அப்பா வேடம் என்றால் ரங்காராவ், வி.கே.ராமசாமி, மேஜர் சுந்தரராஜன் என அந்த காதாபாத்திரத்திற்கே அழகு சேர்கிற நடிகர் அந்த காலத்தில் இரு ந்தார்கள்.அவர்களில் மேஜருக்கு தனி இடம் உண்டு. தமிழ் சினிமாவில் மா றாத வழக்கம்,ஒரு நடிகரோ, நடிகையோ அறிமுகமாகும் போது, ஒரு கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து பேர் வாங்கிவிட்டால் தொடர்ந்து அருவருக்கு அம்மாதரி யான வேடங்களையே கொடுப்பார்கள்.
இளம் வயதிலேயே அப்பா வேடத்தில் அறிமுகமாகி கடைசிக்காலம் வரை ''அப்பா'' என்னும் வயதான வேடங்களிலேயே நடித்து மறைந்த நடிகர் மேஜர் சுந்தரராஜன். அப்பா வேடத்தால் அவர்பட்ட அவஸ்தைகளை 1967 ல் சொல்லி இருக்கிறார்.
சென்னையில் டெலிபோன் இலாக்காவில் பணியாற்றிக் கொண்டிருந்த எனக்கு 1958 மே 28ம் நாள் மதுரையில் திருமணம் நடந்தது. விடுமுறை அதிகம் எடுக்க முடியாத காரணத்தால், மறுநாளே சென்னை திரும்பி விட்டேன் என் திருமணத்திற்கு பின்னர் தான் நான் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தேன். நான்கைந்து வருஷத்துக்கு பிறகு மதுரைக்கு போன போது என் மனைவி என்னை கட்டாயப்படுத்தி அங்குள்ள அவளுடைய எல்லா உறவினர் வீடுகளுக்கும் என்னை அழைத்துப்போய், ஒவ்வொருவரிடமும் என்னை நேரடியாக அறிமுகம் செய்து வைத்தாள். ''இவர் தான் எனது கணவர்'' என்று இந்த அறிமுகம் ஏன் என்று எனக்கு புரியவில்லை. வீடு திரும்பிய பிறகுதான் காரணம் தெரிந்தது. அப்பா வேடம் ஏற்று படங்களில் நடித்து வந்த என்னை உண்மையிலேயே வயதானவன் என்றும் அவர்களில் பலர் சந்தேகப்பட்டார்களாம்.அதனால் நான் ''உண்மையிலேயே வயோதிகனல்ல இளைஞன் தான்'' என்பதை எல்லாருக்கும் நிருபிப்பதற்கே என்னை நேரில் அழைத்துச் சென்று என் மனைவி காட்டி இருக்கிறாள். பார்த்தீர்களா... அப்பா வேடம் போடுவதில் இருக்கும் கஷ்டங்களை.
நான் அப்பா வேடம் ஏற்க வேண்டிய நிலைக்கு காரணம் ''சர்வர் சுந்தரம் நாடகம்''படமாக்கப்பட்ட போது கதாநாயகியின் தந்தை பாத்திரத்தை (நாடகத்தில் நான் நடித்தது) ஏற்று நடிக்க ஏவிஎம் நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. தயக்கதோடுதான் ஏற்றுக்கொண்டேன்,அங்கு பணியாற்றி வந்த தலைமை ஒப்பனைக்கலைஞர் இனி எனக்கு பொட்டு வைத்து விட்டு
''வி.கே.ராமசாமியை 19 வயதிலேயே அப்பாவாக்கினேன், இன்று நீ ... மேலும்,மேலும் அப்பா வேடம் தாங்க உங்களுக்கு இறைவன் அருள் புரிவராக'' என்று ஆசி கூறினார்.அவரது வாக்கு பலித்துவிட்டது. என் கருத்த முடிக்கு நரை பூசி தொடர்ந்து அப்பாவாக நடித்துக் கொண்டிருக்கிறேன்!!. என்றார். இதே போல சிலவருடங்களுக்கு பிறகு மேஜர் சுந்தரராஜன் சிங்கப்பூர் போயிருந்தார். அன்று மாலையில் யாரோ ரசிகை பேசுவதாக ஹாட்டல் வரவேற்பறையிலிந்து போன் வந்தது. எடுத்து பேசினார்.
''ஹாலோ நீங்க நடிகர் மேஜர் சுந்தரராஜனா?.. ''என்று இளம் பெண்ணின் குரல் மறுமுனையில் ஒலித்தது. பரவாயில்லை நமக்கும் இளம் ரசிகைகள் இருக்கிறார்களே என்று இவர் மகிழ்ச்சியுடன், ஆமா நான்தாங்க என்றார்.
''உங்க கிட்ட உள்க ரசிகை பேசணுமாம்.இருங்க பாட்டி கிட்டே போனை தர்றேன்'' என்று அந்த இளம் பெண் கூறியதும் மேஜர் நெந்து போனார்.
என்னை வயதானவன் என்றே முடிவு செய்து விட்டார்களே... என்று பெருமூச்சுவிட்டாராம்.
- சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments