விஜயின் துப்பாக்கி - மும்பை சூட்டிங் வீடியோ


விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இரண்டாவது படம் இது.  மேலும் விஜய்க்கு போலீஸ் வேடம் என்பதால் அதிரடிக்கு குறைவிருக்காது. விஜய் பாணியில் சொல்லவேண்டுமானால் “சும்மாவே காட்டுவாரு, இப்ப போலீஸ்ன்னா சொல்லவே வேண்டாம் காட்டு காட்டுன்னு காட்டுவாரு” என்று தோன்றுகிறது.

 கலைப்புலி எஸ்.தாணு ஏராளமானப் பொருட்செலவில் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம், 'துப்பாக்கி'. விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.
ஹீரோயினாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு. ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.


விஜய் நடிக்கும், 'துப்பாக்கி' படத்தின் ஷூட்டிங் மும்பை சாலைகளில் நடந்து முடிந்துள்ளது. 'சில நாட்களுக்கு முன்பு மும்பை பிலிம்சிட்டி இருக்கும் கோரேக்கான் மேம்பாலத்தில் சிறப்பு அனுமதி வாங்கி ஷூட்டிங் நடத்தினோம். படப்பிடிப்பு நடந்தது தெரிந்து ஏராளமான தமிழர்கள் அங்கு கூடிவிட்டனர். இதனால் மாலை நான்கு மணிக்கே படப்பிடிப்பை நிறுத்திவிட்டு வேறு இடத்தில் ஷூட் செய்தோம். இதற்கிடையே, "துப்பாக்கியின் நீண்ட ஷெட்யூலை முடித்துள்ளோம். " என்று முருகதாஸ் தெரிவித்துள்ளார்.



 இந்தியிலும் ரீ-மேக்

.பொதுவாக ஒரு படம் வெளியாகி, சூப்பர் ஹிட் ஆன பின்னர் தான் அந்தபடத்தை பிறமொழிகளில் ரீ-‌மேக் செய்ய முன்வருவர். ஆனால் இப்போதெல்லாம் படத்தின் சூட்டிங் நடந்து கொண்டு இருக்கையிலேயே அந்த படத்தை ரீ-மேக் செய்ய போட்டி போட்டு வருகின்றனர். அந்தவகையில் விஜய் நடித்து வரும் துப்பாக்கி படம், இந்தியிலும் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இதில் விஜய் ரோலில் அக்ஷ்ய் குமார் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  சமீபத்தில் துப்பாக்கி படத்தின் கதையை பாலிவுட்டின் அக்ஷ்ய் குமார் கேட்டு இருக்கிறார். கதையும் அவருக்கு ரொம்ப பிடித்து போய்விட்டது. மேலும் படத்தின் கதையும் மும்பையை மையப்படுத்தி இருப்பதால் தானே முன்வந்து இந்த ‌ரோலில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் படத்தில் அக்ஷ்ய்க்கு ஜோடியாக கத்ரீனா கைப் நடிப்பார் என்றும் தெரிகிறது. விரைவில் இதுப்பற்றிய அறிவிப்பு வெளியாக இருக்கிறது.
-சத்யஜித்ரே


உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments