கூடங்குளம் பற்றி A TO Z புத்தகம் இலவச டவுன்லோட் செய்ய....

கூடங்குளம் அணுஉலை தமிழகத்தின் முக்கிய அரசியல் பிரச்சனைகளில் ஒன்றாக நீடித்து வருகிறது. தமிழகத்தில் நடைமுறையில் இருக்கும் மின்வெட்டு,அதனால் ஏற்பட்டுள்ள மின்தேவை, அணுஉலை எதிர்பாளர்களின் போராட்டம் என சிக்கல் நீடித்து வருகிறது. இதற்கிடையே கூடங்குளம் அணுஉலையில் தற்போது எரிபொருள் நிரப்பி இன்னும் சிறிது நாட்களில் முழுமையாக இயங்க துவங்கும் என்கிறார்கள். அணுஉலை வேண்டாம் என்ற நோக்கத்தோடு தொடர்ந்து களப்போரட்டத்தில் இருந்து வரும் எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன் எழுதிய ''கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்'' நூல் இன்றையவானம் வாசகர்களுக்காக முழுமையாக பி.டி.எப் பைல்களாக இலவசமாக டவுன்லோட் செய்யும் சுட்டி இந்த பதிவின் கீழ்பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. படித்து பாருங்கள் உங்கள் கருத்துகளை உடனடியாக பதிவு செய்யுங்கள். தொடர்ந்து இது போன்று முக்கிய நூல்கள் பி.டி.எப் பைல்களாக இன்றையவானம் பதிவில் கிடைக்கும் ......

கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள்...
டவுன்லோட் செய்ய கீழே உள்ள பெட்டியில் டவுன்லோடு என்ற வார்த்தைக்கு அருகே கீழ்நோக்கிய அம்புக்குறியை கிளிக் செய்யவும்


Koodankulam     எழுத்தாளர் அ.முத்து கிருஷ்ணன் பற்றி ....
தீவிர வாசகர்களுக்கு அ.முத்துகிருஷ்ணனை தெரியாமல் இருக்காது.புதிய வாசகர்களுக்கு அவரை பற்றி அறிமுகம் ..... எழுத்தாளர் முத்துக்கிருஷ்ணன் மதுரையைச்சேர்ந்தவர். விளிம்புநிலை மக்கள், சிறுபான்மையினர், சுற்றுப்புறச்சுழல், உலகமயம், மனித உரிமைகள் என பல தலைப்புகளில் தொடர்ந்து எழுதியும் இயங்கியும் வருபவர். தன் எழுத்துக்களுக்காகத் தொடர்ந்து கடந்த பத்தாண்டுகளாகப் பயணித்தும் வருபவர். இந்தியாவின் குஜராத், ஒரிசா, விதர்பா, ஜார்கண்டு, ஆந்திரம் என இந்தியாவெங்கும் களப்பணிக்காக மாதத்தின் பாதி நாட்கள் பயணத்தில் இருப்பவர். மிக அபூர்வமான பல தகவல்களைப் பார்வைகளைத் தமிழக வாசகர்களுக்கு வழங்கி வருபவர். தொடர்ந்து உயிர்மை, தலித் முரசு என பல இதழ்களில் எழுதியும் வருபவர், தன் எழுத்தின் ஒரு பகுதியாக முக்கிய படைப்புகளை தமிழுக்கு மொழியாக்கமும் செய்துள்ளார். குஜராத் இனப்படுகொலை குறித்த தெகல்கா ஆவணங்களை இந்திய மொழிகளில் முதலாவதாக தமிழல் நமக்கு வழங்கியவர். அத்துடன் அப்சலை தூக்கிலிடாதே, தோழர்களுடன் ஒரு பயணம் இவரது முக்கிய மொழியாக்க நூல்கள். ஒளிராத இந்தியா, மலத்தில் தோய்ந்த மானுடம் இவரது இரு கட்டுரைத் தொகுதிகள். அ.முத்துகிருஷ்ணன் டிசம்பரில் (2010) பாலஸ்தீன ஆதரவுக்குழு ஒன்றுடன் இணைந்து தரைவழியாக பாகிஸ்தான், ஈரான், துருக்கி, சிரியா, லெபனான், எகிப்து வழியாக பாலஸ்தீனம்வரைச் சென்று மகத்தான ஒரு பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியிருக்கிறார். மேலும் உயிர்மை இலக்கிய இதழில் இவர் எழுதிய யானைமலை குறித்த கட்டுரை மதுரை சுற்றியிருக்கிற 20க்கும் மேற்பட்ட தொல்லியல் தளங்களுக்கான மலைப்பயணத்தை துவக்க காரணமாக இருந்தது.இதுவரை 14 மலைப்பயணங்கள் முடிந்திருக்கின்றன.  
 அரவரை தொடர்பு கொள்ள 9443477353,
 மெயில் muthusmail@gmail.com
                                                                                                  தொகுப்பு -அ.தமிழ்ச்செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
டவுன்லோட் செய்கிறேன்... மிக்க நன்றி... வாழ்த்துக்கள்...