சிஇசட்12 படத்தில் மனித வாகனமாக நடிக்கும் ஜாக்கிசான்


உலகம் முழுவதும் பலகோடி ரசிகர்களைக் கொண்டவர் அதிரடிமன்னன்ஜாக்கிஜான். இவரது அதிரடி ஆக்சன் மற்றும் காமெடி கலந்த ஆக்சன்ஆறிலிருந்து அறுபது வரை சகலமானவர்களையும் தன்பக்கம் இழுத்து வைத்துள்ளார். கடினமான மற்றும் ஆபத்தான சண்டைக்காட்சிகளையும் காமெடி கலந்து கொடுப்பதிலும்ஜாக்கு ஜானிற்கு நிகர் அவரேதான். அவரது உடம்பில் காயம்படாத இடம் இல்லை என்று கூறும் அளவிற்கு எல்லா பாகங்களிலும் கடுமையான அடிபட்டு பல சமயம் ஆபத்தான நிலைக்கும் சென்றுள்ளார். இதுவரை சுமார் 100 படங்களில் அவர் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். 60 வயதைத் நெருங்குவதால்
உடல் நலனை கருத்தில் கொண்டு இனி ஆக்ஷன் படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அவர் கூறியிருந்தார்.மேலும் உலகம் தற்போது வன்முறை களமாக மாறிவிட்டது., அந்த வன்முறையை இனி என்படங்களில் வராது என்கிறார்.

மனித வாகனமாக  ஜாக்கிசான் 












இந்நிலையில், அவர் கதை எழுதி, இயக்கி, நடித்து, தயாரித்து வரும் ஊஷ்12 என்ற படத்தோடு தனது ஆக்ஷன் அவதாரத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். எனவே, ஜாக்கிஜானின் சினிமா வாழ்வில் இந்தப்படம் கடைசி ஆக்சன் படமாக இருக்கும். இதுவரை அவர் நடித்துள்ள படங்களிலேயே படு ஆக்ஷன் படமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. பொதுவாகவே ஜாக்கி ஜானுடைய படங்களில் பெரும்பாலும் சீனர்களே நடிகர்களாக நடிப்பர். ஆனால், இந்தப் படத்தில் ஏராளமான ஹாலிவுட் நடிகர்கள் நடிக்கிறார்கள். இவர்களைத் தவிர வான் சாங் வூ, லியோ பேன், யோ ஜிங்டாங்கும் சிறப்பு தோற்றத்தில் கிங் காங் படத்தில் நடித்த ஒலிவர் பிளாட்டும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான சண்டைக்காட்சிகளை ஜாக்கிஜானும், ஹி ஜுன் ஆகியோர்

படத்தின் டிரைலர்



அமைத்துள்ளனர்.தமிழில்உள்ளதுபோன்றுசீனாவிலும் 12 ராசிகள் உள்ளன. இதனை ஊஷ்12 என்று அழைப்பாளர்கள். இதனையே ஜாக்கிஜான் தனது படத்திற்குத் தலைப்பாக வைத்துள்ளார். உலகம் முழுவதும் திரையிடப்படவுள்ள இந்தப் படம் அடுத்த மாதம் தமிழகம் முழுவதும் 250 தியேட்டர்களில் வெளியிடப்படவுள்ளது
-செல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

தகவலுக்கு நன்றி... பார்த்துடுவோம்....
Tamil Magazine said…
உண்மையில் jackie chan ஒரு மஹா கலைஞன்.