நாம் அனைவரும் ஐந்தில் ஒருவரே - உயர்மொழி இயக்குனர் பேட்டி


ஜந்தில் நீங்கள் எந்த வகை ? நான்,நீங்கள் அனைவரும் ஆயிரத்தில் ஒருவனோ லட்சத்தில் ஒருவனோ கிடையாது, என்கிறார் உயர்மொழி இயக்குனர் ராஜா....

 இந்திய சினிமாவில் முதல் முயற்சியாக டிஎன்ஏ எனப்படும் உயிர்மூலக் கூறுகளை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள காதல்கதை `உயிர் மொழி’ மனிதனின் மரபுப் பண்பு கள் பனிக்காலம்–Ice Age , கற்காலம் Stone Age Kings Age ,அரசர்காலம் ,என்று பயணித்து அவனது தலைமுறை தலைமுறையாக நடந்து கொண்டிருப்பதுதான் `டிஎன்ஏ’வின் தலையாய கடமை.

நாம் அனைவருமே `புரோகிராம்’ செய்யப்பட்ட பொம்மைகள்தான்.

டிஎன்ஏ என்றால் என்ன? அதன் உள்ளடக்கம் என்ன? செயல்பாடுகள் என்ன? என்பதை விரிவாக, அதே நேரம் மிகத் தெளிவாக தகவல்களை அளிக்கும் படமாக உருவாகியிருக்கிறது `உயிர்மொழி’.தாய்மொழி என்பது பேசும் வார்த்தைகளின் தொகுப்பு. உயிர்மொழி என்பது உணர்வுகள் மற்றும் உடற்கூறுகளின் தொகுப்பு, உலகம் உருவான கதை ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருப்பது வேறு, மரபியல் சொல்வது வேறு. அறிவியலின் படி பார்த்தால் நாம் அனைவருமே `புரோகிராம்’ செய்யப்பட்ட பொம்மைகள்தான்.
திசைகள் 4. சுவைகள் 6 என்பது போல டிஎன்ஏக்களில் 5 வகைகள்தான் உள்ளன. அப்படிப்பார்க்கப் போனால் உலகில் ஆயிரத்தில் ஒருவனோ லட்சத்தில் ஒருவனோ கிடையாது, அனைவரும் ஐந்தில் ஒருவரே.ஆல்பா, பீட்டா, காமா, டெல்டா மற்றும் ஒமேகா ஆகிய ஐந்து டிஎன்ஏ வகைகளுக்குள் அடங்கியதே மனித இனம். ஆல்பா - சுய நலம் தவிர்த்தவன், பிறர் நலம் விரும்பி, பீட்டா - தன்வாழ்க்கை, தன் குடும்பம் என்று யோசிப்பவன். காமா - கலக்கம், குழப்பம், தயக்கம், சங்கோஷம், தெளிவில்லாதவன். டெல்டா - நிழல் வாழ்க்கை நடத்தி அனைவருக்கும் தன் அசல் முகம் காட்டாதவன். ஒமேகா - எதையும் அலட்டிக்கொள்ளமாட்டான். நம்ம நேரம் சரியில்லை போல, இது கிடைக்கவில்லை, பரவாயில்லை அடுத்ததைப் பார்ப்போம் என்று இருக்கும் அப்பிராணி.இந்த ஐந்து டிஎன்ஏயின் மூலக்கூறுகளின் அடிப்படையில் ஐந்தேவிதமான மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்றாலும் காலமும் சூழ்நிலைகளும் மனிதன் வாழ்வில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. இதனை மையமாக வைத்து ஒரு காதல் கதையாக எடுக்கப்பட்ட படம்தான் உயிர்மொழி.

ஐந்து ஆண்கள், ஐந்து பேரும் ஐந்து ரகம், அவர்கள் வாழ்க்கையில் ஒரு பெண் குறுக்கிடுகிறாள். அவளை அனைவரும் காதலிக்கிறார்கள். அருகருகே இருந்தாலும் அந்த ஐந்து பேருக்குள்ளும் தொடர்பு கிடையாது. ஆகையால் ஒருவர் காதலிப்பது மற்றவருக்குத் தெரியாது. இந்த ஐந்து பேரில் அவள் யாரைக் காதலிக்கிறாள் என்பதும் ஐந்து பேரின் வெவ்வேறு வகையான டிஎன்ஏ மூலக்கூறுகள் உள்ளே உட்கார்ந்து கொண்டு அவர்களை ஆட்டுவிக்கும் மாயாஜாலங்களுமே படத்தில் சுவாரஸ்யம்.காதல், பாசம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, அதிர்ச்சி என எல்லாம் கலந்த அழகான கலகலப்பான படமாக இருக்கும், அத்துடன் திரைக்கதையுடன் பின்னப்பட்டுள்ள டிஎன்ஏ அம்சம் படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என்கிறார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் ராஜா.இவர் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர். பல விளம்பரப்பட நிறுவனங்களில் கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றி இருப்பவர், ஷண்முகப்பிரியா தயாரிக்க புதுமுகங்கள் நடிக்கிறார்கள்.

இயக்குனர் ராஜா பேட்டி

உயிர்மொழி’ படம் பற்றி இயக்குனர் ராஜா கூறியது. தென் ஆப்ரிக்காவில் வேலை செய்துகொண்டிருந்தபோது டிஎன்ஏ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரிபவரிடம் நட்பு ஏற்பட்டது. உலகில் உள்ள மனிதர்களின் குணங்கள் 5 டிஎன்ஏக்களில் அடங்கி விடும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக கூறினார். ஆல்பா (தியாகம்), பீட்டா (சுய நலம்), டெல்டா (சைக்கோ), காமா (குழப்பவாதி), ஒமேகா (அறியாமை) இவைதான் அந்த குணங்கள். பனிகாலம் (ஐஸ்ஏஜ்), கற்காலம் (ஸ்டோன் ஏஜ்), மன்னர் காலம், நவீன உலகம் என காலங்கள் மாறி இருக்கிறது.
ஐஸ் ஏஜ் எனப்படும் பனிக்காலத்தில்தான் ஆல்பா குணம் கொண்டவர்கள் வாழ்ந்தவர்கள். தற்போது உலகில் எந்த இடத்திலும் அந்த குணம் உடையவர்கள் கிடையாது. அதிகபட்சமாக டெல்டா எனப்படும் சைக்கோ குணம் கொண்டவர்கள்தான் இருக்கிறார்கள். அதிலும் பெண்கள் அதிகம். இந்த விவரம் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த கருவை மையமாக வைத்து ‘உயிர்மொழி’ ஸ்கிரிப்ட் அமைத்திருக்கிறேன். இது விஞ்ஞான கதை கிடையாது.காதல் கதைதான்.

ஆச்சரிய செய்தி

ஜீன்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மனிதர்களை படியெடுக்கிறது எனகிறார்கள் விஞ்ஞானிகள்.ஆதாவது ஜெராக்ஸ் எடுக்கிறது. நீங்கள் உங்கள் பாட்டனை போலவோ,அல்லது பூட்டனை போலவோ, அவருக்கிருந்த மச்சம்,முடிவழுக்கை, உடல் தோற்றம் அப்படியே அச்சுஅசல் அவரை ஜெராக்ஸ் எடுக்கிறது ஜீன்கள்


ஏழாம் அறிவு படத்தின் கதை தவறு 
ஏழாம் அறிவு படத்தில் நாம் பார்த்த டி.என்.ஏ. விஷயம் பற்றி கேட்டபோது, அந்தபடம் பற்றி கருத்து சொல்ல விரும்பவில்லை, ஆனா அதுக்கும் டி.என்ஏ.வுக்கும் எந்தசம்பந்தமில்லை என்று மட்டும் சொல்ல முடியும் என்கிறார். ஆக ஏழாம் அறிவில் சொல்லபட்டதை போல போதிதர்மரின் டி.என்.ஏ.வை எடுத்து மற்றவர் உடலில் செலுத்தினால் போதுதர்மரின் அறிவு,ஆற்றல் கிடைக்காது. அறிவு என்பது தனிமனிதனின் அனுபவத்திலிருந்து கிடைப்பதே.தலைமுறை ,தலைமுறையாக டி.என்.ஏக்கள் மூலம் கிடைபதல்ல அறிவு.
- சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத


ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

நல்ல அலசல்...

டி.என்.ஏ. - விளக்கங்கள் அருமை...

இயக்குனர் ராஜா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... (பகிர்ந்து கொண்ட உங்களுக்கும்)
ஆத்மா said…
புதியதிரு சினிமாவினை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள்..
நிச்சயம் தமிழ் சினைமாவுக்கு ஒரு மாற்றத்தை இது ஏற்படுத்தும் என நினைக்கிறேன்
Anonymous said…
இது என்ன முட்டாள்தனமாக இருக்கிறது. பழையகால சினிமாக்களில் ஹீரோ குணம், வில்லன் குணம் காமெடி குணம் என பிரித்து பிரித்துப் பார்ப்பது போல இருக்கிறது.

எல்லா மனிதர்களும் இந்த ஐந்து இயல்புகளும் கலந்தே இருப்பான். தியாகி என நம்பப்படும் காந்தி கூட, பல நேரங்களில் சுயநலமாக நடந்து கொண்டது உண்டு. முக்கியமாக தன் பனியா சாதியினரின் மேல் கொண்ட பற்று, பாசம்.
அதுபோல, சாதி இல்லையடி பாப்பா என பாடிய பாரதி கூட, தலித்களை கண்டபடி திட்டி, தன் பத்திரிகையில் எழுதியது உண்டு.
வில்லன் என கருதப்படும் ராவணனிடம் கூட பல நல்ல குணங்கள் உண்டு.

முதலில் இயக்குநர் ராஜா டிஎன்ஏ பற்றி முழுவதுமாக கற்று படம் எடுக்கவும். இப்படி அரைகுறையாக கற்று, தமிழர்களைக் குழப்ப வேண்டாம்.