தண்ணீரில் மூழ்கிப்போன தமிழகத்தின் வரலாறு



மிழக வரலாற்று பதிவுகளில் முக்கிய இடம் வகிக்கும் திப்புசுல்தான் காலத்து தண்டல்கோட்டை 7 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது காட்சியளிக்கிறது.
இத்தருணத்தை பயன்படுத்தி தொல்பொருள் ஆய்வுத்துறையினர் ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே ஆண்டுக்கணக்கில் தண்ணீருக்கடியில் மூழ்கி கிடந்த வரலாற்று சிறப்புமிக்க அதிசயக் கோட்டை தற்போது வறட்சி காரணமாக வெளியே தெரிகிறது.மேற்கு தொடர்ச்சிமலைக் காடுகளில் உருவாகி கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியே ஈரோடு மாவட்டத்தினுள் நுழைகிறது பவானி ஆறு என்றும் வற்றாத ஜீவநதி என்றழைக்கப்படும் பவானி ஆற்று நீரைதாரமாகக் கொண்டு கோவை, திருப்பூர், ஈரோடு என மூன்று மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் பாசன தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகின்றன.கோவை மாவட்டத்தில் இருந்து ஈரோடு மாவட்டத்தினுள் நுழையும் பவானி ஆற்று நீரை முறையாக பயன்படுத்தும வகையில், கடந்த 1947-ம் ஆண்டு பவானி சாகர் ஆணை கட்டப்பட துவங்கி 1958-ம் ஆண்டு அணை கட்டி முடிக்கப்பட்டது. பவானி சாகர் அணை கட்டத் துவங்கிய போது அப்பகுதியில் இருந்த பீர்கடவு, பட்டாரமங்கலம், காராப்பூர், குயனூர், பசுவப்பாளையம் உள்ளிட்ட 10-திற்கும் மேற்பட்ட கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர். அணை கட்டப்பட்டு நீர் தேக்கப்பட்டவுடன் இக்கிராமங்கள் அனைத்தும் நீரில்மூழ்கி காணாமல் போனது. பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 120 அடியாகவும், அணையில் 32 ஆயிரத்து 80 மில்லியன் கன அடி நீரும் தேக்கப்பட்டது. இத்தருணத்தில் இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்த பழமையான கோட்டைக் கோவிலும் நிருக்கடியில் மறைந்து போனது.முழுவதும் கருங்கற்களால் அழகிய வேலைப்பபாடுகளுடன் ஒரு போர்கோட்டை போல் உறுதியாக இக்கோவில் கட்டப்பட்டுள்ளதால் இதனை இப்பகுதி மக்கள் கோட்டைக் கோவில் என்றே அழைத்து வந்துள்ளனர். மேலும் திப்புசுல்தான் ஆட்சி காலத்தில் இக்கோட்டை கோவில் இப்பகுதி மக்களிடம் வரி வசூலிக்கும் அரசு தண்டல் அலுவலகமாகவும் செயல்பட்டுள்ளது. இதனால் கோட்டைக் கோவில், அக்காலத்தில் தண்டல் நாயக்கன் கோட்டை என்றும் அழைக்கப்பட்டு வந்துள்ளது.தண்டல் நாயக்கன் கோட்டைக் கோவில் என்ற பெயர் காலப்போக்கில் மருவி தண்டனாயக்கன் கோட்டை என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. திப்புசுல்தான் இக்கோட்டை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் இங்கு பீரங்கிகளை கோட்டையின் நாற்புறங்களிலும் உயரமான கற்திட்டுக்களை ஏற்படுத்தி அமைத்துள்ளார். எனவே இது அரசால் பாதுகாக்கப்பட்ட கோட்டையாகவும் இருந்துள்ளது.


 க்கோட்டைக் கோவிலின் உட்புறத்தில் ஒரே கல்லால் ஆன உறுதியான கற்தூண்கள் நேர்த்தியாக உருகப்பட்டுள்ளதோடு, ஏராளமான நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய சிற்பங்களையும் செதுக்கியுள்ளனர். மேலும் கருங்கல் சுவற்றில் பண்டைய தமிழ் எழுத்துக்களும் உள்ளன. நீரில் மூழ்கும் முன் இங்கிருந்த பழமை வாய்ந்த சாமி சிலைகள் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதாகவும் கூறப்படுகிறது.கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இக்கோட்டையில் ஒரு ரகசிய பாதாள அறை உள்ளதாகவும், இதனை உரிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தால் பல வரலாற்று உண்மைகள் வெளிவரும் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் எப்போதாவது வெளிவரும்
இக்கோட்டையை, அரசு கவனத்தில் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் இப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.எப்போதெல்லாம் பவானி சாகர் அணையின் மொத்த நீர்மட்டஉயரமாக 120 அடி யில் இருந்து தண்ணீர் 50 அடிக்கும் கீழாக குறைகிறதோ அப்போது மட்டுமே இக்கோட்டையை காண முடியும். தண்ணீருக்கடியில் மூழ்கி கிடக்கும் போது இக்கோட்டை நூற்றுக்கணக்கான முதலைகளின் வசிப்பிடமாக மாறிவிடுகிறது. சுற்றிலும் தண்ணீர் சூழ்ந்து ஒரு சிறு தீவின் மத்தியில் தற்போது இக்கோட்டை காட்சியளித்து வருகிறது.அணையின் நீர்தேக்கப் பகுதியில் மிக ஆழமான பகுதியின் மத்தியில் இக்கோட்டைகாட்சியளிப்பதால், இக்கோட்டையை பரிசல் அல்லது சிறு படகு மூலம் மட்டுமே சென்று இதனை காண இய

லும். இப்பகுதியில் காற்று பலமாக வீசுவதால் இந்த ஆபத்தான பயணத்தை பொதுமக்கள் யாரும் விரும்புவதில்லை. இப்பகுதியில் அனுமதி பெற்று மீன் பிடிக்கும் ஒரு சில மீனவர்கள் மட்டுமே தற்போது தற்காலிகமாக அங்கு சென்று ஓய்வெடுப்பதும், வலைகளை காய வைப்பதுமாக உள்ளனர். இதுபற்றி இப்பகுதியில் மீன் பிடிக்க குத்தகை எடுத்துள்ள தங்கராஜ் கூறியதாவது:பவானி சாகர் அணையை பொறுத்தவரை பவானி ஆறு மற்றும் பிற கிளை காட்டாறுகள் காரணமாக அவ்வனை எளிதாக இதன் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடாது.
கடுமையான கோடை காலத்தில் கூட இந்த அணையின் நீர்மட்டம் 60 அடிக்குக் கீழ் செல்லாது. ஆனால் தற்போது பருவ மழை பொய்த்த காரணத்தால் 50 அடிக்கும் கீழாக நீர்மட்டம் குறைந்து விட்டதால் இந்த பழமையான தண்டல் நாயக்கன் கோட்டை வெளிவந்து காட்சியளிக்கிறது. இது பல ஆண்டுகளுக்கு பின்பு நடத்துள்ள அதிசயமாகும்.மீண்டும் மூழ்கினால் எப்போது வெளிவரும் என்று தெரியாது. பல வரலாற்று சிறப்புகளுடன் கூடிய இக்கோட்டையை யாருமே கண்டுகொள்வதில்லை. வெறும் காட்சிப் பொருளாகவே உள்ளது. வரலாற்று வல்லுனர்களும், ஆராய்சியாளர்களும் இதனை ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவர வாய்ப்புள்ளது. பழமையான இக்கோட்டையை தொல்பொருள் ஆய்வுத்துறை கவனதில் எடுத்து ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.

இரா.சரவணபாபு
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

MARI The Great said…
நன்றி தகவலுக்கு
அருமையான கட்டுரை. வரலாற்றுச்செய்திகள் அடங்கிய பதிவு. நன்றி.