செல்பேசி குசும்புகள்


வருத்தபடாத வாலிபர் சங்கம் உட்பட 5 சங்கங்களின் நகைச்சுவை குசும்புகள்
எனது நண்பர் ஒருவர் தொடர்ந்து தத்துவம், நகைச்சுவை என்ற பெயரில் எதாவது குறுஞ்செய்தி அனுப்பி கொண்டிருந்தார்,என்ன செய்வது நண்பர்ஆயிற்றே பொறுத்து கொண்டேன், அவரது செல்பேசி தொலைந்தபோது, விட்டது தொல்லை என நினைத்தேன். ஆனால் மீண்டு ஒரு புது செல்பேசி வாங்கி ஆரம்பித்து விட்டார். ஆதிலிருந்து சில குசும்புகள்........

''உன்பெயரை நான் எழுதுவதில்லை ஏன்தெரியுமா?
போனாமுனை முள் உன்னைக் குத்திவிடுமோ என்று!!!''
இப்படிக்கு spelling தெரியாமல் சமாளிப்போர் சங்கம்

''அவள் என்னைத் திரும்பிப் பாத்தாள் நானும்
அவளைப் பார்த்தேன் அவள் மறுபடியும்
என்னைப்பார்த்தால் நானும் அவளை மறுபடியும் பார்த்தேன்.''
பரீட்சையில் ஒன்றுமே தெரியாமல் திரு,திரு வென விழிப்போர் சங்கம்

''காதல் one side ஆ பண்ணினாலும், two side ஆ பண்ணினாலும்
கடைசியா suicide தான் பண்ணக்கூடாது;''
காதல் பற்றி four side ம் யோசிப்போர் சங்கம்

''அனுமதி கேட்கவும் இல்லை அனுமதி கொடுக்கவும்
இல்லை ஆனாலும் பிடிவாதமாக
ஒரு முத்தம் கன்னத்தில் கொசுக்கடி!!!!''
புரண்டு புரண்டு படுத்து யோசிப்போர் சங்கம்

''உங்க செல்லுக்கு என் அட்ரஸை அனுப்பியிருக்கேன்.
என் அட்ரசுக்கு உங்க செல்ல அனுப்ப முடியுமா?''
டிசண்டா செல்லை ஆட்டையப்(திருடுவது) போடுவோர் சங்கம்

''பேக்வீல் எவ்வளவு ஸ்பீடா போனாலும்
அதால ப்ரண்ட் வீலை முந்த முடியாது''

தலைமுடியை பிய்த்துக்கொண்டு யோசிப்போர் சங்கம்

நிக்கிற பஸ்சுக்கு முன்னால ஓடலாம்,
ஆனால் ஓடுற பஸ்சுக்கு முன்னால நிக்க முடியாது

''செய் அல்லுது செத்துமடி - நோதாஜி
படி அல்லது பன்னிமேய் - எங்கபிதாஜி''

''முடியாது என்பவன் முட்டாள்,முடியும் என்பவனே
புத்திசாலி இப்ப சொல்லுங்க எனக்கு
500 ரூபாய் கடன் தரமுடியுமா? முடியாதா?''

''ஹாஸ்பிட்டல் விளம்பரத்திற்கு நல்ல பஞ்ச் டயலாக் சொல்லுங்க...
கூட்டிக்கிட்டு வாங்க... தூக்கிகிட்டு போங்க...''
வருத்தபடாத வாலிபர் சங்கம்..
போதுமா  இன்னும் வேணுமா....

- பென்னிசெல்வன்

உங்கள் கருத்துக்களை எழுத

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

ஹா... ஹா... போதுங்க...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...