தனது பணியை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. செவ்வாய் கிரகம் குறித்த புகைப்படங்களை பூமிக்கு அனுப்பி வருகிறது. இதில் செவ்வாயில் தண்ணீர் வழிந்தோடியதற்கான தடையங்கள் இருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டது. இதில் விஞ்ஞானிகளுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. இதனையடுத்து அவர்கள் அங்குள்ள பாறைகளையும், மணலையும் எடுத்து சோதனை நடத்தவுள்ளனர்.
செவ்வாய் சுற்றுலா செல்ல ராக்கெட் தயாராகிறது
கியூரியாசிட்டி அனுப்பிய புதிய படங்கள்
இதனிடையே ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் அமைப்பாளரான எலன் மஸ்க் என்பவர் செவ்வாய் கிரகத்தில் காலணி அமைத்து அதில் 80 ஆயிரம் பேரை குடியமர்த்தவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தார். இத்திட்டத்தின் விரிவான தகவல்களை அவர் லண்டனில் உள்ள ராயல் வான்வழி சமூகத்தில் வைத்து தெரிவித்தார்.முதற்கட்டமாக 10 பேர் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படவுள்ளனர். ஒருவருக்கான டிக்கெட்டின் விலை சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபாயாகும். முன்னேறிய நாடுகளில் உள்ள நடுத்தர வயதுடையோர் பயணத்திற்குத் தேவையான தொகையை சேகரிக்கும் வகையில் குறைந்த அளவிலேயே பயணத் தொகை நிர்ணயித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இவர்கள் அங்கே வெறுமனே செல்லாமல் எதிர்கால சந்ததியினரின் வருகைக்காக அங்கு பணியாற்றவும், விவசாயம் செய்யவும் தேவையான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், அங்கே சென்று வீடுகள் கட்டுவதற்கான உபகரணங்களையும் அவர்கள் தங்கள் பயணத்தின் போது கூடவே எடுத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்படவுள்ளன. முதலில் செல்பவர்கள் அங்கே தங்கும் வகையில் கார்பன்- டை - ஆக்சைடால் அழுத்தப்பட்ட வெளிப்படையான கூடாரங்கள் அமைக்கப்படும். அதன் மேல், சூரியனின் வெப்பத்தைத் தாங்கும் வகையில் நீர் நிரப்பப்பட்டிருக்கும். அவர்கள் அங்கே சுதந்திரமாக வாழலாம் என்றார்.செவ்வாய் கிரகத்தில் உள்ள நிலத்தில் கார்பன் - டை - ஆக்சைடின் மூலம் விவசாயம் மேற்கொள்ள முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. எனவே, செவ்வாய்கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ளப்படும் போது விவசாயத்திற்குத் தேவையான உரங்கள், மீத்தேன், ஆக்ஸிஜன் வாயுக்கள் உடன் எடுத்துச் செல்லப்படும். மிகப் பெரிய இந்த திட்டத்தில் பங்குகொள்ள உலகில் உள்ள ஒரு லட்சம் மக்களில் ஒருவர் மிகவும் ஆர்வமாக உள்ளார். இத்திட்டம் வெற்றி பெற்றால், பூமியில் உள்ள 800 கோடி மக்களும் செவ்வாய் கிரகத்திற்குச் செல்ல
ஆசைப்படுவார்கள்.செவ்வாய் கிரகத்திற்கு மனிதனை அனுப்பக் கூடிய மிகவும் கடினமான அதேசமயம் நிறைவேற்றப்படக்கூடிய இந்த திட்டம் வரும் 15 அல்லது 20 ஆண்டுகளில் நிறைவுபெறும் என எதிர்பார்ப்பதாக எலன் தெரிவித்தார். இதற்கான பணிகளை தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், இந்தத்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றும் வகையில் வேகமான மற்றும் திரும்ப பயன்படுத்தக் கூடிய செங்குத்தாக தரையிறங்கக் கூடிய ராக்கெட் வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த வடிவமைப்புகளில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கான் 9 ராக்கெட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்த ராக்கெட் செங்குத்தாக மேலே எழும்பவும், தரையிறங்கவும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அமைப்பாளரும், முதன்மை செயல் அலுவலருமான எலன் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-செல்வன்
Comments
தகவல்களுக்கு நன்றி...
கியூரியாசிட்டி அனுப்பிய புதிய படங்கள் (slide show) சூப்பர்...
தொழிநுட்பத்தில் மனிதன் மேலும் மேலும் முன்னேரிக்கொண்டுதான் செல்கின்றான்
பொருத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறது என்பதனை
நானும் வர்ரேன்.