''பரதேசி'' படத்தின் பெயரே சற்று மிரட்டுகிற தோனியில் உள்ள பாலாவின் வழக்கமான கதை.
பாலா படத்தில் முதன் முதலாக வைரமுத்து பாடல் எழுதியுள்ளார், இளையராஜாவுக்கு பதிலாக ஜி.வி.பிரகாஷ் இசை.கேமரமேன் செழியன்,எடிட்டர் கிஷோர் என புதிய கூட்டணி இணைந்திருக்கிறது.
பிழைக்க வழியில்லாமல் சொந்த மண்ணைவிட்டுப் பிரியும் ஒவ்வொருத்தனும் பரதேசிதான் என்கிறார் பாலா. 1940கள்ல டி எஸ்டேட்டுக்குக் கொத்தடிமையாப் போன பரதேசிகல் ஒருத்தனா அதர்வா இந்த படத்தில் நடிக்கிறார். ''டெட் டீ '' என்ற நாவலுக்கான களத்தை எடுத்துக்கொண்டு அதில் பரதேசியாக அதர்வா வருகிறார்.
தேயிலை தோட்டங்களில் வாழந்த அடிமைகளின் உறைந்த சரித்திரம்தான் பரதேசி.நாம் அருந்தும் ஒவ்வொரு கோப்பை தேநீருக்காக தேயிலைத் தோட்டங்களில் காலம்காலமாக ரத்தம் சிந்திய கொத்தடிமை உயிர்களின் கதைதான் களம்.இந்த சோகத்தை, பதேசியின் வாழ்க்கையை
''வலி சொல்லவே இல்லையே
வாய்மொழி
கண்ணிருதான் ஏழையின்
தாய்மொழி''
என வைரமுத்து தனது கவிதை வரிகள் மூலம் சொல்லியிருக்கிறார்.நீங்கள் இதுவரை எதிப்பார்க்காத பல விஷயங்கள் படத்தில் இருக்கும்.100 படத்தில் தொடவேண்டிய உச்சத்த அதர்வா தனது 3வது படத்திலேயே தொட்டிருக்கிறார்.
-சத்யஜித்ரே
Comments
பாலா என்னும் போது ஏதோ ஒரு வித்தியாசம் இருக்கத்தானே செய்யும்
பகிர்வுகு மிக்க நன்றி சகோ