இதுவரை 12 முறை அழிந்த உலகம்... டிசம்பர் 21ல் அழியுமா?


சீனாவில் 60க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்,உலகம் அழியும் என செய்தி வெளியிட்டதற்காக. ஆசிய நாடுகளை விட ஜரோப்பிய, அமெரிக்க நாடுகளில் தான் டிச.21 குறித்த பீதி அதிகம். அந்த நாடுகளில் உலக அழிவுக்கா தயாராக பலர் இருப்பதாக ஆங்கில இணைய தளங்களில் செய்திகள் காணக்கிடைக்கின்றன.இந்த உலகம் அழியும் என்ற நம்பிக்கை மாயன் காண்டர் 21.12.2012ல் முடிகிறது என்பதால் (அவர்களுக்கு தெரிந்து அவ்வளதான் அதனால் முடித்து கொண்டார்கள்) எற்பட்ட பரபரப்பு... இந்த ஆண்டு துவக்கத்திலேயே இருந்தது. இன்றையவானத்தில் இடப்பட்ட உலகத்தின் கடைசிநாள் பதிவு சமீப நாட்களாக அதிகமாக பார்க்கப்படுகிறது. அதனால் உலக அழிவு குறித்து எனக்கு தெரிந்த புதிய தகவலை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.சரிப்பா உலகம் அழியுமா? இல்லையா என்றால் அழியும்.... என்கிறார்கள் விஞ்ஞானிகள். எப்படி அழியும் என அவர்கள் கணித்துள்ள சில தகவல்....

          1. பூமியின் மீது வால்நட்சத்திரம் மோதினால் உலகம் அழியும், ஜூராசிக்பார்க் படத்தில் பார்த்தீர்களே டைனோசர்கள் அவை அழிந்து போனதற்கு இதுவும் ஒரு காரணம் என்கிறார்கள். சூரியமண்டலத்திற்கு வெளியே ''ஊர்ட்மேகம்'' என்ற பகுதியல் நூற்றுக்கணக்கான வால்நட்சத்திரங்கள் உள்ளன. அவற்றின் சுற்றுபாதையில் சூரியனை சந்திக்க வரும் போது பூமியில் மோதினால் பெரிய அளவில் அழிவு ஏற்பட்டு மனித இனம் அழியலாம். வால்நட்சத்திரங்களில் மிகப்புகழ்பெற்து ஹாலிவால்நட்சத்திரம்,அது 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை பார்க்கவரும் கடைசியாக 1986 வந்தது, இனி 2062 ல் வரும்.மேலும் சில ஆண்டுகளுக்கு முன்னால் ''ஜூமேக்கர் லெவி'' என்ற வால்நட்சத்திரம்  9 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகத்தில் மோதியது.



          2. செவ்வாய் கிரகத்திற்கும் வியாழன் கிரகத்திற்கும் இடையை லட்சக்கணக்கான பாறைகள் சுற்றிவருகின்றன, அவற்றில் 10 அல்லது 20 கிலோமீட்டர் சுற்றளவுள்ள பாறைகளும் அடக்கம். இவை பாதை தவறி பூமியின் மீது மோதினால் உலகம் அழியும். இரவு நேரங்களில் நாம் எல்லோரும் பார்த்திருப்போம்... எரிகற்கள் அவைதான் இவை. பெரும்பாலும் எரிந்து போனாலும், பெரிய பாறைகள் பூமியில் மோதவாய்ப்பு உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்னால் சில நொடி தாமதத்தால் ரஷ்யாவின் லெனின்கிராண்ட் நகரம் தப்பியது.  ஆனால் சைபீர்ய பகுதியில் ஆயிரக்கணக்கான ரெயின்டீர் மான்கள் இறந்து போயின.

          3.நம் பூமி சூரியனை சுற்றுவதைப்போல சூரியன் பால்வெளிமண்டலம்(கோடிக்கணக்கான நட்சத்திரம் அடங்கி பகுதி,(இதுபோன்று வானத்தில் நிறைய உண்டு) என்கிற நட்சத்திர மண்டலத்தை சுற்றிவருகிறது. ( இரவு வானத்தில் வெண்நிற மேகம் போல காட்சியளிக்கும்)   அப்படி சுற்றிவரும் போது கதிர்வீச்சு அதிகம் உள்ள பகுதிக்குள் சூரியன் பயணம் செய்யும் பொழுது பூமியில் உள்ள உயிரினங்கள் அடியோடு அழிந்து போகும் வாய்ப்பு உண்டு. கடந்த 100 மில்லியன் ஆண்டுகளில் 12 முறை இது போன்ற அழிவு நடந்திருக்கலாம்.அதன் பிறகு 13மில்லியன் ஆண்டுகள் ஆகியிருக்கலாம் இனி எப்போது என்பேதை இயற்கைதான் தீரமானிக்கும்...

          4.அடுத்தாக சூரியனின் வயது தற்போது நடுத்தர கட்டத்தை எட்டிவிட்டது. வயதை கண்க்கீட, வெள்ளை நிறமாக இருந்தால் இளம் வயது. மஞ்சள் நடுத்தரம், சிகப்பு முதுமை, என சூரியனின் வயதை கணக்கிடலாம். நடுத்தரவயதை அடைந்துவிட்ட சூரியன் சிவப்பாகி முதுமையடைந்து வெடித்து சிதறினால் பூமியில் உயிர்கள் அழியும். ஆனால் அதற்கு இன்னும் 400 மில்லியன் ஆண்டுகள் இருக்கின்றன. இந்த விசயத்தில் கவலை தேவையில்லை.

 5. மற்றொன்று நட்சத்திர மோதல்கள்.... நமது சூரியனுக்கு பக்கத்தில் சீரிஸ் நட்சத்திரம்(சூரியனிலிருந்து 2 ஒளியாண்டு- தூரத்தில்உள்ளது, ஒளியாண்டு என்பது ஒரு நொடியில் ஒளி செல்லும் வேகம்1,80.000 கிமீ இவ்வளவு  வேகத்தில் போனாலும் சீரிஸ் நட்சத்திரத்துக்கு போக 2வருசம் ஆகும்) ,ஆல்பாலெண்டார் (நான்கு ஒளியாண்டு)சூரியன்,சீரஸ்,ஆல்பா இவை முன்றும் அவற்றின் பயணப்பதையில் மோதிகொண்டால் உலகம் அழியும்.
 மேற்சென்ன காரணங்கள் எல்லாம் நம் சக்திக்கு கட்டுப்படாத,இயற்கையின் வீதப்படி நடப்பவை. தற்போது நடக்கப் போவதில்லை... ஆனால் பூமியில் வாழ்கின்ற மனிதர்களாகிய நமே நம்மைநாமே அழித்து கொள்ளம் வாய்ப்புகள் தான் அதிகம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்..

           நம்மை நாமே அழித்து கெள்ளும் வழிமுறைகள்

        1. அமெரிக்காவிடம் உலகத்தை பலமுறை அழிக்கவல்ல அணு ஆயுதங்கள் உள்ளன.மேலும இந்தியா,சீனா,பாகிஸ்தான் போன்ற நாடுகளில் உள்ளன.இவற்றை வைத்து எத்தனை முறைவேண்டுமானலும் உலத்தை அழிக்கலாம்.
     
          2. மனிதனின் பேராசையால் சுற்றுச்சூழல் நாளுக்கு நாள் கெட்டுவருகிறது. அதனால் சூடேரும் பூமி, துருவ பகுதியில் பனிகட்டிகள் உருக துவங்கியுள்ளன. கடல் மட்டும் உயர்ந்து உலகம் அழியாலாம்.
         
          3. பூமி சூடேருவதால் ஏற்கனவே நிறைய பறவைகள், உயிரினங்கள் அழிந்துவிட்டன. சிட்டுக்குருவி,பருந்து போல மனிதர்களுக்கும் அந்த நிலை வரலாம்.

         4.சுகாதார குறைபாடுகளால், முறையற்ற வாழ்க்கை முறைகளால் எயிட்ஸ்,டெங்கு,பன்றிகாய்ச்சல் போன்ற உயிர்கொல்லி நோய்கள் வந்து மனிதர்கள் கொத்து கொத்தாக அழிந்து போகலாம்.
       
         5. இனம்,மதம்,மொழி என மனிதர்கள் பிரிந்து மனிதர்கள் போர்கள் நடத்துகிறார்களே,, இது வரை அமெரிக்கா ஜப்பானில் ஹீரோசிமா,நாகசாகி,அரபு நாடுகளில் கொண்டு குவித்த மனிதர்கள் பலகோடிகளை தாண்டும்,பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல்கள், இப்படி தொடரும் போர் பெரிய அளிவில் வெடித்து 3ம் உலகப்போர் வருமானால் உலகத்தை மனிதர்களே அழித்துக்கொள்வார்கள்.

இவை மனிதர்களால் சரிசெய்யக்குடியவை, இனம்,மதம்,மொழி பேதம் மறந்து, பூமியின் சுற்றுச்சூழலை பாதுகாத்து நாம் அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக இந்த உலகத்தை ஒப்படைத்தோமானல் இன்னும் 400 கோடி ஆண்டுகள் பூமி இருக்கும். அதற்குள் மனிதன் வேறுகிரகங்களுக்கு குடியேறும் வாயப்பு அதிகம். அதனால் டிசம்பர் 21 குறித்த பயம் தேவையில்லை. 2013க்கான காலண்டர் எங்கள் வீட்டுக்கு வந்து விட்டது. உங்கள் வீட்டுக்கும் வந்திருக்கும் என் நம்புகிறேன். அடுத்த ஆண்டுக்கு உங்கள் வளர்ச்சிகாக புதிதாக திட்டமிடுங்கள். அனைவருக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.
-செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

senthilkumar said…
நம்மை நாமே அழித்து கெள்ளும் வழிமுறைகள்.... super
முதலில் வதந்திகளை பரப்போவோரை கடுமையாக தண்டிக்க வேண்டும்.

ஆத்மா said…
அறியாத தகவல்கள்...
நம்மை நாமே அழித்து கெள்ளும் வழிமுறைகள் முற்றிலும் உண்மையானதே
// அதற்குள் மனிதன் வேறுகிரகங்களுக்கு குடியேறும் வாயப்பு அதிகம். //

மிகச்சரிதான் சாத்தியக்கூறுகள் உண்டு