''கும்கி'' புதிய ஸ்டில்கள்

''கும்கி'' ரிலிசுக்காக காத்திருக்கிறது, அதன் இசை வெளியீட்டு விழாவே கமல்,ரஜினி கலந்து கொண்ட மிக பிரமாண்ட விழாவாய் நடந்து முடிந்திருக்கிறது. இதனிடையே கும்கி பட அனுவத்திலிருந்து இயக்குனர் பிரபுசாலமன் யானைகளை பற்றி நிறைய தகவல்களை சொல்கிறார். ஒரு புத்தகம் வெளியிடும் அளவுக்கு தகவல்கள்....

யானையின் வழித்தடப் பாதைகளை மறிச்சு ரிசார்ட்ஸ் கட்டியாச்சு.ஆழ்துளைக்கிணறுகள் போட்டு நிலத்தடி நீரை உறுஞ்சி யானைகளின் நீர்நிலைகளை எல்லாம் காலி பண்ணியாச்சு. ஒரு யானை மட்டுமே ஒருநாளைக்கு 300 லிட்டர் தண்ணீர் குடிக்கும்,ஆனா மூணு லிட்டர் தண்ணீர் குடிக்கிறதுக்காக நாம யானைகளை படுத்தியெடுக்கிறோம்.
காட்டுக்குள் இருந்து ஊர்பக்கம் வர்ற யானைகளை விரட்டி அடிக்க மனிதனால் பழக்கப்பட்ட யானைக்கு கும்கினு பேரு எதாவது ஒரு பகுதியில் யானைகள் புகுந்து அட்டகாசம், ரேசன் கடையை உடைத்து நொறுக்கியது, மனிதர்களை தாக்கியதுபத்தி ப்ளாஸ் நியூஸ் வந்து ஏதோ யானைகளை வில்லன் ரேஞ்சுக்கு கொண்டு வந்துட்டோம்.ஆனா நிஜத்தில் யானை ரொம்ப பாசமான ஜீவன், நேசிக்கதக்க மிருகம், ஆசாபாசம்,கோபம்,காதல், பழிவாங்கும் உணர்ச்சி, ஞாபசக்தி என மனிதனைக்கு இணையான மிருகம்,யானையை மிருகம் சொன்னக்கூட கூச்சமா இருக்கு.

 அந்த வாழ்வியல் சூழலில் ஒரு காதல் கதையை கும்கியில் சொல்லியிருக்கேன். யானைகளை பத்தி ஒரு புத்தகம் போடு அளவுக்கு அனுபவம் கிடைச்சிருக்கு, யானைபாகன்களோடு பேசினாலே கிடைக்கும் ஒவ்வொரு தகவலும் சுவராஸ்யமானது.

யானைக்கு சின்ன சத்தம் கேட்டாகூட பிடிக்காது அவ்வளவு அமைதி வானத்துலே திரயும். யானை மனிதர்களோட வாசத்தை பதிவு பண்ணி வச்சிருக்கும். பாகனோட வார்த்தைக்கு தான் கட்டுப்படும்.எங்கோ சோளம்,நெல் கிடைக்கும் அதுகளுக்கு தெரியும்,பரம்பரை , பரம்பரையா அதோட ஜீன்ல மேப்டூட் இருக்கும். பேச்சிலர் ஆண் யானைகள் மட்டுமே தனியா திருயும், பெண்யானைகல் அத்தை, மகள்,அம்மானு உறுவுகளோட திரியும் யானைகளை காதலிக்கிற ஹ¦ரோ,ஹீரோயினுக்கு கிடையிலான காதல்தான் கும்கிபடம்.



டூயட் பாடல்கள் எனது படங்களில் தவிர்க்கிறேன்

இயல்பான படங்களை உருவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் இயங்கி வரும் இயக்குநர் பிரபு சாலமன், தனது படங்களில் நாயகனும், நாயகியும் சேர்ந்து டூயட் பாடுவது போன்ற காட்சிகளை அறவே ஒழித்துவிட்டேன் என்கிறார்.உதவி இயக்குநராகத் தனது திரைப்பட வாழ்க்கையைத் துவக்கிய இயக்குநர் பிரபு சாலமன், கிங், கொக்கி, லீ, மைனா போன்ற படங்களை இயக்கியிருக்கிறார். கதாநாயகி, கதாநாயகன் வாயசைத்துப் பாடுவதையெல்லாம் என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. அதனால்தான் காலப்போக்கில் அவற்றைத் தவிர்த்து விடுகிறேன். கும்கியில் அத்தகைய அம்சங்கள் எதுவுமே இருக்காது என்கிறார்.

-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

நல்ல பதிவு யானைகளைப் பற்றி... வாழ்த்துக்கள்
அருமையாக எழுதியுள்ளீர்கள் ..
ADMIN said…
அருமை.
  •    ஒருபாட்டில் தண்ணீர் விலை 65 வட்சம்
    22.10.2021 - 0 Comments
    அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனம் பிவர்லி ஹில்ஸ் 90எச்20 என்ற பெயரில் தண்ணீர் பாட்டில் ஒன்றை இந்தியாவில்…
  • திருவுடையத்தேவர் கட்டியது கட்டபொம்மன் கோட்டையா?
    16.07.2020 - 0 Comments
    இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குண்டாற்றின் வடக்குக் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப்பகுதியில்…
  • அரசியலுக்கும், எனக்கும் சம்பந்தம்  இல்லை- உதயநிதி ஸ்டாலின்  பேட்டி
    01.06.2012 - 0 Comments
    சினிமா தயாரிப்பாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் அவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் 50-வது நாள்…
  • சென்னை,மதுரை,கோவையில் நிலநடுக்கம் வர வாய்ப்பு???
    28.04.2015 - 2 Comments
    சென்னையில் அடையாறு அதிக ஆபத்துள்ள பகுதி கடற்கரையையொட்டி சென்னை நகரம் உள்ளதால் இயற்கை சீற்றங்களை…
  • நான் - படம் விமர்சனம் + பாடல் வீடியோ
    17.08.2012 - 3 Comments
    புது நடிகர், தெரியாத முகங்கள் படம் எப்படியிருக்குமோ, என்ற பயத்தோடு படம் பார்க்க சென்றேன், பார்க்க வேண்டிய…