ரவிஷங்கர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திரையரங்கம் ரூ.1.50 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.சென்னை, ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவன்யூவில் மே 11ஆம் தேதியன்று பிக்ஸ் 5D சினிமா திரையரங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க நிகழ்ச்சியில் நடிகர் அருண் விஜய், மிஸ் இந்தியா ரகுல் பிரித் ஆகியோர் கலந்துகொண்டார்கள்
32 இருக்கைகள் கொண்ட இந்த திரையரங்கில் ஒரு நாளைக்கு 30 காட்சிகள் திரையிடப்படும். 12 முதல் 15 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய அனிமேஷன் படங்களும் திரையிடப்படும் இந்த திரையரங்கில், நெக் ஹெர்ப்லாஸ், வாட்டர் ஜெட், ஹெர் ஜெட் உள்ளிட்ட அயல் நாட்டுத் தொழில் நுட்பங்கள் கொண்ட இருக்கையில் இடம்பெற்றுள்ளன.இத்திரையரங்கில் சீட்பெல்ட் அணிந்து கொண்டுதான் திரைப்படங்களை காணமுடியும். காரணம். திரையரங்கின் இருக்கைகள் முன், பின் மற்றும் பக்கவாட்டில் என சுழலும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், திரையில் ஒளிபரப்பாகும் காட்சிகளுக்கு ஏற்ப மழை பெய்தால் ரசிகர்கள் இடி, மின்னல், காற்று உள்ளிட்டவற்றையும் நெருப்பு காட்சிகள் வந்தால் புகை, வெப்பத்தையும் உணரும் வகையில் பிரத்தியேகமான வடிவில் தொழிற்நுட்பத்தை கொண்டு திரையரங்கு அமைக்கப்பட்டுள்ளது
5d - எப்படி இருக்கும்
.
குழந்தைகள், பெரியவர்கள் என அனைவரையும் குஷிப்படுத்தும் வகையில் அமைந்துள்ள இந்த 5D திரையரங்கத்தை, சென்னையை தொடர்ந்து பல்வேறு நகரங்களிலும் தொடங்கப்போவதாக கூறிய இதன் உரிமையாளர் ரவிஷங்கர், மேலும் 6D, 7D போன்ற திரையரங்குகளையும் அமைப்பதே தனது அடுத்த கட்டத் திட்டம். என்றார்.
-சதியஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments
நன்றி
"ஆறாம் அறிவு நிறைந்த"ராஜேஷ்
surendran