சந்தோசமான தகவலை உங்களோடு பகிந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.துவங்கிய 10 மாதங்களிலேயே விகடன் மூலமாக அங்கிகாரம் கிடைத்திருக்கிறது. கல்லூரிகாலங்களில் 40 பக்க நோட்டில் ராகம் என்ற பெயரில் நண்பர் துவக்கிய சிற்றிதழில் எழுதத்துவங்கி, ரோனியோ, ஜெராக்ஸ், கையில் பணம் அதிகமாக இருந்தால் அச்சு பிரதி என சிறை என்ற சிற்றிதழை 5ஆண்டுகள் நண்பர்களோடு நடத்தியிருக்கிறேன். அதிகபட்டமாக 200 லிருந்து 250 பிரதிகள் மட்டுமே வெளிவரும் சிறை இதழ் பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு பரவலான வரவேற்பைபெற்றது, அமெரிக்க தமிழ்ச்சங்கத்திருந்து சந்தா அனுப்பினார்கள், பின்னர் பல்வேறு காரணங்களால் சிறை சிற்றிதழ் நின்று போனது. இணையம் குறித்து குறைந்த பட்ச அறிவுகூட இல்லாமல் இரண்டு முறை வலைப்பூ துவங்கும் முயற்சி தோல்வியடைந்தது.
தற்போது நண்பர்களின் உதவியுடன் துவங்கப்பட்ட இன்றையவானம் வலைப்பூ 27,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்களுடன் தமிழ்மணம் ரேங்க்பட்டியலில் 121 இடத்திலும் உள்ளது.சிற்றிதழ் நடத்திய காலத்தில் என்னோடு எழுத துவங்கிய நண்பர்களும் இன்றைவானத்தில் எழுத்துகிறார்கள். இன்றையவானம் வலைப்பூ என்பதை விட சிற்றிதழ் என்பதை சரியாக இருக்கும்.
இந்த தருணத்தில் ஆனந்தவிகடன், தமிழ்மணம்,வாசகர்கள்,அனைவருக்கும்
நன்றியையும் , வணக்கக்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்றையவானம் குழு சார்பாக
அ.தமிழ்ச்செல்வன்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments
ஆனந்த விகடனில் அறிமுகம் செய்யப்பட்டது
அறிய மிகக மகிழ்ச்சி
ிமனமார்ந்த நல் வாழ்த்துக்கள்
இணையத் தமிழன்,
http://www.inaya-tamilan.blogspot.com/