தமிழ்த் திரைப்படங்களில் ஈழத்தமிழர் போராட்டச் சூழலின் வெளிப்பாடு


இவ்வாறான ஆய்வுகளின் போது, பெரும் பாலும் முதலில் பலியாவது கலைத்து வம். ஏனெனில், குறிப்பிட்ட தலைப் புடன் பொருந்திய விடயங்கள் எங்கு எப்படிக் காணப்படுகின்றன என்பதைத் தொகுப்பதே பொதுவாக நிகழ்கிறது. இத்தகைய செயற்பாடு எந்தளவிற்குச் சரி என்ற ஐயப்பாடு எனக்குண்டு. குறிப் பிட்ட விடயம் குறிப்பிட்ட கலை வடிவத் தில் வெளிப்படுவ திலுள்ள பிசிரற்ற தன் மைகள் - கலைத்துவம் - முக்கியமான தெனக் கருதுகிறேன்.
இது யாருடைய கலைத்துவம் என ஒருவர் கேட்டால், சமூக - அரசியல் தன்னுணர்வுடன் வடி வத்தின் அடிப்படை அம்சங்களைக் கணக்கிலெடுக்கும் அக்கறை கொண்ட வர்களின் கலைத்துவம் எனப் பதில் சொல்லலாம்.

திரைப்பட வடிவத்தில் ‘காட்சிரூப மொழியே’ அடிப்படையானது. பேச் சிற்கு முதன்மை கொடுக்காது, காட்சி களால் கதை நிகழ்வுகள் சித்தரிக்கப் படுவதே முக்கியமானது. அதனைப் போல கதைச் சித்தரிப்பில் பாத்திரங் களின் இயக்கத்தில் யதார்த்தப் பண்பு அதாவது உண்மைத்தன்மை பேணப் படுவது இன்றியமையாததாகிறது. விடயமும் வெளிப்பாட்டு முறைகளும் இணைந்து, மனதில் பதிவை ஏற்படுத் தியவற்றுக்கு முக்கியம் அளித்துள் ளேன்; இங்குப் பேசப்படும் எல்லாப் படங் களும் வீடியோப் பிரதியாகவே எனக் குப் பார்க்கக் கிடைத்தவையாகும்.

தமிழ்நாட்டுப் படங்கள் பெரிதும் வர்த்தக நோக்கிலேயே தயாரிக்கப் படுகின்றன; லாபம் பெறுவதே அவற் றைத் தயாரிப்பவர்களின் முதலும் முடிவுமான அக்கறை.

தற்போது, சுமார் ஏழு லட்சம் இலங் கைத் தமிழர் புலம்பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழ்வதாகச் சொல்லப் படுகிறது. இந்தப் ‘பரந்த சந்தை’யை இலக்காகக் கொண்டே ஈழத் தமிழர் தொடர்பான விடயங்களைக் கொண்ட படங்களைத் தமிழ்நாட்டில் தயாரிக் கிறார்கள். ஈழத் தமிழர் மீது கொண்ட உண்மையான அக்கறையால் இவற் றைத் தயாரிக்கவில்லை. இதனா லேயே பிறழ்வான வெளிப்பாடுகள் பல காணப்படுகின்றன. எமது அடிப்படைப் பிரச்சனைகள் கோடி காட்டப்படுவது கூட நிகழ்வதில்லை. எவ்வாறாயி னும், ‘ காற்றுக்கென்ன வேலி’திரைப் படத்தை உருவாக்கிய புகழேந்தி தங்க ராஜ் போன்றோரின் நல் நோக்கத்தை - ஈழத்தமிழர் போராட்டத்தில் கொண் டுள்ள அனுதாப நிலைப்பாடைப் புரிந்து கொள்கிறேன்; தமிழ்நாட்டுத் ‘திரை வியாபாரிகளி’ லிருந்து அவரை வேறுபடுத்திப் பார்ப்பதால், அவரது முயற்சியை நான் கொச்சைப்படுத்த வில்லை. ஈழத்தமிழர் போராட்டச் சூழ லோடு தொடர்பான அம்சங்களைக் கொண்டவையாக ஐந்து படங்கள் கவனத்தில் வருகின்றன.

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

மிகச் சிறிய தொரு அம்சமே ஈழம் பற்றியதாகச் சித்தரிக்கப்படுகிறது. முன்பு இலங்கையில் - வன்னியில் நடை பெற்ற போராளிகளின் தாக்குதலில் ஒரு கால் ஊனமுற்ற இந்திய அமைதிப் படை மேஜராக, மம்முட்டியின் பாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது; போராளிகளின் திடீர்த் தாக்குதல் காட்டப்படுகிறது.

பின்னர் ஒரு கட்டத்தில் அந்த மேஜர் கசப்புடன் சொல்கிறார். “ ஆயி ரத்து ஐநூறு பேர் கொல்லப்பட்டார் கள். இங்கு ஒரு நினைவுச் சின்னம் இருக்கா? சென்னைத் துறைமுகத்தில் நாங்க கால்வச்சப்போ யாருமே கண்டுக் கல்ல. அப்பதான் தோணிச்சு - யாருக் காக, எதுக்காக இந்தச் சண்டை? எல் லாமே வேஸ்ட் ... வேஸ்ட்..”

அமைதிப்படையின் இழப்பு, தமி ழகத்தில் அவர்கள் மீது காட்டப்பட்ட வெறுப்புடன்கூடிய அலட்சியம், இலங் கையில் இந்தியத்தரப்புச் சண்டையின் அர்த்தமின்மை என்பன இதனூடாக வெளிப்படுத்தப்பட்டுள்ளன. சிறு பகுதி யேயாயினும் மம்முட்டியின் நடிப்பி னால் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நந்தா

இப்படத்திலும், யுத்தச்சூழலில் தப்பிவந்த தனுஷ்கோடிப் பகுதி மணற்றிடரில் மணல்திடலில் இறக்கி விடப்படும் இலங்கைத் தமிழ் அகதி கள்- அவர்கள்மீது இராமநாதபுரம் அரச பரம்பரையைச் சேர்ந்த ஒருவர் காட் டும் அக்கறை என்பன, சிறுபகுதி யாகவே இடம் பெறுகின்றன. கதா நாயகி இலங்கை அகதிப் பெண்ணாக உருவாக்கப்பட்டுள்ள போதிலும் அகதிமுகாம் வாழ்க்கை - இலங்கை அகதிகள் அவலம் என்பன விபரமா கவோ, சரியாகவோ சித்தரிக்கப்படா மல், வழமையான ‘தமிழ்ப்பட மசாலாத் தனங்களினுள்’ கரைந்து போயுள்ளன. ஈழத்தமிழர் பிரச்சினையைத் தொடு வது போன்ற ‘ பாவனையே’ இதில் மிஞ்சுகிறது.


கன்னத்தில் முத்தமிட்டால்

முந்தைய இரு படங்களைப் போலல் லாது இப்படம் கூடுதலாக ஈழத்துடன் தொடர்புபடுகிறது. 1991ல் படகு மூலம் இராமேஸ்வரத்தில் அகதியாக வந்தி றங்கி, (இதற்காகவே வந்தவள் போல்!) பெண் குழந்தையைப் பிரசவித்து விட்டு இலங்கை திரும்பிவிட்ட ஒரு பெண் ஷியாமா. அந்தக் குழந்தையின் வளர்ப்புத் தந்தையும் தாயும் - குழந் தையின் வற்புறுத்தலால் - எட்டு ஆண்டுகளின் பின் கொழும்பு வழி யாக இலங்கை வருவதும், மாங்குளத் தில் தற்போது போராளியாகவுள்ள தாயைச் சிறுமி சந்திப்பதுமாக, வேறு இடைநிகழ்வுகளுடன் கதை பின்னப் பட்டுள்ளது. இந்த உயர் பிராமணிய ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க அரசிய லுக்குச் சார்பாக காஷ்மீரி, அஸ்ஸாம் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட் டங்களை முறையே ‘ரோஜா’, ‘உயிரே’ ஆகிய படங்களில் “பயங்கரவாதமாக” கொச்சைப்படுத்திய அதே மணிரத் தினம் தான் இந்தப் படத்தில் ‘ ஈழத்தின் யதார்த்தத்தையும், போராட்டத்தையும் கொச்சைப்படுத்தியுள்ளார். குறைந்த பட்சம் ஈழத்தமிழரின் அரசியல் அபிலா சைகள் என்னவென்பதைக் கோடி காட்டக்கூட அவர் முயலவில்லை! சிறுமி தாயைக் காணவேண்டு மென் பதுதான் முக்கிய பிரச்சனை போல போர்ச் சூழலில் காட்ட முனைந்தமை வலுவற்றது. ஈழத்தமிழர் போராட்டத் திற்கு எதிரான சித்தரிப்புகள் ‘நுட்ப மாக’ புகுத்தப்பட்டுள்ளன. கதையில் வரும் தமிழ் நாட்டுத் தம்பதி, அவர் களின் சிங்கள நண்பன் எல்லாம் நல் லவர்கள்; ஆனால் போராளிகள் கெட்ட வர்கள் - கொடுமைக்காரர்கள். தற் கொலைக்கு குண்டுத் தாக்குதலில் சிறுமி அமுதா காயப்படுகிறாள்; போரா ளிகளின் தீடிர்த் தாக்குதலின் இடை யில் அகப்பட்டு வளர்ப்புத்தாய் காயப் படுகிறாள்; கறுப்புநிறப் பெண் போராளி களைக் கண்டுதான் அமுதா பயப்படு கிறாள். மாங்குளத்தில் மக்கள் இடம் பெயரும் போது இராணுவம் துன்புறுத் துதலில் ஈடுபடாது நல்லதனத்துடன் நடந்துகொள்கிறது!; ஆனால், போராளி கள் தான் ஷெல் அடித்து மக்களை ‘அல்லோலகல்லோலத்திற்கு’ உள் ளாக்குகின்றனர்! தமிழ்நாட்டு எழுத் தாளக் கதாநாயகனையும் சிங்கள நண்பனையும் பிடிக்கும்போது போரா ளிகள் முரட்டுத்தனமாய் நடந்து கொள் வதாய்க் காட்டப்படுகின்றனர். அப் போது அதற்கு எதிராகக் கதாநாயகன்,

“ எங்களை நீங்கள் ஆண்டு நடத்துக

எங்களை நீங்கள் வண்டியிற்று பூட்டுக

எங்கள் முதுகில் கசையால் அடிக்க...”

என்று சில கவிதைவரிகளை உரத்தகுரலில் சொல்கிறான். உண் மையில், ஈழத்தின் முக்கிய கவிஞர் சண்முக சிவலிங்கம், இலங்கை அர சின் அடக்குமுறைச் சக்திகளிற்கு எதி ராக எழுதிய கவிதை வரிகளைப் போரா ளிகளிற்கு எதிராகப் பாவிக்குமள விற்கு, வக்கரிப்புடனும் குயுக்தியுட னும் மணிரத்தினம் செயற்பட்டுள்ளார்.

மாங்குளத்தில் மலைகள் இருப் பது, 1999ல் மாங்குளத்தில் சிங்களக் குடும்பம் இருப்பது, மின்சாரம் - வெளி நாட்டுடன் தொடர்பு கொள்ளும் வகை யிலான தொலைபேசித் தொடர்பு வசதி இருப்பது போன்ற (இன்னும் பல) சித் திரிப்புகள், ஈழப்போராட்டக் களம் பற் றிய மணிரத்தினத்தின் ‘அறியாமை’ யையே வெளிப்படுத்துகின்றன. இந் திய - இராமேஸ்வர சூழலில் காட்சி ரூப வெளிப்பாடுகள் அழகிய சட்டங்களில் நன்றாக அமைந்துள்ளபோதிலும், பிற்போக்கான எதிர்ப்புரட்சிகர அம்சங் களை அடிப்படையாகக் கொண்டிருப் பதில் எரிச்சலும் கோபமும் மேலோங் குவதில், அந்த காட்சிரூபப்படுத்தல் களின் சிறப்பும் சந்தோஷமும் நசுங் கிப் போய்விடுகின்றன.


அ. யேசுராசா
நன்றி தீக்கதிர் நாளிதழ்

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
இதற்கெல்லாம் முன்பே புன்னகை மன்னனில் வந்துள்ளது. அதை விட்டு விட்டீர்களே.
கண்டு கொண்டேனில் அவர் பேசிய வசனங்கள் என்றுமே அழுத்தமானவை..