அதில் மீதம் உள்ள ஒரு சிறு பகுதி கற்களை தற்போது ஏலத்தில் விட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அந்த சிறிய கல்லுக்கு ரூ1.35 கோடி என்று விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பழங்கால பொருட்களை ஏலமிடும் அமெரிக்காவைச் சேர்ந்த ஜிம் வால்கர் கூறுகையில், சகாரா பாலைவனத்தின் பல பகுதிகளில் இது போன்ற சிறப்பு வாய்ந்த விண்கற்கள் அடிக்கடி விழுகின்றன. இவற்றை சேகரிக்கும் அப்பகுதி மக்களுக்கு இவற்றின் மதிப்பு தெரிவதில்லை. ஏலம் விடப்பட உள்ள இந்த செவ்வாய் கிரக சிறிய கல் மிகவும் அழகாக உள்ளது. வரும் அக்டோபர் 14 தேதி ஏலத்தில் விடப்பட உள்ளது என தெரிவித்தார்.
வெள்ளிக் கிரகத்தில் பனிக்கட்டிகள்!
விண்வெளி பல அதிசயங்கள் ஆச்சரியங்களை கொண்டது. இவற்றை ஆராய்வதற்காக உலகெங்கும் உள்ள விஞ்ஞானிகள் இரவு- பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். இதன்விளைவாக பல்வேறு அரிய கண்டுபிடிப்புகளில் நாம் வெற்றி அடைந்திருக்கிறோம். பூமியைத் தவிர மற்ற கிரகங்களில் மனிதர்கள் வாழத்தகுதியான சூழ்நிலை நிலவுகிறதா என்பதை அறிய விஞ்ஞானிகள் பல்வேறு ஆய்வுகளைச் செய்து வருகின்றனர். இதுகுறித்த ஒரு ஆய்வை செய்வதற்காக கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை அமெரிக்கா செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. இதேபோன்று, ஐரோப்பிய விஞ்ஞானிகளும் வெள்ளிக்கிரகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், வெள்ளிக்கிரகத்தில் பனிப்படலம் சூழ்ந்திருப்பது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கிரகம் சூரியனி
லிருந்து இரண்டாவது இடத்தில் உள்ளது. இது சூரியனைச் சுற்றிவர 224.7 நாட்கள் ஆகிறது. வெள்ளிகிரகத்தின் மேற்பரப்பில் 125 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஐஸ்கட்டி
கள் உறைந்து கிடக்கின்றன. இதன்மூலம், இங்கு கார்பன்-டை-ஆக்ஸைடு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. ஐஸ் மற்றும் பனிக்கட்டிகளால் உறைந்திருப்பதால் அங்கு பூமியைவிட அதிக குளிர் நிலவுகிறது. மேலும், சூரியனுக்கு பல கோடி மைல்களுக்கு அப்பால் உள்ள பூமியின் பனிப்பிரதேசங்கள் வெப்பமயமாதலின் காரணமாக உருகிக் கொண்டிருக்கும் நிலையில், சூரியனுக்கு மிக அருகில் உள்ள வெள்ளியில் பனிக்கட்டிகள் உறைந்திருப்பது மிகவும் ஆச்சரியமானது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். நிலவுக்கு அடுத்தபடியாக அதிக ஒலியைத் தரக்கூடியது வெள்ளிக்கிரகம் என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா கண்டுபிடிப்பு
தங்கத்தின் விலை சமீபகாலத்தில் தாறுமாறாக உயர்ந்து கொண்டு இருக்கும் நேரத்தில், தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் மிக்சின் மாநில பல்கலைக்கழகத்தை சேர்ந்த உயிரியல் துறை அறிஞர்கள் நுண்ணுயிரிகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்கள் திரவ தங்கத்தை உருவாக்க கூடிய ''கியூப்ரியாவிடஸ்மெடல்லிடியூரன்ஸ்'' என்ற பாக்டீரியாவை கண்டறிந்தனர். அந்த பாக்டீரியாவில் ஒரு தங்ககுளோரைடு சேர்மம் அதிக அளவில் இருக்கிறது, இதையடுத்து தங்க குளோரைடை இந்த பாக்டீரியாவுக்கு உணவாக கொடுத்தனர். ஒருவாரம் கழித்து பாத்த போது தங்க குளோரைடு திடநிலையில் தங்கமாக மாறி இருந்தது. அது 24 கோரட் தங்கத்தின் தரத்தில் இருந்தது மிகவும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.இந்த தங்க கட்டிகளை கொண்டு ஒருவிதமான கலைப்பொருளையும் ஆய்வாளர்கள் உருவாக்கி உள்ளனர். அதை ஆஸ்திரியாவில் நடைபெறவுள்ள கலைபோட்டி ஒன்றில் கண்காட்சிக்கு வைக்க ஆய்வாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.
-தகவல்
செல்வன்
செல்வன்
Comments
தங்கத்தை உருவாக்கும் பாக்டீரியா - நம்ம நாட்டிற்கு மிகவும் தேவை...
தகவலுக்கு நன்றி...