போறாமைப்படுபவர்களுக்கு மட்டும்....


கடந்த புதன்கிழமை மாலை என்னுடன் மிக இயல்பாக பேசிக்கொண்டிருந்த எனது அலுவலக நண்பர்,அடுத்த நாள் காலையில் மாரடைப்பால் இறந்துபோனார் என்ற தகவல் வந்த போது அதிர்ச்சியும், வாழ்க்கையின் மீதான நம்பிக்கையும் தொலைந்து போனது. மரணம் நம்முடன் எப்போதும் இருப்பது தான். ஆனால் இது போன்ற மரணங்கள் கொடுமையானது. நண்பர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமையின் மருத்துவர், மாரடைப்பு குறித்தும் ,வராமல் தடுப்பது குறித்தும் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையின் இதய நோய் சிகிச்சை நிபுணர் டாக்டர் எம்.சம்பத்குமார் எம்.டி, டி.எம்,(கார்டியோ) கொடுத்த தகவல்களை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்...

இந்தியாவில் நாளுக்கு நாள் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்கள் பெருகிக் கொண்டே போகின்றனர். இதற்கு காரணம் தவறான பழக்க வழக்கங்கள், இதய நோய் பற்றி அறியாமை தான் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இதய நோய், மார்புவலி, மாரடைப்புத் தொல்லை போன்றவை வராமல் இருக்க சில ஆரோக்கிய விதிகளை பின்பற்றினால் தவிர்கலாம்...

பதட்டப்படாதீர்கள்...

குறித்த நேரத்தில் வேலைக்கு கிளம்ப ,உணவு அருந்த, விளையாட, பொழுது போக்கில் ஈடுபட, குடும்பத்துடன் கலந்து பழக நேரத்தை திட்டமிடுங்கள்.பதட்டத்துக்கு இடம் தராதீர்கள். பஸ்,ரயில்,விமான பயணம் புறப்படுகிறீர்களா? அதற்கு முன்பே குறித்த இடத்தில் சேர்ந்து விடுங்கள்.அப்படியே பயணம் தவற நேர்ந்தால் கவலைப்படாதீர்கள். அடுத்த நாள்.அடுத்த வண்டி, வாகனம் இருக்கிறது. வெயிட்டான எந்த பொருளையும் நின்ற நிலையிலிருந்து தூக்காதீர்கள். கீழே உட்கார்ந்த நிலையிலிருந்து தூக்கிப் பழகுங்கள். இதயத்திற்கு நன்மை. சாப்பிடும் உணவு எவ்வளவு எளிமையானதாக இருந்தாலும் ரசித்து சாப்பிடுங்கள். ஜீரணமாகும். உணவு சாப்பிடும் போது ஊர்கவலைகள், அலுவலகம் மற்றும் குடும்ப விஷயங்களை பேசி குழப்பிக் கொள்ளாதீர்கள். நண்பர் வட்டத்தை  உருவாக்கி கலகலவென சிரித்துப் பேசி பழகுங்கள். எப்போதும் எதையோ பறிகொடுத்தவனைப்போல இருக்காதீர்கள்.தனிமையில்  இருக்காதீர்கள்¢. உலகம் மிகப்பெரியது.

எதிலும் நிதானம் தேவை... 

உங்களைத் திடுக்கிடச் செய்ய பேசுவோரிடம் ''அப்படியா... பரவாயில்லை'' என உறுதியாக  பேசுங்கள்.
இரவு படுக்க போகும் முன் பொழுது விடிந்தால் அவன் வருவானே, இவன் வருவானே அந்த பிரச்சனையை எப்படி சமாளிப்பது என்று கவலையுடன் படுக்க செல்லாதீர். ஒர் இரவில் எவ்வளவோ நடக்கின்றன. நல்ல ஓய்வு கொள்கிறேன். நிம்மதியாகத் தூங்கி கண் விழிப்பேன். என எண்ணி தூக்கத்தில் ஆழ்ந்து விடுங்கள். நல்ல தூக்கம் பரிபூரண ஆரோக்கியம் தரும். எதிலும் நிதானம் மீறாமல் இருங்கள்... விருந்து, கோளிக்கை,உடல் உறவு, உரையாடல் ,பேச்சுகள் எதுவானாலும் சரி அளவு மீறாதீர்கள். தொல்லைகள் தொடராது. இதயத்திற்கு நெருக்கடி தரும் புகை பிடித்தல். மது அருந்துதல், போன்றவைகளை அறவே தொடராதீர்கள்.

தினமும் 5 கி.மீ நடைப்பயிற்சி...

தினமும் சிறது நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உங்கள் வயது  எதுவானாலும் சரி உடற்பயிற்சி அவசியம். நாள் தோறும் 5 கிமீ தூரம் குறையாமல் நடந்தால் அநேகமாக எந்த இதய நோயாக இருந்தாலும் தீவிரமடையாமல் தடுக்கலாம். நடப்பதைப்போல சைக்கிள் ஓட்டுதலும் நன்மை தரும். புத்த புதிய பழங்கள், பசுமையான கீரைகள். காய்கறிகள் உணவில் பெருமளவு இடம்பெற வேண்டும். தினமும் ஏதேனும் ஒருவகை பழம் உண்ணத் தவறாதீர்கள். நார்ப்பொருள் மிகுந்த காய்கறிகளை தேர்வு செய்து சமையுங்கள்,பிரட் சாப்பாத்தி,ரொட்டி,புரோட்டா ஆகியவற்றை சாப்பிடும்போது வெண்ணெய், நெய்,டால்டா போன்ற கொழுப்புப் பொருட்களை சிறிதளவே சேர்ந்து அல்லது தவிர்த்து தயாரிக்கப்பட வேண்டும். தோல்நீக்கிய கோழி, இறைச்சி, மீன் போன்ற கொழுப்பற்ற இறைச்சிகளை தேர்ந்தெடுங்கள். அவற்றையும் வேகவைத்து உண்ணவேண்டும். எண்ணெயில் பொரித்து உண்ணக்கூடாது. முட்டையின் வெள்ளைக்கருவை எப்போதும் சாப்பிடலாம். மஞ்சள் கருவை தவிக்க்கலாம். எண்ணெய் பயன்படுத்தி தான் ஆக வேண்டும் என்றால் சூரியகாந்தி எணணெய் கடுகு எண்ணெய்,சோயாபீன்ஸ் எண்ணெய்,நல்லெண்ணெய் போன்றவைகளை பயன்படுத்தலாம். புத்தம் புதிய பழச்சாறுகள்,பால்சேர்க்காத கடும் டி, அல்லது காப்பி ,சக்கரைக்கு மாற்றாக வேறு பாதிப்பற்ற இனிப்புகள் கலந்து  குடிக்கலாம். கீரிம் கலவாத கேக் , ஏடெடுத்த பால் மற்றும் அதில் செய்யப்பட்ட ஜஸ்கீரிம் போன்றவற்றை பயன்படுத்தலாம். ஆனால் அவற்றை சாப்பிடும் போது பிற உணவுகளை உண்ணக்கூடாது. ஆண்கள் 35 வயதிலும்,பெண்கள் 40 வயதிலும் கட்டாயம் இருதய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். வருடத்திற்கு ஓருமுறை டி.எம்.டி எடுத்து பார்த்துக்கொள்வது அவசியம்.

எதைக்கொண்டுவந்தாய் ... கொண்டு செல்வதற்கு...
 மனஅழுத்தம் இதயநோய்க்கு விடப்படும் அழைப்பு ,மன அழுத்தத்தை குறைக்க அமைதியான இடம் ஆலயமானலும்,சமயக் கூடமானாலும் - தியானம் செய்து வாருங்கள். உடல் உள்ளம் உணர்வுகள் எல்லாம் அமைதி கொள்ள யோக செய்யலாம். மனதிற்கு அமைதி ,முறையான வாழ்க்கை,ஆபத்தில்லா இயற்கை உணவுகள், தேவையற்ற பழக்க வழக்கங்கள் தவிர்த்து வாழ்வதே இதயத்திற்கு பலம் சேர்க்கும் என்கிறார் மருத்துவர்,கடைசியாக அவர் சொன்னார் மிக..மிக முக்கியமானது அடுத்தவர்களை பார்த்து பொறாமைபடாதீர்கள். பொறாமை குணம் உடல் ,உள்ளம் அனைத்தையும் கெடுத்தவிடும்.

தொகுப்பு. 
செல்வன்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

வருமுன் காப்போம் என்று
நல்ல தகவல்களைப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.
ஆத்மா said…
நல்ல தகவல்கள்
நான் கூட ஏதாவது பிரச்சனைகள் அல்லது மனதுக்குக் கஷ்டமான ஏதாவது நிகழ்ந்தால் உடனே நித்திரை செய்திடுவேன்
பின்னர் ஆறுதலாக இருக்கும் உண்மையில் நிட்த்திரை கொள்வது மனதுக்கு பெரிதும் நிம்மதியைத்தருகின்றது
அருமையானக் கட்டுரை
பல பயனுள்ள பழக்க வழக்கங்கள்...

முடிவில் முக்கியமானதில் ஒன்று...

நன்றி...
நல்ல பதிவு.