ஊழல்முறைகேடுகள் கோடிகளை தாண்டி கொண்டிருக்கும் நிலையில், தமிழில் அவற்றை எப்படி எண்ணுவது என தெரிந்து வைத்து கொள்வது நல்லது இல்லையா? இதை வரை இல்லாத அளவுக்கு ஊழலில் சாதனை படைத்து வருகிறது மன்மோகன்சிங் அரசு. அலைக்கற்றை முறைகேடு ரூ.1763790000000, நிலக்கரி ஊழல் ரூ.1800000000000, என்று இந்தியர்களின் கணித திறமையைச் சோதிக்கும் புதுப்புது ஊழல் சாதனைகள் தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டு இருக்கிறது இன்றைய அரசு. கோடிக்கு மேல் வார்த்தைகள் இல்லாததால், இந்த தொகைகளை எல்லாம் எப்படி உச்சரிப்பது என்று புரியாமல் குழம்பித் தவிக்கின்றனர் பொதுமக்கள். கோடியின் போதாமையை உணர்ந்து அரசுக்கும் மக்களுக்கும் உதவும் வகையில் கோடிக்கு மேற்பட்ட எண்ணிக்கையைக் குறிப்பிடும்,உச்சரிக்கும் வார்த்தைகளைப் பழந்தழில் இருந்து பரிந்துரைக்கிறோம்
1,00,00,000 -கோடி
10,00,00,000 -அற்புதம்
1,00,00,00,000 - நிகற்புதம்
10,00,00,00,000 ---- கும்பம்
1,00,00,00,00,000 - கனம்
10,00,00,00,00,000 - கற்பகம்
1,00,00,00,00,00,000 - நிகற்பம்
10,00,00,00,00,00,000 - பதுமம்
1,00,00,00,00,00,00,000 -சங்கம்
10,00,00,00,00,00,00,000 - வெள்ளம்
1,00,00,00,00,00,00,00,000 - அன்னியம்
10,00,00,00,00,00,00,00,000 - மத்தியம்
1,00,00,00,00,00,00,00,00,000 - பிராத்தம்
10,00,00,00,00,00,00,00,00,000 - பூரியம்
1,00,00,00,00,00,00,00,00,00,000 - பிரம்மகற்பம்
தலை சுற்றுகிறதா..... மேல்கண்ட எண்ணிக்கையின் அடிப்படையில் மன்மோகன்சிங் அரசின் ஊழல்களை கணக்கிட்டு கொள்ளவும், மேலும் தற்போது மதுரை உட்பட பல நகரங்களில் நடைபெற்று வரும் கிரானைட் ஊழல்களை கண்கிட்டு பாருங்கள். தடுக்கத்தான் முடியாது கணக்கு பண்ணியாவது பாருங்களேன். கோடிக்கு மேல ஊழல் பண்ணுவாங்கனு தெரிஞ்சு தான் நம்முன்னோர்கள் இப்படி கோடிக்கு மேல் எண்களை கண்டுபிடித்து வைத்துள்ளார்கள்.
ஆனந்தவிகடனில் வந்த தகவல்களை சற்று மெருகூட்டி உங்களுக்காக...
- பென்னிசெல்வன்
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments