சூர்யாவின் ’மாற்றான்’ படம் நாளை மறுதினம் வருகிற அக்டோபர் 12-ந்தேதி ரிலீசாகிறது. இதில் ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேடத்தில் நடிக்கிறார்.
இப்படத்தில் நடித்த அனுபவங்கள் பற்றி சூர்யா சொல்கிறார்.
‘அயன்’ படத்தில் நடித்துக் கொண்டு இருந்தபோது ஒட்டிப் பிறந்த இரட்டையர் வேட கதையை இயக்குனர் கே.வி.ஆனந்த் என்னிடம் விளக்கினர். எனக்கு பிடித்தது. முழு கதையும் ஒட்டிப் பிறந்த இட்டையர் கேரக்டரில் பயனிக்கவில்லை. படத்தின் ஒரு பகுதியாக அக்கதை இருக்கும்.
அகிலன், விமலன் என இரு வித்தியாசமான கேரக்டரில் நடித்தள்ளேன். அகிலனுக்கு கிரிக்கெட், யோகா பிடிக்கும் விமலனுக்கு கால்பந்தும் ஜிம்முக்கு போவதும் பிடிக்கும். வெவ்வேறு விஷயங்களில் ஆர்வமாக இருந்தாலும்
இரு வரும் நண்பர்கள். ஒவ்வொரு கேரக்டரிலும் குதூகலமான விஷயங்கள் இருக்கும் மனதை உருக்கும் உணர்வு பூர்வ விஷயங்களும் இருக்கும்.
இரட்டையர்கள் நடனம் ஆடுவது, சண்டை போடுவது, காதல் செய்வது எளிதான காரியம் அல்ல அதை கஷ்டப்பட்டு படமாக்கினோம்.
‘மாற்றான்’ ரசிகர்களுக்கு திருப்தி அளிக்கும் படமாக இருக்கும் நான் இப்படத்துக்காக 170 நாட்கள் நடித்துள்ளேன். 60 நாட்கள் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பணிகள் நடந்துள்ளன. படம் முடிந்த பிறகு சில காட்சிகளை மீண்டும் படமாக்கி சேர்த்தோம். இதற்காக அதிக நாட்கள் டப்பிங் பேச வேண்டி இருந்தது.
தெலுங்கிலும் இப்படம் ரிலீசாகிறது. அங்கு ஒரு கேரக்டருக்கு கார்த்தி டப்பிங் பேசி உள்ளார். இப்படத்தில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். மற்ற தொழில் நுட்ப கலைஞர்களும் கடுமையாக உழைத்துள்ளனர். ரசிகர்களுக்கு படம் பிடிக்கும்.
மாற்றான் - இதுவரை இன்றையவானத்தில்
வந்துள்ள பதிவுகள் ......
மாற்றான் படம் குறித்து இயக்குனர் கே.வி.ஆனந்த பேட்டி
‘தொகுப்பு
சத்யஜித்ரே
Comments