115 வயது 'ஜப்பான் பாட்டி'யும் - குழந்தை ரோபோவும்


உலகின் அதிக வயதான பெண்மணியாக கருதப்பட்டவர் அமெரிக்காவில் வாழ்ந்து வந்த டினா மான்ஃப்ரெடினி (115 வயது). இவர் கடந்த மாதம் 17-ம் தேதி மரணமடைந்தார்.
இதனையடுத்து, உலகின் அதிக வயதான பெண்மணி என்ற பெருமைக்கு உரியவராக ஜப்பான் நாட்டை சேர்ந்த கோட்டோ ஒக்குபோ (115 வயது) என்பவர் கடந்த 27 நாட்களாக கருதப்பட்டார். கிழக்கு ஜப்பானில் உள்ள கவாசாக்கி நகரில் மகனுடன் வாழ்ந்து வந்த கோட்டோ ஒக்குபோ 24.12.1897-ல் பிறந்தவர்.
சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த இவர், கவாசாக்கியில் உள்ள மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார்.
இவரது மறைவையடுத்து, உலகின் அதிக வயதான நபர் என்ற பெருமை, மத்திய ஜப்பானில் உள்ள கியோட்டோ பகுதியில் வாழ்ந்து வரும் ஜிரோமன் கிமுரா (115 வயது) என்பவரை சென்றடைந்துள்ளது.ளார்.

குழந்தையை போன்ற ரோபோ கண்டுபிடிப்பு

குழந்தையை போன்று உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ரோபோவை ஆய்வாளர்கள்வடிவமைத்துள்ளனர்.கலிபோர்னியா பல்கலைக்கழகத்துடன் சேர்ந்து ஹான்சன் ரோபோடிக்ஸ் நிறுவனத்தை சேர்ந்த டேவிட் ஹான்சன் என்ற அறிவியல் அறிஞர் இந்த ரோபோ புதிய வகை ரோபோவை தயாரித்துள்ளனர். ஒன்றரை வயது குழந்தையை போன்று வடிவமைக்கப்படுள்ளது. இந்த ரோபோவுக்கு டியோகோசன் என ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த ரோபோ குழந்தையை போன்று அழுவது, சிரிப்பது, புன்னகை செய்வது, கோபப்படுவது மகிழ்ச்சி அடைவது போன்று பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது. இதற்கு ஏற்றாற்போல் நெகிழும் தன்மை கொண்ட பிளாஸ்டிக்குகளை வைத்து இந்த ரோபோவின் முகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையான ரோபோவுக்கு செயற்கை அறிவுத் திறனை புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக டேவிட் ஹான்சன் தெரிவித்துள்ளார்.


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments