திரையுலகத்தை பொறுத்தவரை முகத்துக்கு முன்னால் சிரிப்பதும், முதுகில் குத்துவதும், காலைவாரி விடுவதும் மிகச் சாதாரணமாக நடக்கும். நம்மை போன்றவர்களின் வாழ்க்கை முறைக்கும்,சினிமாக் காரர்களின் வாழ்க்கை முறைக்கும் மலைக்கும் மடுவுக்கு உள்ள வித்தியாசம் இருக்கும். பணம், பெயர்,பதவி, அந்தஸ்து கிடைக்கின்ற துறை,அதனால் அவற்றை அடைவதற்கு என்ன வேண்டு மானலும் செய்வார்கள் சினிமாக்காரர்கள்.
திரையுலகில் இயக்குனர் சிகரம் என போற்றப்படுகிற கே.பாலச்சந்தர், திரையுலகில் மரியாதைக்கான அளவுகோலை தனது அனுபவத்திலிருந்து சொல்கிறார்.
இரண்டு சினிமாக்காரர்கள் சந்தித்துக்கொண்டாலோ, அல்லது சினிமா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போது மரியாதை எப்படி கொடுக்கிறார்கள் என்பதை பொறுத்துதான் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ளலாம்.
''ஹை'' என்றால் இருவரும் சமம்.
''குட்மார்னிங்'' என்றால் அடுத்தகட்டம்.
''இரண்டு கைகளையும் சேர்த்து வணக்கம்'' என்றால் அதற்கடுத்த கட்ட மரியாதை
''இரண்டு கைகளையும் சேர்த்துக் கும்பிட்டு முகத்துக்கு மேலே தூக்கிவிட்டால்'' அது எல்லாவற்றையும் விட உயர்ந்த கட்டம்.
நாம் உள்ளே நுழையும் போது அத்தனை பேரும் ''ஒரே நேரத்தில் ஷாக் அடித்தவர்கள்'' போல் எழுந்து நின்றால் சமீபத்தில் வெளியான நமது படம் சூப்பர்ஹிட் என்று பொருள்.
எழுந்திருக்காதது மட்டுமல்லாமல் முகத்தை வேண்டும் என்றே இன்னொரு பக்கம் திருப்பிக்கொண்டார்களானால் படம் சூப்பர் ஃப்ளாப் என்று பொருள். ஆக வெற்றியை வைத்துதான் சினிமாவில் மரியாதை எனப் புரிய வைக்கிறார் இயக்குனர் சிகரம்.சிகரத்துகே இந்த அனுபவம்னா மற்றவங்களோட கதி!!!!!-
-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments