இறந்தவர்களுக்கு உயிர் கொடுக்கும் புதிய கண்டுபிடிப்பு


நமக்கு பிரியமானவர்கள் இறந்து போனால் நாம் படும் துன்பம் கொடுமையானது, அவர்கள் மீண்டும் உயிருடன் வந்தால் எப்படி இருக்கும்? இந்த கனவை மெய்பிக்கும் புதிய கண்டுபிடிப்பு வரவுள்ளது.
மரணம் என்றாவது ஒரு நாள் வெல்லப்படும் என்ற எதிர்பார்ப்பில் அதி நவீன கிரையோஜெனிக் முறையில் மனித உடல்களை பதப்படுத்தி பத்திரமாக பாதுகாத்திடும் புதுமையான வழக்கம் தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் பிரபலமாகி வருகிறது.
எதிர்கால அறிவியல் வளர்ச்சியால் இறந்தவர்கள் மீண்டும் உயிர் பிழைத்திடலாம் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளிடையே வேரூன்றி இருப்பதை மனதில் கொண்டு தற்போது இறந்திடும் மனிதர்களின் உடலை பதப்படுத்தி பத்திரமாக வைத்திடும் வழக்கம் தற்போது ஏற்பட்டுள்ளது. விஞ்ஞானமும்,மருத்துவமும் ஒன்று சேர்ந்து வளர்ந்திடும் போது இன்னும் 20 ஆண்டுகளில் மரணத்தை விஞ்ஞானிகள் வென்று விடுவார்கள் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் துளிர் விட்டு வருகிறது.
அப்படி ஒரு நிலை உருவாகிடும் போது பதப்படுத்தி வைக்கப்பட்டுள்ள தங்களது பிரியமானவர்களின் உடலுக்கு மீண்டும் உயிர் கிடைத்திடும் என்று நம்புகிறவர்கள் உலகில் இருக்கத்தான் செய்கின்றனர். இது பற்றிய அதிசய தகவல்கள்இதோ....
வீடு வரை உறவு, வீதி வரை மனைவி, காடு வரை பிள்ளை, கடைசி வரை யாரோ? என்ற அர்த்தமுள்ள பாட்டிற்கு இன்று வரை விடை கிடைத்திடாத நிலையில் மனித வாழ்வு என்பது நிலையில்லாத ஒன்றாக உள்ளது. மனிதனின் பிறப்பையும், இறப்பையும் இன்று வரை யாராலும் கணித்து சொல்ல முடியாததாகவே உள்ளது. வயது அதிகரிப்பதன் காரணமாக மனிதனின் உடல் தளர்ந்து முதுமை ஏற்பட்டு இறுதியில் மரணம் ஏற்படுகிறது.
இது தவிர விபத்துக்களில் சிக்கி உடல் சிதறி அகால மரணம் அடைதல் மற்றும் இதர பழக்கவழக்கங்கள், நோய்கள் காரணமாக உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு மரணங்கள் ஏற்படுவது வழக்கமாக உள்ளது. மனித உயிர்களை பறிக்கும் நோய்களில் இதய நோயும், சிறுநீரக நோயும் முக்கியமானதாகும். இந்த நோய்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் ஆபரேசன் சிகிச்சை முறைகள் இருந்தாலும் பெரும்பாலும் அவை பலனளிப்பதில்லை. இந்த சூழலில் மாற்று சிறுநீரகம் அல்லது செயற்கை இருதயம் பொருத்தினாலும் குறிப்பிட்ட காலத்திற்குள்ளாக மனிதர்களை மரணம் வென்று விடுகிறது.

ஒவ்வொரு காலகட்டத்திலும் புதிய புதிய மருந்துகள் மற்றும் புதிய மருத்துவ முறைகள் கண்டுபிடிக்கும் போது இந்த முறை சில ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் நமது அன்புக்குரியவர்களை மரணத்தில் இருந்து காப்பாற்றி இருக்கலாம் என்ற நினைப்பு நம்முள் வருவது சகஜம். இது போன்ற நிலையில்தான் இறந்து போனவர்களின் உடலை பதப்படுத்தி மீண்டும் உயிரூட்டுவதற்காக காத்திருப்பதுதான் கிரையோஜெனிக் முறையாகும். இயற்கையான முறையில் மரணம் அடைந்த ஒருவரது உடலை குளிர் நிலையில் பதப்படுத்தி பத்திரப்படுத்துவதுதான் கிரையோஜெனிக் முறையின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி கிரையொஜெனிக் முறையில் பதப்படுத்தி வைக்கப்படும் உடல்கள் வருங்காலத்தில் இறந்தவர்களை பிழைக்க வைக்கும் ரகசியங்கள் கண்டுபிடிக்கப்படும் போது இந்த உடல்களுக்கு நிச்சயமாக உயிர் கொடுத்திட முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மனிதர்களுக்கு மரணம் என்பது பொதுவாக பல வழிகளில் ஏற்படுகிறது. ஆனால் பொதுவாக மரணம் என்பது இருதய துடிப்பு நின்று விடுவதுதான். இருதயம் நின்று போன பின்னர் உடலின் மற்ற பாகங்களுக்கு ரத்தம் செல்வது முற்றிலும் தடைபட்டு விடுகிறது. இதனால் இதயம் நின்று போன சில மணி நேரங்களுக்கு மூளையின் முக்கிய திசுக்கள் உயிரோடு இருக்கும். இந்த மூளை திசுக்களை சேதமின்றி பாதுகாப்பதுதான் கிரையோஜெனிக் முறையாகும்.
இந்த தொழில்நுட்பத்தின் படி ஒருவர் மரணம் அடைந்ததும் அந்த உடலை பாதுகாக்க விரும்பினால் கிரையோஜெனிக் முறையில் உடலை பதப்படுத்திட ஏராளமான கம்பெனிகள் அமெரிக்காவில் புற்றீசல் போல் தோன்றியுள்ளது. இதில் முன்கூட்டியே பணம் செலுத்தி பெயரை பதிவு செய்து கொள்வோர் இயற்கை மரணமடைந்த தகவல் கிடைத்தவுடன் விரைந்து செயல்படும் நிறுவனங்கள் இறந்தவரின் உடலை தங்களது அலுவலகத்திற்கு எடுத்து வந்து பதப்படுத்துகின்றனர். அப்போது உடலின் திசுக்கள் மற்றும் பிற பாகங்களில் உள்ள தண்ணீர் விஞ்ஞான ரீதியில் அகற்றப்படுகிறது. திசுக்களில் இருக்கும் தண்ணீரால்தான் உடல் அழுகி விடுகிறது. எனவேதான் உடலில் உள்ள தண்ணீரை அகற்றும் பணி முதலில் நடைபெறுகிறது.

அதன் பிறகு உடலுக்குள் கிளிசரால் மற்றும் ரசாயன கலவைகள் செலுத்தப் படுகிறது.  இதன் மூலம் உடல் குளிர் விக் கப்படும் போது உறை நிலையில் உடல் பனிக் கட்டியாக மாறுவது தடுக்கப்ப டுகிறது. மேலும் சாதாரண நிலைக்கு உடலை கொண்டு வரும் போது அது எந்தவித மாற்றமுமின்றி பழைய நிலைக்கு வர ரசாயன கலவை கைகொடுக்கிறது. இது போன்று உடலை பதப்படுத்திய பின்பு அதை குளிர வைக்கும் பணி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து பாடம் செய்யப்பட்ட உடல் குளிர் பெட்டகத்தில் பாதுகாப்பாக வைக்கப்படுகிறது. குளிர்பதன அறையில் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உடல் குளிர்விக்கப்படுகிறது. மேலும் உடலை பாதுகாத்திடும் வகையில் திரவ நைட்ரஜன் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மைனஸ் 196 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர்விக்கப்பட்டாலும் உடல் பனிக்கட்டி போல் உறை நிலையை அடையாததுடன் மூளையில் உள்ள திசுக்களும் பாதுகாக்கப்படுகிறது.
அமெரிக்காவில் தோன்றி தற்போது உலகம் முழுவதிலும் பரவிக் கொண்டிருக்கும் கிரையோஜெனிக் முறைப்படி உடலை பதப்படுத்திட பலர் ஆர்வம் காட்டினாலும் இதுவரையில் யாரையும் உயிர்ப்பிக்கும் சாதனை இன்று வரை விஞ்ஞானிகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது. இருப்பினும் அதிநவீன நானோ தொழில்நுட்பம் மூலம் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் எழுப்பிடும் காலம் விரைவில் வந்தே தீரும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர். ஏனென்றால் நானோ தொழில்நுட்பம் மூலமாக சேதமடைந்த மனித திசுக்களை நவீன ஜெனிடிக் முறையில் புதுப்பித்திட முடியும் என தற்போதைய ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. நானோ தொழில்நுட்ப ஆராய்ச்சிகள் இதே வேகத்தில் செல்லுமேயானால் 2040 ம் ஆண்டிற்கு உள்ளாக இறந்தவர்களை மீண்டும் உயிரூட்டிடும் அதிசயம் நிச்சயம் நடக்கும் எந்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிறந்தவர் அனைவரும் இறப்பது உறுதியான ஒன்றாகும். உலகம் தோன்றிய நாளில் இருந்து இவ்வுலகில் பிறந்த அனைவரும் இறந்துதான் போனார்கள். இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவரும் இறக்கத்தான் போகிறார்கள். உலகம் அழியும் வரை இனி பிறக்கப் போகிறவர்களும் இறப்பது நிச்சயம். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒருவருக்கும் ஒருபோதும் சந்தேகம் இல்லை. ஆனால் என்றாவது ஒரு நாள் மரணம் வெல்லப்பட்டு விடும். அப்போது அதிநவீன கிரையோஜெனிக் முறையில் பதப்படுத்தப்பட்டு பத்திரமாக இருக்கும் பிரியமானவர்களின் மனித உடல்கள் உயிருடன் எழுப்பப்பட்டு விடும் என்பது மிகவும் எதார்த்தமான நம்பிக்கையாகும். காத்திருப்போம். மரணம் வெல்லப்படும் நாளை எதிர்நோக்கி....
தொகுப்பு
செல்வராஜ்


உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
http://englishlteacher.blogspot.com/
நல்ல தொகுப்பு..ஆனால் இது சுவாரஸ்ய துக்குத்தான் உதவுமே தவிர என்ன கண்டுபிடிப்புகள் வந்தாலும் மரணத்தை வெல்ல முடியாது....
ஆத்மா said…
என்னதான் விஞ்ஞானிகள் ஒற்றக்காலில் நின்றாலும் உயிர் கொடுக்கும் விடயத்தில் இறைவன் நாடினால் மட்டுமே அது முடியும்...
இன்னும் சொல்லப்போனால் இறைவனால் மட்டுமே முடியும்..

நல்ல பகிர்வு
Anonymous said…
Every human being has to face death. Till this world come to an end, this process will go on. Scientific and technology have some limit.
Anonymous said…
வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த உலகில் நமக்கே இடம் எது??
இது வேறயா... இந்தப் பிறப்பே போதாதா...?