வைகைபுயல் வடிவேலுவின் வறுமைக்கதை


வடிவேலு இன்று என்ன செய்து கொண்டிருக்கிறார். அடுத்து படத்தில் நடிப்பாரா என்ற கேள்விகள் அவரது ரசிகர்கள் மத்தியில் விடைகான முடியாத வினா?.  சிம்புதேவன் படத்தில் கதாநாயகனாக இம்சை அரசன் 23ம் புலிகேசி -2ல் நடித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறார்கள். வடிவேலு என்ற பெயரைக்கேட்டதுமே நகைசுவை உணர்வு எற்படும் அளவுக்கு நகைசுவைசக்கரவர்த்தியாக திகழ்ந்தவர்.ஒரே ஊர்கரார்களான (மதுரை) விஜயகாந்துக்கும்,இவருக்குமான தனிப்பட்ட மோதலில் அரசியல் புகுந்து விளையாடி விட்டது. இவரை வைத்து படம் எடுத்தால் அளும்கட்சியின்  கோபத்துக்கு ஆளாக வேண்டுமா? என்ற பயத்திலேயே யாரும் இவரை அணுகவில்லை. வடிவேலு இன்று நடிக்காமல் இருந்தாலும் வசதிபடைத்தவர், நல்ல நிலையில் இருக்கிறார். அவரது இளைமைகாலமும், சிறுவயதும் எப்படியிருந்தது.

வைகைப்புயல் வடிவேலு தன் மனதை தொட்ட விஷயங்களை சொல்கிறார். “காலேஜெல்லாம் படிக்கணும்.... பெரிய வேலைக்கு போகணும்னு சின்ன வயசில ரொம்ப ஆசைப்பட்டேன், ஆனா பள்ளி படிப்பையே முழுசா படிக்க முடியல. காரணம் எங்க குடும்பம் ரொம்ப ஏழ் மையான குடும்பம். பிள்ளைங்க உழைச்சாத்தான் எல்லோரும் சாப் பிட முடியும்ங்கிற ஏழை குடும்பம் மட்டுமல்ல, பெரிய குடும்பமாகவும் இருந்ததால் அப்பா ஒருத்தர் சம் பாத்தியத்தில் வாழ முடியாத நிலை. அதனால நானும், என் சகோதரர் கள் மூவரும் சின்ன வயசிலேயே வேலைக்குப் போக ஆரம்பிச்சோம். ஒரு கண்ணாடிக் கடையிலேயே வேலைக்கு சேர்ந்தோம். கண்ணாடிகளை எல்லாம் குறிப்பிட்ட அளவில் அறுக்கிற வேலை. எங்கப்பாவும் கண்ணாடிக் கடையில்தான் வேலை பார்த்தாரு. ஆனா எங் கள வேற ஒரு கடையில சேத்து விட்டாரு. ‘ கண்ணாடி வேலை ரெம்ப கஷ் டமான வேலை, தன் கண் முன்னால பிள்ளைங்க கஷ்டப்படக் கூடாது’ ன்னு அவருக்கு நினைப்பு. கண்ணாடிய அறுக்கிறது சாதாரண விஷயம் அல்ல. ‘சர்க்கஸ்’ ல கரணம் தப்பினா மரணம்’னு செர்ல்ற மாதிரி.

இதில் கத்தி வெட்டு, லேசா தப்பினா ரணம் தான். கண்ணாடி சில்லு குத்தியதால நானும் என் சகோதர்களும் நிறைய தடவ ரத்தம் சிந்தியிருக்கோம். என் உடம்பில் கூட நிறைய வடுக்கள் இன்னும் இருக்கு. கண்ணாடி கடை வேலையில் கிடைச்ச மொத்த சம்பளம் எவ்வளவுன்னு சொல்லலியே 2 ‘குரோஸ்’ கண்ணாடி (240 துண்டு) அறுத்தா 40 ரூபா. நாங்க நாலு வேரும் காலையில ஏழு மணிக்கு வேலைக்குப்போயிட்டு வீடு திரும்ப அவ் வளவு உழைச்சாத்தான் 2 குரோஸ் அறுக்க முடியும். வழக்கமா வேலை முடிஞ்சிதான் எல்லாரும் சம்பளம் தருவாங்க. நாங்க காலையிலேயே ‘அட்வான்ஸ்’ மாதிரி பத்து ரூபாயோ, இருபது ரூபாயோ வாங்கி வீட்டில் குடுத்திடுவோம். அந்த பணத்தை வச்சித்தான் அரிசி வாங்கி உலை கொதிக் கணும். சில சமயங்கள்ல ‘காட்போர்ட்’ அறுத்து கண்ணாடியப் பொருத்தர வேலையும் தருவாங்க. ‘காட்போர்டு’ அறுத்து அதோட தூளு மூக்கு வழிய உடம்பில் போய் என்னோட தம்பி ஒருத்தன் நிரந்தர ஆஸ்துமா நோயாளி அயிட்டான். ஒரு வருஷம் இல்ல, ரெண்டு வருஷம் இல்ல. பதிமூணு வருஷம் கண்ணாடி கடையில நாங்க வேலை பார்த்திருக்கோம். ஒரு நாள் வேலைக்கு போகலைன்னா, அடுப்பில் பூனை தான் படுத்து உறங்கும். உடம்பில் நோவுன்னாக் கூட மாத்திரை சாப்பிட்டுட்டு மாங்கு மாங்குன்னு கண்ணாடிய அறுப்போம். இன்னைக்கு நான் நல்ல நெலமையில இருக்கி றேன். என்னைக்கும் மதுரையில நான் பார்த்த கண்ணாடி வேலையை மறக் கவே மாட்டேன். என்று தான் நடிக்க வரும் முன் பார்த்த கடைசி வேலையைப் பத்தி சொல்லுகிறார் வடிவேலு.

தொகுப்பு
செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஆத்மா said…
சிறிய வயதில் சிரமப்பட்டவர்கள் தான் இன்று சிகரங்களாக இருக்கிறார்கள்.