உங்களை சுற்றியுள்ள கடைகள், வீடுகளில் மனித உருவில் வேற்றுகிரகமனிதர்கள் வாழ்வதாக நினைத்து பாருங்கள் எப்படி இருக்கும்?. 1997 ல் M.I.B - 1 மதுரை காளவாசல் மாப்பிள்ளைவிநாயகர் திரையரங்கில் பார்த்துவிட்டு வந்த போது அப்படியான மனநிலையில்தான் இருந்தேன்.
படத்தில் எழுத்து போட தொடங்கும் போது ஒரு ஈ பறந்து கொண்டே சென்று ஒரு வேன் ஒன்றின் மீது மோதும்¢. அந்த வேனில் மனிதர்களோடு சேர்ந்து மனித உருவில் வேற்றுகிரகமனிதர்கள் இருப்பார்கள். அவர்களை தேடி வில்ஸ்மித், டாம்மி லீ ஜோன்ஸ் வருவார்கள். காலக்ஸி (பல கோடி நட்ச்சத்திரங்கள் அடங்கிய மண்டலம்) ஒன்றை கைப்பற்றுவதற்காக இரண்டு வேவ்வேறு கிரகங்களை சேர்ந்த வேற்றுகிரக மனிதர்கள் பூமியில் நட்த்தும் யுத்தம் தான் படத்தின் கதை.
M.I.B - 1 பாகத்தில் சில காட்சிகள்
M.I.B - 1 ல் மனித உடலில் தலைபகுதியில் இருந்து உடலை இயக்கும் வேற்றுகிரகமனிதன்
M.I.B - 3 படத்தெகுப்பு
தற்போது மென் இன் பிளாக் 3-ம் பாகம், இப்போது முப்பரிமாண படமாக தமிழிலும் வெளியாகிறது.
பிரபல மென் இன் பிளாக் ஏஜென்ட்கள் ” ஜே “(வில் ஸ்மித் )மற்றும் ” கே “(டாம்மி லீ ஜோன்ஸ் ) எதிர் காலத்தை காக்க ஒரு ஆபத்தான பயணித்திற்க்காக
மீண்டும் இந்த 3ம் பாகமான MIB 3ல் இணைகிறர்கள் .வேற்று கிரகவாசிகளை போன்ற விசித்திர உயிரனங்களால் ஏற்படும் ஆபத்தை தடுக்க ஜே கடந்த காலத்தை நோக்கி ஒரு ஆபத்தான பயணத்தைமேற் கொள்கிறார். அங்கு அவர் ” கே ” உடன் இணைந்து பல அதிர்ச்சியூட்டும் பிரபஞ்ச ரகசியங்களை கண்டு பிடித்து மனித இனத்தையும், எதிர் காலத்தையும் காப்பாற்ற போராடுகிறார்.இந்தப் படம் முப்பரிமாணத்தில் வெளியாகிறது. வரும் மே 25ல் சம்மர் ஸ்பெஷலாக உலகமெங்கும் வெளியாகிறது எம்ஐபி 3.
-சத்யஜித்ரே
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments