உலக அளவில் சிறந்த 10 படங்களில் மணிரத்தினத்தின் ''நாயகன்'' இடம்பிடித்துள்ளது. அவரின் படங்கள் சினிமா கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு பாடமாக உள்ளது. ஆனால் மணிரத்தினம் சினிமா குறித்த ஆர்வத்தை மட்டுமே வைத்துக்கொண்டு சினிமா துறைக்கு வந்தவர்,யாரிடமும் அசிஸ்டென்டாக கூட இருந்ததில்லை.அவரின் பெர்சனல் தவகவல்கள்...
- மணிரத்தினத்தின் இயற்பெயர் சுப்பிரமணி,அப்பா பெயர் ரத்தினம் இரண்டின் மிக்ஸிங்தான் மணிரத்தினம்.
- பேருந்து பயணம் மணிரத்துக்குப் பிடித்த விஷயம், வெளிமாநிலங்களில் தொப்பியும் ,மஃப்ளரும் அணிந்து கொண்டு பேருந்துகளில் தான் பயணிப்பார்.அவர் படங்களில் ஒரு கேரக்டர் பேருந்தில் பயணிப்பது போன்ற காட்சி நிச்சயம் இடம் பெறும்.
- ஆச்சர்யமாக கடல் படப்பிடிப்பில் வழக்கத்தை விட அதிகமாகவே கோப்படுகிறார் மணி, அவரது யூனிட் ஆட்களுக்கே இது புதுசு.ஆனால் பேக்கப் சொன்ன பிறகு,உதவியாளர்கள் அருகில் வந்து தோள்தட்டி ரொம்ப''கோபப்பட்டுட்டேன்ல... ஸாரி'' என்கிறார்.
- குடும்பத்தின் கடைசி பிள்ளை மணி. இனியும் குழந்தை வேண்டாமே, என நினைத்த அவர் அம்மா கோயிலை சுற்றி வேக வேகமாக நடப்பாராம். கரு இயற்கையாகவே கலைந்துவிட்டால் நல்லது என்பதுதான் அந்த நடைப்பயிற்சிக்குக் காரணம். ஆனாலும் ஆரோக்கியமாகவே பிறந்தார் மணி. அதனால் அவரை ''தெய்வக்குழந்தை'' என்றே நினைத்தார்கள் அருவருடை குடும்பத்தினர். சில வருடங்களுக்கு முன் இதய நோய் காரணமாக மணிரத்னம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு எதுவும் ஆகாது என அவர்கள் ஆழ்ந்த நம்பிக்கையில் இருந்தார்கள்.
- வீட்டிலும் நண்பர்களுடனான சந்திப்பிலும் 95 சதம் ஆங்கிலத்தில்தான் பேசுவார். ஆனால் அவருடைய படங்களில் குழந்தைகள் பேசிக்கொள்வதாக இருந்தால் கூட ஆங்கில வசனங்கள் இருக்காது. மம்மி, டாடி என்பதற்கும் தடா.
- செடிகள் மீது குழந்தைகளின் பிரியத்தைக் காட்டுவார் மணி, கண்முன் யாரேனும் செடியின் இலையை கிள்ளி விட்டால்க்கூட பதறுவார்.நண்பர்களுடன் ரிலாக்ஸாக மனம் விட்டுப் பேச மணி தேர்தெடுக்கும் இடத்தின் பின்னணியில் எப்போதும் செடிகள் இடம் பிடிக்கும்.
- ''இதயத்தைத் திருடதே'' படத்தில் இருந்து இவரிடம் உதவி இயக்குனர் அந்தஸ்தில் பணி புரிந்த யூ.வி.மணிக்கு இப்போது வயது 80. தன் தந்தை ஸ்தானத்தில் அவரை மதிக்கும் மணி அவருக்கு அலுவலகத்தில் தனி அறை கொடுத்திருக்கிறார்.
- இவருக்கு ''கடவுள் நம்பிக்கை இருக்கிறதா... இல்லையா'' என்று முடிந்தால் கண்டுபிடித்து பாருங்கள்.
- சினிமாவில் சென்டிமென்டை உடைப்பதென்றால் அவ்வளவு உற்சாகம்.படத்திற்கு அக்னிநட்சத்திரம் என பெயரிட்ட போது, படம் ஓடாது... அந்த பெயரை மாற்றுங்கள் என்று பல தரப்புகளில் இருந்தும் அறிவுரை,இறுதிவரை தன் முடிவில் உறுதியாக இருந்தார்.
- பெரும்பாலும் தமிழ்படங்கள் பார்க்கவேமாட்டார், பார்த்த படங்களில் மிகவும் பாதித்தபடம் ''நான்கடவுள், நல்லா இருக்குல்ல'', என்று சொன்னார். சமீபத்தில் ''எங்கேயும் எப்போதும்'', ''வழக்குஎண் 18\9'' படங்கள் பார்த்திருக்கிறார்.
- தமிழகத்தில் ஃபேஸ்புக் பிரபலமாவதற்கு முன் அதில் அதில்தீவிரமாக இயங்கிவந்தார். இப்போது அவருடைய நண்பர்களுக்கு மட்டும் தெரிந்த ஐ.டி.யில் இருக்கிறார். அதிலும் அவ்வளவு ஆக்டிவ்வாக இல்லை.
- இப்போது பிடித்த ஹீரோ தனுஷ் ரியாலிஸ்டிக் ஆக்டர் என்பார்.
- எப்போதும் பிடித்த ஹீரோ ஹீரோயின் அரவிந்தசாமி - ரேவதி
- நெருங்கிய நண்பர்கள் பி.சி.ஸ்ரீராம்(வாடா போடா நெருக்கம்) ஜெயந்திரா, சங்கர்சுந்தரம்
- படத்தின் வசனங்களை போலத்தான் அருவருடைய பேச்சும் இருக்கும், எல்லாவற்றுக்கும் புன்னகைதான்.கோபமாக இருந்தால் ''மடப்பயலே, புத்திசாலித்தனமாகப் பேசதே'' என்பார். அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை ''ஃபாஸ்ட்... ஃபாஸ்ட்''
நன்றி விகடன்
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments