சுதந்திர இந்தியாவின் அரசு தடை செய்த முதல் திரைப்படம்

இந்திய சினிமா உலகின் பிதாமகன்களில் ஒருவராக கருதப்படுபவர் இயக்குநர் மிருணாள் சென். வங்காளத்தை சேர்ந்த மிருணாள் சென் தனது திரைப்படங்களின் மூலம் பல புதுமையான சமூக கருத்துக்களை விதைத்ததுடன், மத்திய தரவர்க்கத் தின்வாழ் க்கைமுறையையதார்த்தமான பல்வேறு படைப்புகளின் மூலம் இந்திய சினிமாவிற்கு வழங் கியவர். இவர் இயக்கிய ஏக் தின் ப்ரதி தின், புவன் ஷோம், காந்தர் உள்ளிட்ட படங் கள் பலதரப்பட்ட வர்களின் பாராட்டுகளைப் பெற்ற திரைப்படங்களா கும். இவரது இயக்கத்தில் ஆங்கிலேய ஆட்சிக் காலத் தின்போது இந்திய பெண்ணுக்கும், புலம் பெயர்ந்த சீன நாட்டைச் சேர்ந்தவருக்கும் இடையிலான அன்பை அரசியல் பின்னணி யுடன் சொல்லும் வகையில் சித்தரிக்கப்ப ட்டது ‘நீல் ஆகாஷெர் நீச்சே‘ என்ற திரைப் படம். இப்படத்தை இந்திய அரசு அப் போது தடை செய்து உத்தரவிட்டது. சுதந்திர இந்தியா வின் அரசு தடை செய்த முதல் திரைப்படம் இப்படமாகும்.
இதன்பின்னரும், அரசியல் கருத்துக்களை முன்வைத்தே பல திரைப்படங்களை எடுத்தார்.இதனிடையே இந்தியாவின் ஐந்தாயிரம் ஆண்டு வரலாற்றை இயக்கித் தருமாறு இந்திய அரசு வேண்டிக்கொண்டதன் அடிப்படையில் ‘மூவிங் பெர்ஸ் பெக்டிவ்ஸ்‘ என்ற ஆவணப்படத்தை மிருணாள் சென் இயக்கினார்.
உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழா உள்ளிட்ட பல்வேறு சர்வதேச திரைப்பட விழாவில் இவரது திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இந்நிலையில் மிருணாள் சென் தன்னுடைய 90 வது பிறந்தநாளை சமீபத்தில் எளிமையாக கொண்டாடினார். அப்போது, மிருணாள் சென் “இன்று என்னிடம் 5 கோடி ரூபாய் கொடுத்து படம் இயக்கித் தரக் கேட்கிறார்கள். அந்தப்பணத்தில் நான் ஐந்து படங்களை எடுத்துவிடுவேன்” என பிறந்தநாள் விழாவில் பங்கேற்ற கூட்டத்தினரிடையே தெரிவித்துள்ளார். மேலும், திரைப்பட இயக்குநர்கள் எல்லாம் சமூக விஞ்ஞானிகளாகவும் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

- சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments