'3டி' படமாக- இயேசு கிறிஸ்து வரலாறு


யேசு கிறிஸ்து வாழ்க்கை முதல் தடவையாக 3டி படமாகிறது. தமிழ், மலையாளம் ஆங்கிலம் உள்ளிட்ட 9 மொழிகளில் இப்படத்தை எடுக்கின்றனர். முப்பது வெள்ளிக்காசு என படத்துக்கு பெயரிட்டுள்ளனர். ஆங்கிலத்தில் தர்ட்டி பீசஸ் ஆப் சில்வர் என பெயர் சூட்டியுள்ளனர். ரூ.35 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதை உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.
இதன் திரைக்கதை தயாராகி விட்டது. இயக்குனர் சூரியன். வாரணசாலா பைபிள் நிபுணர்களுடன் பலதடவை கதை பற்றி விவாதித்து திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளார். இயேசுகிறிஸ்து பற்றிய முதல் 3டி படமாக இதை எடுக்கிறோம் என்று தயாரிப்பாளர் ஜானி கொரிக்கா கூறினார்.

படப்பிடிப்பு ஜூலை இறுதியில் நடக்கிறது. ஜெருசலேம், கர்நாடகாவில் உள்ள ஹம்பி, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டி போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். இயேசுவாகவும் 12 சீடர்களாகவும் புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். படத்தில் 300 பேர் நடிக்கிறார்கள். அதில் 50 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள்.
படத்துக்கான பூஜை அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி கொச்சியில் நடக்கிறது. அடுத்த ஈஸ்டர் பண்டிகையில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்
.- சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Unknown said…
நல்ல விடயங்கள் திரைப்படமாகும் போது வரவேற்பு அதிகம்தான் அருமையான பதிவு....
  • சூரிய புயல் - உலக அழிவின் ஆரம்பமா? (நாசா வெளியீட்டுள்ள  படங்கள்)
    26.01.2012 - 0 Comments
    சூரியனின் மேற்பரப்பில் தோன்றியுள்ள காந்தப்புயல் பூமியை மூன்று விதமாக வெவ்வேறு தருணங்களில் தாக்கும் என்று…
  • கௌரவக் கொலைகள்
    18.05.2012 - 0 Comments
    உங்களுக்கு கொலை செய்தல் என்றால் தெரிந்திருக்கும், அதென்ன கௌரவக்கொலை, தமிழகத்தில் தற்போது அதிகரித்துவரம்…
  • திருவுடையத்தேவர் கட்டியது கட்டபொம்மன் கோட்டையா?
    16.07.2020 - 0 Comments
    இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் குண்டாற்றின் வடக்குக் கரையில் பாறைகள் நிறைந்த மேடான அடர்ந்த காட்டுப்பகுதியில்…
  • ஜிகர்தண்டா... வித்தியாசமான சுவை
    03.08.2014 - 0 Comments
    எங்க ஊர் ஸ்பெஷல் ஜிகர்தண்டா.காலை காட்சிக்கு எப்போதையும் விட கூடுதலாக கூட்டம். நம்ம  ஊர்ல படம்…
  • கமலை பற்றி ரஜினி எடுத்த வீடியோ...
    24.10.2015 - 0 Comments
    கமல்ஹாசனை  பற்றி ரஜினி எடுத்த குறும்படத்திற்கு கமல் வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.'ஞானம்கிறது கலை…