லண்டன் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது வேற்று கிரகவாசிகள் தாக்குதல் நடத்தலாம்?


விளையாட்டு வீரர்களின் - ரசிகர்க ளின்   உலகத்திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வரும் 27ம் தேதி லண்டனில் துவங்குகிறது.இந்த போட்டியின் உலகமுழுவதும் உள்ள விளையாட்டு வீரர்கள் ,ரசிகர்கள், உலக தலைவர்கள் என குவிந்திரு க்கும் இடமாக லண்டன் மாநகரம் இருக்கும். எனவே லண்டனில் போட்டி நடைபெறுகிற பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10,000க்கும் மேற்பட்ட காவலர்கள், 13.500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள். இவை போக முப்படைகளின் வீரர்கள்,அதிகாரிகள் போர்விமானம்,எலிகாப்டர்களிலும் அங்காங்கே கண்காணிப்பு,பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக விமானப்படையும் முழுமையாக ஈடுபடுத்தபட்டுள்ளது.
தீவிரவாதிகளின் தாக்குதல் இருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகாக கண்காணிப்பு கேமராக்கள் லண்டன் வீதிமுழுவதும் பொருத்தப்பட்டுள்ளது.போட்டி நடைபெறும் பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது புதிதாக ஆராச்சியாளர்கள் வேற்றுகிரகமனிதர்களின் தாக்குதல் இருக்கலாம் என எச்சரித்திருப்பது மிகபெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திவருகிறது. லண்டன்,அமெரிக்க நாடுகளில் வேற்றுகிரகமனிதர்களின் தாக்குல் குறித்து செய்திகள் ஊடகங்களில் விவாதிக்கப்பட்டுவருகிறது.

ஒலிம்பிக் போட்டி நடைபெற்று கொண்டிருக்கையில் அல்லது முடிவடையும் தருணத்தில் வேற்றுகிரவாசிகள் வரலாம் என லண்டனில் உள்ள வேற்றுகிரக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
            லண்டனைச் சேர்ந்து நிக்போப் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த 1991ம் ஆண்டு முதல் இன்று வரை வேற்றுகிரகவாசிகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அவருக்கு கிடைத்த தகவலின் அடைப்படையில் இங்கிலாந்தின் தேசிய பாதுகாப்பை உறுதிபடுத்தி, விண்வெளி பாதுகாப்பை பலமடங்கு பலப்படுத்த வேண்டும் என்று கூறிவருகிறார்.இவரது ஆராய்ச்சியின் மீது நம்பிக்கை கொண்ட இங்கிலாந்து நாட்டின் பாதுகாப்பு வல்லுனர்கள் , பூமியிலிருந்து ஒலிபரப்படும் ரேடியா, தொலைக்காட்சி, அலைபேசி போன்ற வற்றின் மூலம் வேற்றுகிரகவாசிகள் பூமியின் நிகழ்வுகளை அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை கண்டறிந்துள்ளார்.
        அதிலும் குறிப்பாக லண்டன் ஒலிம்பிக்போட்டி குறித்த தகவல்களை வேற்றுகிரகவாசிகள் ஆர்வத்துடன் சேகரித்து வருவதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.இதனால் நடைபெறவுள்ள லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டுகளில் திடீரென வந்து இறங்கி தங்களை வெளிப்படுத்தலாம் என்று லண்டன் மாநகரவாசிகள் நம்புகிறார்கள்.
         இதனிடயே வேற்றுகிரக வாசிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் நிக்போப் லண்டன் ஒலிம்பிக் போட்டியினை கண்டு களித்திட வேற்றுகிரவாசிகள் நட்புடன் வரலாம், அல்லது போட்டிகளை சீர்குலைத்திட போர் தொடுத்திடவும் வரலாம். எனவே இங்கிலாந்து நாட்டின் விண்வெளி பாதுகாப்பை பலப்படுத்திட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று கூறியுள்ளார்.

         இதே போன்று வேற்றுகிரக வாசிகள் நிச்சயமாக இருக்கிறார்கள், அவர்கள் பூமிக்கு வரப்போவது உறுதி என்று அடித்து கூறுகிறார் லண்டனை சேர்ந்த இயற்பியல் மேதை ஸ்டீபன்ஹாகிங் (68). உலக அளவில் விண்வெளி மேதையாக கருத்தப்படும் இவர் பிறப்பிலேயே சில குறைபாடுகளுடன் பிறந்தாலும் வேற்றுகிரகவாசிகள் குறித்து ஆய்வுகளை நிரூபித்து உலகையே வியப்பில் ஆழ்த்து கொண்டிருக்கிறார். அவரது ஆய்வின் படி பிரபஞ்சத்தில் பத்தாயிரம் கோடிக்கும் மேற்பட்ட நட்ச்த்திர கூட்டங்கள் இருக்கின்றன. இதில் பூமியில் மனிதர்கள் இருப்பதை போல எத்தனையோ கிரகங்களில் மனிதர்கள் உயிர்வாழ நிச்சயம் வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளார்.
       இவர்கள் வசித்திடும் கிரகங்கள் அல்லது நட்சத்திர மண்டலத்தில் வசதிக்குறைவு ஏற்பட்டாலோ அல்லது பிறகிரகங்களை ஆராய்ந்து பார்த்துவிடலாம் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்பட்டாலோ பூமிக்கு வேற்றுகிரக வாசிகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.


லண்டன் செய்திநிறுவனத்தின் தகவல்
       


1984 லாஸ்ஏஞ்சல்ஸ் ஒலிபிக் போட்டியின் போது வந்த பறக்கும் தட்டு


பூமியின் ஆரம்ப கட்டத்தில் இருந்ததைப்போல சிறியவகை உயிரினங்கள்  போலவும் அல்லது சித்திரக்குள்ளர்கள் போன்று வேற்றிகிரகவாசிகள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. வேற்று கிரகத்தினரை பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கு இருந்தாலும் அவர்கள் நம்மை சந்திக்கும் வேளை நமக்கு பேராபத்தாக முடியலாம் என்றும் ஸ்டீபன்ஹாகிங் எச்சரிக்கிறார். இத்தனை பரபரப்புக்கிடையே லண்டன் ஒலிம்பிக் போட்டிகள் விரைவில் தொடங்கவுள்ள நிலையில் வேற்றுகிரகவாசிகள் வருகை குறித்து நாள்தோறும் வெளியாகிவரும் தகவல்கள் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

           லண்டன் ஒலிம்பிக் நடக்கும் சமயத்தில் வானத்தை அண்ணாந்து பார்க்கும் போது மக்களே எச்சரிக்கையாக இருங்கள், இல்லாவிட்டால் ஆராய்ச்சியாளர்கள் கூறியபடி பறக்கும் தட்டுகளில் வரும் வேற்றுகிரவாசிகள் உங்களை கடத்திச்சென்றுவிடப்போகிறார்கள்.
        - செல்வராஜ்

ஜெல்லி மீன் வடிவத்தில் வேற்று கிரக வாசிகள்

ஆலிவுட் படங்களில் பச்சை நிறத்தினால் வினோதமான வடிவத்தில் வேற்று கிரகவாசிகள் சித்தரிக்கப்படுகின்றனர். ஆனால் உண்மையில் அவர்கள் அவ்வாறு தோற்றம் அளிப்பதில்லை. மாறாக மிகப்பெரிய ஜெல்லி மீன் வடிவில் அவர்களின் தோற்றம் இருக்கலாம் என இங்கிலாந்து விண்வெளி விஞ்ஞானி மாக்கி அட்ரின் பொகாக் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறும்போது, வேற்று கிரகவாசிகள் மனிதர்கள் அல்ல. அவர்களின் உடலமைப்பு சிலிகானை அடிப்படையாக கொண்டு மிகப்பெரிய ராட்சத ஜெல்லி மீன் போன்று இருக்கலாம். இவர்கள் நிலத்திலும், தண்ணீரிலும் வாழக்கூடியவர்கள். அவர்களது உடலின் கீழ்பகுதி ஆரஞ்ச் நிறத்தில் இருக்கும். இவர்கள் கடலில் வாழ்வதில்லை. வியாழன் கிரகத்தில் உள்ளனர் என்று தெரிவித்துள்ளார்

இப்பதிவின் தொடர்புடை பதிவுகள் படிக்க தவறாதீர்கள்

வேற்று கிரக மனிதர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் (படங்களுடன்)




உங்கள் கருத்துக்களை எழுத ....

ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

அறியாத தகவல்கள் சார் ! பகிர்வுக்கு நன்றி !
Thalapolvaruma said…
எப்படி தான் இவர்களால் மட்டும் இப்படி எல்லாம் கதை விட முடியுதோ...
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது...

வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/09/blog-post.html) சென்று பார்க்கவும்... நன்றி...
sury siva said…
1991ல் ஹெச். ஆர். அதிகாரியாக பணி ஏற்றுக்கொண்டபொழுது என் தலைமை இயக்குனர் என்னிடம் சொன்ன அறிவுரை:

நடப்பவை எல்லாவற்றையுமே உன்னிடம் வந்து யாரேனும் சொல்வார்கள் என்று எதிர்பார்க்காதே. கீப் யுவர் ஆன்டென்னா
வைட் ஓபன். என்றார்.

நம்மைச் சுற்றி வரும் கிரகங்களில் மட்டுமன்றி பால் வெளியில் சிதறியிருக்கும் ஏதோ ஒரு சூரிய மண்டலத்தில் ஏதோ ஒரு
கிரஹத்தில் நம்மை விட உயர்ந்த நிலையில் இருக்கும் உயிரினங்கள் இருக்கக்கூடிய சாத்தியங்கள் நிச்சயமாகவே
இருக்கின்றன என்பது அண்மையிலும் ஒரு விண் வெளி ஆராய்ச்சிக் கட்டுரை சொல்கிறது.

கதை என்று நாம் நமது குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டிருக்கலாம். நமக்கு ஒன்றும் ஆகாது. ஆவதற்கும்
உடனடி வாய்ப்புகள் இல்லை. இருந்தாலும் ஒரு உள்ளங்கைக்குள் அடக்கிகொள்ளக்கூடிய நெருப்புப்பெட்டி அளவுக்கு
ஒரு சாதனத்தில் மூலம் அமெரிக்காவில் இருப்பவர்களுடன் அடுத்த வினாடியே நாம் நினைத்தால் பேச இயலும்
என்பதை நாம் 1940 அல்லது 1950 வருடங்களில் ப்யூர் ஃபிக்மென்ட் ஆஃப் இமேஜினேஷன், சயன்டிஃபிக் ஃபிக்ஷன்,
கதை என்று தானே சொல்லிக்கொண்டிருந்தோம்.
ஆக, இன்று நடப்பது நாளை எவ்வாறு சரித்திரம் ஆகிறதோ, அதே போல், நாளை நடக்கப்போவது
இன்று கனவாகவும் தோன்றலாம், கதைப்பதாகவும் இருக்கலாம். இருப்பினும் உண்மையாவதற்கும்
அதில் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.

சுப்பு ரத்தினம்.







Anonymous said…
வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு