படங்கள் நன்றாக போனது.என் ராஜாவின் மனசிலே படத்தின் கதையை ரெடி செய்து பல முன்னணி நடிகர்களிடம் சொல்லி பார்த்தேன், யாரும் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க முன் விரலே நானே நடித்தேன், நான் கதாநாயகனானது இப்படிதான். என் ராசாவின் மனசிலே, எல்லாமே என் ராசாதான், அரண்மனை கிளி என்று 3 படங்களில் கதாநாயகனாக நடித்து, தயாரித்தேன். மூன்றும் சூப்பர் ஹிட், எல்லாமே என் ராசாதான், அரண்மனைக்கிளி போன்ற படங்களில் நானே இயக்குநரானேன்.
ராஜ்கிரண் அறிமுகத்தில் இருந்தபோது பிற நிறுவனத்தில் மாணிக்கம், பாசமுள்ள பாண்டியர் போன்ற படங்களில் நடித்தார்.மாணிக்கம் காலைவாரிவிட்டது. வாழ்க்கையில் சில சோதனைகள் என்று ராஜ்கிரண் முன்னணியிலிருந்து பின்னுக்குத் தள்ளப்பட்டார்.குணச்சித்திர நடிகராக அவர் மறுபடியும் நடிப்பைத் தொடர்ந்தார். பாலாவின் இயக்கத்தில் நந்தா, அஜீத்துடன் கிரீடம், விஜய்யுடன் காவலன், விஷாலுடன் சண்டக்கோழி, சேரனுடன் தவமாய் தவமிருந்து, சேரன் இயக்கத்தில் பாண்டவர் பூமி, ராகவா லாரன்ஸ் இயக்கத்தில்முனிஎனதனதுபயணத்தைத் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.ராஜ்கிரணுக்கு திப்பு சுல்தான் என்ற மகன் இருக்கிறான். தற்போது தினமும் ஐந்து வேளை தொழுகிறார். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரித்திருக்கிறது.இவர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்த சண்டக்கோழி, முனி இரு படங்களும் தெலுங்கிலும் சக்கைப்போடு போட்டதால், தெலுங்கிலும் இவருக்கு மார்க்கெட் இருக்கிறது. இவரைத் தேடி தெலுங்கு படங்களும் வருகின்றன.தற்போது ராஜ்கிரண் 5 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார். சண்டைக்கோழி, இரண்டாம் பாகத்திலும் முனு மூன்றாம் பாகத்திலும், திருமங்கலத்து யானை என தமிழில் 3 படங்களும் தெலுங்கில் இரண்டு படங்களும் பண்றார். ஒரு படத்தை தயாரித்து இயக்கும் முயற்சிலும் இருக்கிறார்.இளையராஜாவின் ரசிகரான ராஜ்கிரண், அவ்வப்போது ராஜாவை சந்தித்தால் வணக்கம் அண்ணே என்று மரியாதையாக சற்று நேரம் நின்று பேசிவிட்டு வருவார்.
சத்யஜித்ரே
Comments
என்ன இருந்தாலும் "தவமாய் தவமிருந்து" மறக்க முடியாது...
அவர்தான் முதன் முதலில் கோடியைத் தொட்டவர் என்பது எனக்குப் புதிதும் வியப்புக்குறியதாகவும் இருக்கிறது