தினமும் தண்ணியடிப்பது நல்லது....


ஆரோக்கியமாக இருக்க தினமும் குறைந்தது 4 முறை தண்ணியடிக்க வேண்டும் என்கிறார்கள் ஜப்பான் மருத்துவர்கள். பல்வேறு நோய்களுக்கு மருந்து தினமும் தண்ணியடிப்பது தான்.

நீரின்றி அமையாது உலகம் என்பது வள்ளுவப்பெருந்தகையின் வாக்காகும். இதனை அடிப்படையாக கொண்டு தினமும் அதிகாலை உறக்கத்திலிருந்து எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உலகமுழுவதும் பிரபலமாகி வருகிறது. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட அளவு தூய்மையான தண்ணீர் குடிப்பதன் மூலம் பல்வேறு வியாதிகளை குணப்படுத்த முடியும் என்பதை ஜப்பானிய மருத்துவர்கள் நிரூபித்து காட்டியுள்ளனர்.
  இதேபோல் பழங்காலத்து கடுமையான வியாதிகள் மட்டுமின்றி தற்போது அதிபயங்கர நோய்களை கூட தண்ணீர் குடிக்கும் நீர்மருத்துவத்தின் மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும் என்பதை உலகலாவிய ஜப்பானிய மருத்தவ சம்மேளன்ம நிரூபித்துள்ளது.தலைவலி,  உடல்வலி,இதயநோய்கள், ஆர்த்தரைட்டிஸ், வேகமாக இதயதுடிப்பு, வலிப்பு உடல்பருமன், ஆஸ்துமா, மூளைக்காய்ச்சல், காசநோய், வாந்திபேதி, சிறுநீரக கோளாறுகள், வாய்வு, மூலவியாதி,சக்கரைவியாதி, கர்பப்பை புற்றுநோய், காதுமூக்குதொண்டை கோளாறுகள் கண்நோய்கள்  போன்ற வற்றுக்கு தண்ணீரை மருத்தாக அருந்திடும் நீர்மருத்துவம் 100 சதம் பயனளிப்பதாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர்.

நீர்மருத்துவமுறைகள்

காலையில் தூக்கத்திலிருந்து எழுந்ததும் பல்துலக்குவதற்கு முன்பை 4 கிளாஸ் (160மி.லி) தூய  தண்ணீரை குடிக்க வேண்டும்

பல்துலக்கி வாய்கொப்பளித்த பின் 45 நிமிடங்களுக்கு பின் உணவு நீராகாரம் வேறு எதையும் சாப்பிடக்கூடாது.

45 நிமிடங்களுக்கு கழித்து வழக்கும் போல் உணவு உட்கொள்ளலாம்.

காலை உணவுக்கு பின் 15 நிமிடங்களுக்கும், மதிய மற்றும் இரவு உணவின் பின்பு 2 மணி நேரத்திற்கு எதுவும் உட்கொள்ள கூடாது.

வயதானவர்கள் அல்லது நோயாளிகள் 4 தண்ணீரை எடுத்தவுடன் குடிக்க முடியாதவர்கள் ஆரம்ப கட்டத்தில் சிறது சிறதாக தண்ணீரை குடித்து நாளடைவில் 4 கிளாஸ் (160மி.லி ஜ் 4) நீர் அருந்தலாம்.

மேற்கண்ட நீர் மருத்துவமுறைகளை முறையாக பின்பற்றிடும் நோயாளிகள் தங்களது நோய்களில்ல இருந்து முற்றிலும் குணமடையலாம். மற்றவர்கள் ஆரோக்கிய வாழ்க்கையை சந்தோசமாக அனுபவிக்கலாம். எந்த விதமான நோய்க்கு எத்தனை நாட்கள் நீர் மருத்துவம் பின்பன்ற வேண்டும் என்பதை ஜப்பானிய மருத்துவர்கள் வெளியிட்டுள்ளார்கள். இந்த வழிமுறைகளை பின்பற்றினால் நோய்கள் முற்றிலும் குணமாகும். அல்லது நோயின் கடுமையை மட்டுப்படுத்திடும். உடல் வலுப்பெறும் என்பது உறுதி.

 உயர் ரத்த அழுத்தம் -    30 நாட்கள்    
வாய்வு கோளாறுகள்    10நாடகள்
சக்கரை வியாதி              30 நாட்கள்
மலசிக்கல்                        10 நாட்கள்
புற்றுநோய்                       180 நாட்கள்
 காசநோய்                         90 நாட்கள்

ஆர்த்ரைட்டிஸ்நோயாளிகள் முதல்வாரம் 3 நாட்களும், இராண்டாவது வாரத்திலிருந்து தினமும் இந்த  முறையை பின்பற்றிட அறிவுறுத்தப்படுகிறது.

உலகமுழுவதும் நீர்மருத்துவ முறை மிகவும் பிரபலமாகி வரும் சூழலில் இந்தியாவில் நீர்மருத்துவம் இந்தியாரில் அவ்வளவாக பிரபலமாக வில்லை. இதற்கு காரணம் ஆங்கில மருத்துவத்தின் தாக்கம் இது போன்ற இயற்கை மருத்துவ முறைகளை பிரபலமடைய விடாமல் செய்துவிடுகிறது. இருப்பினும் விழிப்புணர்வு அதிகம் உள்ள இந்தியாவின் பெருநகரங்களில் தற்போது நீர்மருத்துவம் முக்கிய இடம் பிடிக்க தொடங்கியுள்ளது.
                பக்கவிளைவுகள் எதுவும் நீர்மருத்துவ முறையில் கிடையாது. எனினும் நீரி மருத்துவத்திற்கு தூயநீரை தேர்வு செய்யவேண்டியது மிகவும் அவசியமாகும். இந்த மருத்துவத்தை மேற்கொள்ளும் போது இருக்கின்ற ஒரே பிரச்சனை அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்பது தான்.இருப்பினும் நீர்மருத்துவ முறையை நமது அன்றாட கடமைகளில் ஒன்றாக பின்பற்றினால் நோய்கள் நீங்குவது மட்டுமின்றி ஆரோக்கிய மான வாழ்க்கை நிச்சயம்.எனவை நீர்மருத்துவ முறைப்படி தினமும் நீர் அருந்தி ஆரோக்கிய மாகவும் , சுறுசுறுப்பாகவும் நிம்மதியாகவும் வாழ்வோம்.
- செல்வராஜ்

உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
பயனுள்ள பகிர்வுக்கு பாராட்டுக்கள்... (தலைப்பை தேர்ந்தெடுத்ததற்கும்)

நன்றி… தொடர வாழ்த்துக்கள்...
ஹைதர் அலி இவ்வாறு கூறியுள்ளார்…
தலைப்பு வைக்கும் போதே நினைத்தேன் இப்படி எதாவது இருக்கும்னு நான் கூட பைப்படியில் தண்ணீ அடித்தால் அல்லது கிணற்றில் தண்ணீர் இறைத்தால் ஆம்ஸ் கூடும் சரியான உடற்பயிற்சி என சொல்ல வர்றீங்கே என்று நினைத்தேன்.

அருமையான தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி
வரலாற்று சுவடுகள் இவ்வாறு கூறியுள்ளார்…
நானும் அப்படித்தேன் நினைத்தேன் சகோ :)
மே.இளஞ்செழியன் இவ்வாறு கூறியுள்ளார்…
Good health tips &idea... I start to drink ....water.
karthik sekar இவ்வாறு கூறியுள்ளார்…
விட்டில் இருந்து வருமானம் பார்க்க வேண்டுமா கவலைய விடுங்கள் உடனே நமது பணம்அறம் இணையதளதிற்கு வாங்க அதில் உள்ள ஆன்லைன் வேலைக்கு தேவையான உக்திகளை கற்று கொண்டு உங்கள் வருமானத்தை பெருக்குங்கள்........

பணம் அறம் இணையதளம்

ஆன்லைன் வேலை பற்றிய சந்தேகத்தை பதிவிட கிழே உள்ள லிங்கில் உங்களை உறுபினராக இணைந்து கொண்டு உங்கள் சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்

உதவிக்கு பயன்படுத்து லிங்க்