அமீரின் ஆதிபகவன் ஸ்டில்கள் + ஜெயம் ரவி பேட்டி


இயக்குனர் அமீர் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்துக்கொண்டிருக்கும் படம் ஆதி பகவன்.இப்படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துக்கொண்டுள்ளார் நடிகர் ஜெயம் ரவி.இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் மிக பரபரப்பாக நடைபெறுகிறது.
தற்போது போஜ்பூர் மாவட்டத்தில் 15 நாள் படப்பிடிப்பில் ஈடுபட்டிருக்கும் ஆதி பகவன் படக்குழு,அங்கு இரட்டை வேடமேற்றிருக்கும் நடிகர் ஜெயம் ரவியின் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் இடையே நடைபெறும் சண்டை காட்சிகளை படமாக்கி வருகின்றனர்,
இப்படத்தில் நீது சந்திரா நாயகியாக நடித்துக்கொண்டுள்ளார்.இப்படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் ஏழு ஒளிப்பதிவு கருவிகளை கொண்டு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது.குருதேவ் மற்றும் தேவராஜ் ஆகியோர் ஒளிப்பதிவு கருவிகளை கையாள்கிறார்கள்.
செப்டெம்பர் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது ஆதி பகவன்

பருத்திவீரனை பார்த்து அசந்துபோன தமிழ் ரசிகர்களுக்கு 'ஆதி பகவன்' மிகுந்த எதிர்பார்ப்புள்ள திரைப்படம்தான், பருத்திவீரனுக்கு பின்னர் அமீரின் இயக்கத்தை தமிழ் ரசிகர்கள் கண்டு 5 வருடங்கள் ஆகின்றது!! ஒரே பாணியில் நடித்துக் கொண்டிருந்த 'ஜெயம்' ரவியை எப்படி அமீர் மாற்றியமைக்கப் போகிறார் என்பதுவும் சுவாரசியமான எதிர்பார்ப்புத்தான். அமீர், யுவனின் கூட்டணியும் எதிராபார்ப்பை கூட்டுகின்றது. 2010 இல் பேசத்தொடங்கிய திரைப்படம் 2012 கடைசிக்குள்ளாவது வந்திவிடும் என்கின்ற நம்பிக்கை உள்ளது,


ஜெயம்ரவி பேட்டி


ஆதி பகவன்' படம் எப்போதுதான் திரைக்கு வரும்... அப்படத்துக்கு அப்படி என்னதான் பிரச்னை?

சில விஷயங்களால் தாமதம், அவ்வளவுதான். எல்லா சினிமாக்களுக்கும் இருக்கும் ஒரு விஷயம்தான் இது. படத்துக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. மற்றப்படி இப்ப படம் வேகமாக வளர ஆரம்பிச்சிருக்கு. இரவு, பகலா ஷூட்டிங் போகுது.
அமீர் சார் ரொம்பவே ரிஸ்க் எடுக்குறார். இதில் "ஆதி' நான் என்றால், "பகவன்' அமீர் சார். தமிழ் சினிமாவில் வழக்கம் போல் சுழன்று அடிக்கிற காதல், ஆக்ஷன், காமெடி நிறைந்த கதைதான். ஆண்டாண்டு காலமாக தமிழ் சினிமாவில் இருக்கும் கமர்ஷியல் கட்டாயம் இதில் இருக்கும். ஆனால் அமீர் சார் கை வண்ணத்தில் புதுக் கலவையில் படம் இருக்கும். ஆதிபகவனை சீக்கிரமே திரையில் பார்த்து விடலாம் நண்பா.

ஜனநாதன் இயக்கத்தில் நீங்களும், ஜீவாவும் இணைந்து நடிக்கும் படம் என்ன ஆனது?

சீக்கிரமே ஷூட்டிங் கிளம்பப் போறோம். திரைக்கதையின் இறுதி வடிவாக்கத்தில் பரபரப்பாக இருக்கிறார் ஜனநாதன் சார். வரலாற்றுப் பின்னணி கதை என்பதால், சில விஷயங்களில் தாமதம் ஏற்படுகிறது. நானும் "ஆதிபகவன்' முடிக்கணும். ஜீவாவுக்கும் சில படங்கள் கையில் இருக்கு. எனக்கும் ஜீவாவுக்குமான நட்பு, இதன் மூலம் இன்னும் பலப்படும் என நினைக்கிறேன். படத்தின் பெயர் இன்னும் முடிவாகவில்லை. இது சம்பந்தமாக இப்போது இவ்வளவு மட்டும்தான் பேச முடியும்.

நீங்கள் மனம் விட்டு பேசும் தோஸ்த் யார்?

நிறைய பேர் இருக்காங்க. நான் சினிமாவில் இருப்பதால் சினிமா நண்பர்களிடம் நிறைய பேசுவேன். விஜய் அண்ணா தொடங்கி ஜீவா, ஆர்யா, விஷால்ன்னு எல்லோரும் நட்பா இருக்காங்க. ரொம்பவே அன்பு காட்டுறாங்க. எந்த நேரம் பேசினாலும் காது கொடுக்குறாங்க. சந்தேகம் முதல் சந்தோஷம் வரை அவங்கிட்டதான் பேசுவேன். அவங்களும் எனக்கு ஏற்ப மனசை மாத்தி மௌனமாக கேட்பாங்க. இப்போதைக்கு அவங்கதான் நான் மனம் விட்டு பேசும் நண்பர்கள்.

கனவுப் படம் என்ன?

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்..... இந்திய சுதந்திரம் நமக்கு இப்படித்தான் கிடைக்கும்ன்னு கேட்டு நின்ன மனுஷன். ஆனா அவர் எதிர்பார்த்தபடி கிடைக்கலை. ஒரு போராளியா, வீரனா, குடிமகனா அவர் நின்ற தருணங்கள் எல்லாமும் எனக்கு பிடிக்கும். அவரைப் பத்தி நிறைய படிச்சிருக்கேன். அவரின் மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கு. அவரின் சாவு இப்பவும் சென்ஷேசன் நியூஸ்தான். அவரின் வேடம் அணிந்து அவராகவே வந்து நிற்கணும்ன்னு ஆசை. ஆனா அதற்கான ஒரு சின்ன பிள்ளையார் சுழி கூட இன்னும் போடலை. இன்னும் சில பேர் கூட இந்த கேரக்டரில் நடிக்க விருப்பம் தெரிவிச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். யாருக்குக் கிடைக்குதுன்னு பார்ப்போம்.

-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

கருத்துகள்

திண்டுக்கல் தனபாலன் இவ்வாறு கூறியுள்ளார்…
தகவலுக்கு நன்றி...
படம் வரட்டும்.... பார்க்கலாம்.....
நன்றி...பாடல் வரிகளை ரசிக்க : உன்னை அறிந்தால்... (பகுதி 2)