைக்கு கொண்டு வரப்பட்டு வைட்டமின்கள் உதவியுடன் 4 முதல் 6வாரத்திற்குள்ளாக விந்தணுவாக உருமாற்றம் செய்யப்படும். இவ்வாறாக ஆய்வுக்கூடத்தில் தயார்செய்யப்படும் இறந்து போனவரின் விந்தணுவை ஐவிஎப் முறைப்படி உறவினர்களின் முட்டையில் செலுத்தினால் கருரெடி ... 10 மாதத்தில் இறந்து போனவரின் வாரிசு ரெடி... இறந்து பல வருடங்கள் ஆனாலும் கூட இந்த செயற்கை ஸ்டெம் செல் விநத்ணு உருவாக்குதல் சாத்தியம் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். செத்தும் சந்ததி கொடுத்தான் என்கிற சொல் வரும் காலங்களில் வழக்கமாகிவிடும் என்று கூறப்படுகிறது. இது சாத்தியமானால் ராணுவத்தில் இறந்து போன, விபத்து மற்றும் கட்டுரையில் முன்பகுதியில் சொல்லப்பட்ட விந்தணு குறைபாடு பிரச்சனைகளும் நல்ல தீர்வாக அமையும்.
- தொகுப்பு
செல்வராஜ்
Comments
but is it really true or to believe.