கமலின் பெர்சனல் முகம்


உலகநாயகன்,ஆஸ்கார்நாயகன் என ரசிகர்களாலும், அவரின் நண்பர்களாலும் அன்போடு அழைக்கப்ட்ட கமல் தற்போது அதை உண்மையாக்க போகிறார். ஹாலிவுட் படம் இயக்கும் வேலையை துவங்கியிருக்கும் கமல் இந்திய சினிமாவில் ஒரு உதாரணம். வெற்றி, தோல்விகளை கணக்கில் கொள்ளாமல், பணம் சம்பாதிக்க மட்டுமே சினிமாவை பயன்படுத்தாமல் புதிய உத்திகள், கருத்துகள், சில சோதனை முயற்சிகள் என தொடர்ந்து இயங்கிவரும் கலைஞன். கமலுக்கு பல முகம் உண்டு கவிஞர், பாடகர்,நடிகர், இயக்குனர் என. அந்த கலைஞனின் பெர்சனல் முகம் ....



  • பொய் சொல்லுவது பிடிக்காது, எப்போதும் எதிராளியின் கண் பார்த்துதான் பேசுவார்.பேசும் போது எச்சில் முழுங்கிக்கிட்டே பேசினால் பொய் சொல்றாங்கனு அர்த்தம் என்பார்.
  • சாதத்ஹசன்மண்டோ படைப்புகள் ரொம்ப விருப்பம். அவரது படைப்பின் அசல் ருசியை உணர உருது கற்றுக்கொண்டார்.


  • சைனீஸ் வகை உணவுகள் அவ்வளவு இஷ்டம். இநேகமாக கமல் உண்டிக்காத ஜீவராசியே இருக்காது.அதே ஆர்வம் பழங்களின் மீதும் உண்டு.டயட் மீது நம்பிக்கை கிடையாது.வயிறு நிறைய சாப்பிட்டு சேகரித்த கலோரியை எரித்துவிட்டால் போதும் என்பார்.


  • நடிகர் தாமு ஒருமுறை  மிமிக்ரிபற்றி கமலிடம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது மிமிக்ரியில் எத்தனை வகையுண்டு? உலகப் பிரபல மிமிக்ரி கலைஞர்கள் யார்? மிமிக்ரி பற்றிய தகவல்களை பகிரும் இணையதளங்கள் எவை ,எவை... என்று கமல் கொடுத்த நீண்ட விளக்கத்தை  கேட்டு ஆச்சர்யத்தில் அசந்துவிட்டார் தாமு. கமலின் பலதுறை அறிவுக்கு இது ஒரு சாம்பிள்.


  • தினமும்  காலை இரண்டு மணி நேரம் யோகா, எவ்வளவு அவசர வேலையாக இருந்தாலும் யோகாவைத் தவறவிடமாட்டார்.பிறகு நண்பர்களுடன் சந்திப்பு.தொடர்ந்து படிப்பு,படிப்பு,படிப்பு... புத்தகத்தில் முக்கியமான கருத்துக்களை அடிக்கோடிடுவார்.காலத்துக்கும் அந்த புத்தகம் மனதில் பதித்த கருத்துகளை மறக்கமாட்டார்.


  • தினமும் மாலை மூன்று மணிநேரம் ஜிம்மில் பழியாகக்கிடப்பார். திருமண வரவேற்பு ,மற்ற நிகழ்ச்சிகளில் கடைசியாக வந்து கலந்து கொண்டு வாழ்த்த இதுவே காரணம். வெளிநாடு,வெளியூர் என எங்கு சென்றாலும் அவருடைய உடற்பயிற்சியாளர் சூரிக்கும் ஒரு டிக்கெட் உண்டு.


  • ட்விட்டரில் கமல் இல்லை,ஆனால் ஃபேஸ்புக்கில்  இருக்கிறார், தினமும் ஒரு பார்வை பார்த்துவிடுகிறார்.
  • கடைசியாக பார்த்த தமிழ்படம்  ''ஒருகல் ஒரு கண்ணாடி'' விரும்பி அழைத்தால் போவார். மற்றபடி அவர் தினமும் பார்க்கும் அசல் சினிமாக்கள் வேறு ரகம்.


  • மும்பையில் இருக்கும் ஸ்ருதி,அக்ஷரா இரு மகள்களும் அடிக்கடி அப்பாவை பார்க்க மட்டுமே சென்னை வந்து செல்வார்கள். அவர்களுக்கு கமல் நெருக்கமான நண்பர் மட்டுமே.நோ அட்வைஸ்... நோ கண்டிப்பு..


  • சினிமா சம்பந்தப்பட்ட விழாக்களில்  அடிக்கடி பார்க்க முடியாது.சினிமா நண்பர்களுடன் தினசரித் தொடர்பும் இருக்காது. ஆனால் ஆச்சர்யமாக சினிமாவில் அத்தனை கிசுகிசு ரகசியங்களும் அறிந்துவைத்திருப்பார்.


  • ''மையம்'' வெப்சைட் விரைவில் தளம் இறங்கலாம், சினிமா, இலக்கியம், சார்ந்த ரசனைகளுக்கே முன்னுரிமை,இதற்காகவே பிரத்யோகமாக ஜெயகாந்தன், தொ.பரமசின், மறைந்த ரா.கி.ரங்கராஜன் ஆகியோரிடம் நீண்ட நேர்காணல்களை பதிவு செய்து வைத்திருக்கிறார்.
  • பக்கா நாத்திகர்.கோயிலுக்கு செல்கிறார் என்றால் அன்று அங்கே படப்பிடிப்பு இருக்கும்.


  • முன்பு நகேஷ் நெருக்கமான நண்பர். வயசு வித்தியாசம் இல்லாமல் சகலமும் கதைப்பார்கள். இப்போது பேச்சாளர் கு.ஞானசம்பந்தன் செம தோஸ்த்.


  • தனது ரேஞ்ச் ரோவர் காரை மித வேகத்தில் தானே செலுத்துவார். அலுவலகத்தில் அவருக்குப் பிடித்தமான மேட்ச்லெஸ்பைக் கம்பீரமாக நிற்கிறது. ''ஹராம்'' படத்தில் பயன்படுத்தத் தேடிய போது கிடைத்த அந்தபைக் கமல் பிறந்த வருடமான 1954 வருட மாடல், எனவே அது அவருக்கு டபுள் ஸ்பெஷல்.


  1. நவம்பர் 7 பிறந்த நாளன்று ரசிகர்களை சந்திப்பார். அப்போது கூர்ந்து கவனித்தால். அவரது கண்களில் சின்ன சோகத்தை காணலாம். அந்தத் தேதியில்தான் அவருடைய பிரியமான அப்பா இறந்த நாளும் கூட...


நன்றி.. ஆனந்தவிகடன்

உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

mathuran said…
//அவர்களுக்கு கமல் நெருக்கமான நண்பர் மட்டுமே.நோ அட்வைஸ்... நோ கண்டிப்பு.. //

என் நண்பன் கூட இப்படித்தான் கூறுவான், ஏனென்று கேட்டேன். அவன் சொன்னான். அவர் அட்வைஸ் ,கண்டிப்பை நான் பொருட்படுத்துவதில்லையே!
இது தானுங்க உண்மை. கமலிடமே கேட்டுப் பாருங்க!
|| பக்கா நாத்திகர்.கோயிலுக்கு செல்கிறார் என்றால் அன்று அங்கே படப்பிடிப்பு இருக்கும். ||

NO, It's for an image he tried hard to portray about him.
தெரியாத செய்திகள்..அறியத் தந்தமைக்கு நன்றி
சாதி இனம் பாராமல் எல்லோரிடமும் சரிசமமாகப் பழகுபவர் கமல்.
தன் திரைப்பட வெற்றிக் கூட்டணியில் சுஜாதா, கிரேசி மோகன், மணிரத்தினம், ஷங்கர், மதன் - போன்ற பிறஜாதி தோழர்களை வைத்துக்கொண்டு, எல்லோருக்கும் முன்மாதிரியாகத் திகழ்பவர்
karges said…
கலாய்ச்சுடாராமாம்... good try வாலிபள்
karges said…
காலாய்ச்சுடாராமாம்... good try வாலிபள்
vivek kayamozhi said…
கு.ஞானசம்பந்தம் வேறு சாதி, ஆர்.சி.சக்தி வேறு சாதி, ஜெயமோகன் வேறு சாதி, சந்தானபாரதி வேறு சாதி..இவர்கள் தான் கமலின் ப்ரிய நண்பர்கள். மணிரத்னம் நண்பர் அல்ல, சங்கர் கமலின் சாதியுமல்ல,நண்பரும் அல்ல.அவர்களுடன் ஒரே ஒரு படத்தில் தான் இணைந்து இருக்கிறார்.
பஞ்சு, இளைய ராஜா, நாகேக்ஷ் போன்றோர் தான் கமலுக்கு நெருக்கமானோர்
பின்னூட்டம் இடும்போது சற்று ஆராய்ந்து பதிவிடுங்கள்.