வழக்கு எண் 18/9.-ஆன்மாவை தொடும் படம் -நடிகர் பார்த்திபன் + டிரைலர்


வழக்குஎண் 18/9.-  நாளை (வெள்ளிக்கிழமை 4.5.2012) வெளியாக உள்ளது. பாலாஜி சக்திவேலின் காதல் படம் பார்த்திருப்பீர்கள், அதன் கதை சென்னை - மதுரை ரயில்பயணத்தில் பயணி ஓருவரின் கதை. கலலூரி படம் அரசியல் பிரச்சனைக்காக நடைபெற்ற பஸ்எரிப்பு சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்படட் படம். இப்படி உண்மை சம்பவத்தோடு கதையமைத்து படமாக்குவதில் வல்லவர் இயக்குனர்.
தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் எண்ணிக்கைக்காக படமெடுத்த காலம் இன்று இல்லை. நல்ல தரம், வெற்றியை இலக்கு வைத்துதான் பெரும்பாலான இயக்குநர்கள் படமெடுக்கிறார்கள். அதில் வெற்றி கிடைக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம்.

வருடத்துக்கொரு படம் என்று கூட இல்லை… தன் மனதில் உள்ள கதைக் கருவுக்கு முழுமையான வடிவம் கிடைக்கும் வரை காத்திருந்து ஆத்மார்த்தமாக படம் பண்ணும் இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் பாலாஜி சக்திவேல்.
அவரது சாமுராய் சரியாகப் போகாவிட்டாலும், காதல் அனைவரையும் உலுக்கியெடுத்தது. அடுத்து அவர் எடுத்த கல்லூரி, மனதைப் பிசைந்தது.
அந்தப் படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 4 ஆண்டுகள் அமைதியாக இருந்த பாலாஜி சக்திவேல், அடுத்து எடுத்திருக்கும் படம் வழக்கு எண் 18/9.


இந்தப் படம் வரும் வெள்ளிக் கிழ மைதான் வெளியாகிறது என்றாலும், முக்கியப் பிரமுகர்கள், சக இயக்குநர் கள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு பட த்தைப் போட்டுக் காண்பித்துவி ட்டனர் பாலாஜி சக்திவேலும் படத் தின் தயாரிப்பாளர் இயக்குநர் லிங்குசாமியும்படம் பார்த்த அத்தனை இயக்குநர்களும், கண்ணீருடன் வெளியில் வந்து பாலாஜி சக்திவேலைக் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.படம் பர்த்த இயக்குநர்க ளில் ஒரு வரா ன ரா பார்த்திபன், “சினிமா மூலம் ஆன்மாவை தொட முடியும் என இரண்டாம் முறையாக, அதிரும்படியாக, என் தூக்கம் கெடுக்கும்படியாக சொல்லி ஒரு பெரிய தாக்கத்தையே ஏற்படுத்திவிட்டார். தயவு செய்து முதல் நாளே அதுவும் முதல் ஆளாய் பாருங்கள்… ரிக்டர் அளவில் பதிவாகாவிட்டாலும் இதமாய் ஒரு நிலநடுக்கம் இதயத்தில் பதிவாகும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.


படத்தின் தயாரிப்பாளரான இயக்குநர் லிங்குசாமி, “இதுவரை நான் எடுத்ததெல்லாம் படமில்லங்க. பாலாஜி சக்திவேலின் வழக்கு எண் 18/9 தான் உண்மையான படம், படைப்பு. அதற்கு தயாரிப்பாளராக இருப்பதன் மூலம் நான் பெரிதாக எதையோ சாதித்த நிறைவுடன் உள்ளேன். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியில் வந்த பல பத்திரிகையாளர்கள் என்னிடம் பேச முடியாமல் கண்ணீர் விட்டனர். வேறு என்ன சிறப்பு வேண்டும் இந்தப் படத்துக்கு?” என்றார்.
-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....


ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

பதிவை இணைத்தால் பரிசு...
http://www.hotlinksin.com திரட்டியில் உங்கள் பதிவுகளை இணைத்து ஒவ்வொரு மாதமும் சிறப்புப் பரிசைப் பெற்றிடுங்கள். தொடர்ந்து பதிவுகளை இணைப்பவர்களில் மாதம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் ஒருவருக்கு சிறப்புப் பரிசு காத்திருக்கிறது.
இன்னும் இந்தப் படம் பார்க்கவில்லை. விரைவில் பார்க்க வேண்டும். பகிர்விற்கு நன்றி.
Anonymous said…
really this movie is very suburb. definitively best direct award goes to this director Balaji Sakthivel. his direction reveals each and every reel of the movie. esp. don't miss it to view this flim........r. jayaraman