கொலை வெறியோடு அலையும் மாணவ சமுதாயம்


அமெரிக்காவின் ‘ஓஹியோ’ மாகா ணத்தில் உள்ளது கிளவ்லேண்ட் நகர். இங்குள்ள உயர் நிலைப்பள்ளியில் பிப் ர வரி 27 ம் தேதி கேன்டீனில் மாணவர் கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப் போது அங்கு வந்த மாணவன் ஒருவன், சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுடுகிறான். இதில் ஒரு மாணவன் இறந்து போகிறான். அவன் எதற்குச் சுட்டான் என யாருக் கும் தெரியாது.

துப்பாக்கிக் கலாச்சாரம்

இதே போன்று, ஜெர்மனியில் ஸ்டட் கார்ட் நகருக்கு அருகே உள்ளது ஒரு பள்ளி. இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவன் ஒருவன்,
கையில் துப்பாக்கி யுடன், முகமூடி அணிந்தவாறு உள்ளே நுழைந்து திடீர் தாக்குதல் நடத்துகிறான். இதனால் வகுப்பறைக்குள் இருந்த மாணவ-மாணவிகள் அலறியடித்து சிதறி ஓடுகின்றனர்.சிலர் உயிருக்கு பயந்து ஜன்னல் வழியாக கீழே குதித்து காயமடைகின்றனர். இதை தொடர்ந்து அந்த மாணவன் வகுப்பில் இருந்த வர்களை நோக்கி வெறித்தனமாக துப் பாக்கியால் சுட்டுள்ளான். இதில் சம்பவ இடத்திலே 9 மாணவர்கள், 3 ஆசிரியர் கள் உள்பட 12 பேர் பலியானார்கள். பின் னர் பள்ளியில் இருந்து வெளியேறிய அவன் ரோட்டில் போய்க் கொண்டிருந்த மருத்துவமனை ஊழியரையும், மற்ற இருவரையும் சுட்டுக் கொல்கிறான். பின்னர் ஒரு காரை கடத்தி தப்பிக்க முயற்சி செய்கிறான். அவனை காவல் துறையினர் விரட்டிப்பிடிக்க முடியாமல் போகவே அவனை சுட்டுக்கொல்கின்றனர்.

அடுத்த சம்பவம் நடைபெற்றது அமெ ரிக்காவின் இலினாய்ஸ் பல்கலைக்கழ கம். வகுப்பு நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ஒருவன் மூன்று துப்பாக்கி களுடன் உள்ளே நுழைந்து மாணவர் களை நோக்கிச் சுடுகிறான். இதில் 4 மாணவிகளும், ஒரு மாணவனும் அங் கேயே குண்டு பாய்ந்து பலியானார்கள். மற்ற மாணவ, மாணவிகள் அலறியடித் துக் கொண்டு வெளியே ஓடினர். இதில் 22 பேர் மீது குண்டுகள் பாய்ந்தன. அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர். பின்னர் தன்னைத் தானே அந்த நபர் சுட்டு தற் கொலை செய்து கொள்கிறான்.அந்த நபர் அப்பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர் என்பது காவல்துறை விசா ரணையில் தெரிய வருகிறது.

அமெரிக்காவில் துப்பாக்கிக் கலாச் சாரத்திற்கு ஒரு கதை காரணமாகக் கூறப்படுகிறது. வெள்ளையர்கள் அமெ ரிக்காவில் குடியேறிய போது காட்டு விலங்குகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள துப்பாக்கியை வைத்துக் கொண்டதாகவும், அதனால் அனைத்து வீடுகளிலும் கடிகாரம் போல துப்பாக்கி கள் கட்டாயம் இருக்கும் என்றும் கூறப் படுகிறது. இதனால், அமெரிக்காவின் அரசியல் சட்டமும் துப்பாக்கியை வைத் துக் கொள்ள அனுமதித்துள்ளது. இதன் காரணமாக வீடுகளில் உள்ள துப்பாக்கி களைப் பாடசாலைகளுக்கு எடுத்துச் செல்லும் மாணவர்கள் பலரை பரலோ கத்திற்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.

வெளிநாட்டில் மட்டுமல்ல நம்நாட்டி லும் அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று நடை பெற்றது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஜன வரி மாதம் தமிழ்நாட்டில் உள்ள திருச் செங்கோடு பகுதியில் 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், விளையாட் டுப் பொருட்கள் விற்பனை செய்யும் பெண்ணை துப்பாக்கியால் சுட்டதாகச் செய்தி. ஆனால், இந்த விஷயம் பெரிதாக விவாதத்திற்கு வரவில்லை.

மாணவர்கள் 40 சதவீதம் பேருக்கு மனநலம் பாதிப்பு


சமீபத்தில் சென்னை பாரிமுனை யில் உள்ள செயின்ட் மேரீஸ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவன், வகுப்பறையில் பாடம் எடுக்க வந்த ஆசிரியை உமா மகேசுவரி என்பவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம் பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. விஜய் தொலைக்காட்சியில் “நீயா, நானா’’ நிகழ்ச்சியின் பேசுபொருளாக மாறுமளவிற்கு இந்த சம்பவம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமூகத் தில், அம்மாவிற்கு பிறகு அதிகம் மதிக் கப்படுவது ஆசிரியர்கள்தான். “பிச்சைப் புகினும் கற்கை நன்றே” என்ற ஒளவை யின் வார்த்தைகளுக்கு வடிவம் கொடுப் பவர்கள் ஆசிரியர்கள்தான். அப்படிப் பட்ட ஆசிரியர் ஒருவரை கத்தியால் குத் திக்கொல்லும் அளவிற்கு மாணவனை எது தள்ளியது?

குழந்தைகளின் மனச் சிக்கல்கள் கடந்த 10 ஆண்டுகளில் 400 சதவீதம் அதிகரித்திருப்பதாக இந்திய நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இனி வரும் காலங்களில் உளவியல் நோய்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்போவ தாகவும், 2020ஆம் ஆண்டில் இறப்பின் காரணிகளில் ஐந்தில் ஒன்றாக மன நோய் இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது. அத் துடன் தில்லியில் நடைபெற்ற ஆய்வு ஒன்று, மாணவர்களில் 40 சதவீதத்தினர் மன உளைச்சல் நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை யும் தந்துள்ளது.

ஒழுக்கம் தரும் கல்வியா? வியாபாரக்கல்வியா?

சென்னையில் நடைபெற்ற ஆசி ரியை கொலை சம்பவம் குறித்துப் பேசிய அண்ணா பல்கலைக்கழக துணைவேந் தர் மன்னர் ஜவகர் ,“ வகுப்பறையில் ஆசி ரியை கொலை செய்யப்படும் சம்பவம் வெளிநாடுகளில் நடைபெற்று இருக்க லாம். ஆனால் தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவத்தை கேள்விப்படுவது இதுதான் முதல் தடவையாகும். ஆசிரி யையை கொலைசெய்த மாணவனை சரியாக வளர்க்காததுதான் காரணமாக இருக்கும் என்று எண்ணத் தோன்று கிறது. பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது தவறு இல்லை. சினிமா, தொலைக்காட்சி களில் வன்முறையை தூண்டும் காட்சி காரணமாகவும் மாணவன் மனநிலை பாதிக்கப்பட்டிருக்கலாம். பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்வியை காட்டிலும் ஒழுக்கம் மிகவும் முக்கியம். ஒழுக்கத்துடன் கூடிய கல்விதான் உண் மையான கல்வியாகும்” என்று கூறினார்.

ஆனால், முன்னாள் குடியரசுத் தலை வரான அப்துல்கலாம் கருத்தோ இதில் வேறுபடுகிறது. கோவையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், “நவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஆசிரியர்கள், மாணவர்கள் பல் வேறு தகவல்களை அறிய முடிகிறது. இது ஒரு வகையில் சிறந்ததாக இருந் தாலும், மற்றொரு வகையில் ஆபத் தானது. ஆசிரியர்கள் மாணவர்களை வெறுக்கக் கூடாது. பெற்றோர்கள் குழந் தைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விவாத மேடை, கருத்தரங்கம், இசை, நட னம், நாட்டியம் போன்ற கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். மாணவர்களுக்கு பாடச்சுமை குறைக்கப்பட்டு, கல்வி முறையில் மாற்றம் செய்ய வேண் டும். ஆசிரியர்கள் மாணவர்களிடம் புதிய அணுகு முறைகளை வெளிப்படுத்த வேண்டும். அப்போதுதான் விழிப்பு ணர்வு பெற்ற ஆக்கப்பூர்வமான, நல்ல மாணவ சமுதாயம் உருவாகும். நான் இரா மேஸ்வரத்தில் படித்த காலத்தில், ஒரு மாணவர் பள்ளிக்கு வராவிட்டாலும் மாலையில் அவரது வீட்டுக்கு ஆசிரியர் சென்று ஏன் பள்ளிக்கு வரவில்லை என்ற காரணத்தை கேட்டறிவார். அப் போது, ஒருவித ஈடுபாட்டுடன் கல்வி போதிக்கப்பட்டது. ஆனால், இப்போது கல்வி வியாபாரமாகிவிட்டது. கட்டணம், விளம்பரத்தால் மட்டுமே கல்வி நிறு வனம் மேம்படாது. மாணவர்களுக்கு கொடுக்கப்படும் தரமான கல்வி மற்றும் சிறந்த ஆசிரியர்களால் மட்டுமே கல்வி நிறுவனங்கள் சிறப்படையும்” என்று பேசியது குறிப்பிட வேண்டிய விஷய மாகும்.

ஆசிரியர்-மாணவர் உறவு

வணிகமயக்கல்வி என்பது மாண வர்களை தயார் செய்யும் பட்டறைகளாக பள்ளிகளை மாற்றி க்கொண்டிருக்கிறது. பழுக்க நெருப்பில் காய்ச்சப்பட்ட இரும்பை சுத்தியலால் ஓங்கி அடித்து, அடித்து வேறு வடிவத்திற்கு மாற்றப்படுவது போல, நூறு சதவீத தேர்ச்சி என்ற உருவம் கொடுக்க பள்ளிகளில் மாணவர்களுக்கு நடத்தப்படும் ஸ்பெஷல் கிளாஸ் உள் ளிட்டவைகள் மேலும் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி வருகிறது. இது மட்டுமின்றி தொலைக்காட்சி, இணையதளம், கம்ப்யூட்டர் விளை யாட்டு, குடி, போதைப் பழக்கம், பெற் றோரின் கண்காணிப்பின்மை, நவீன உணவுகள் மாணவர்களின் மனஉல கத்தை வேறுபக்கம் திசைதிருப்பி விடு கிறது. அத்துடன் வசதி படைத்தவர் களுக்கு ஒரு கல்வி, வசதியற்றவர்க ளுக்கு ஒரு கல்வி என்ற நிலை மாணவர் களின் உணர்வு நிலையைக் கடுமை யாகப் பாதிக்கிறது. சமச்சீர் கல்வி என் பது முழுமையாக அமலானால் மாண வர்களின் மனநிலையில் நல்ல மாற்றம் நிகழ வாய்ப்பு உள்ளது. அத்துடன் பள்ளி களில் ஆசிரியர், மாணவர் உறவைப் பலப்படுத்தும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். தன்னுடைய மாணவனுடைய படிப்பு மட்டுமின்றி அவனுள் ஒளிந்து கிடக்கும் திறமை களை முதலில் அறிவது ஆசிரியராகத் தான் இருக்க முடியும். இப்படிப்பட்ட வெளிப்படுத்துதல்கள் ஆசிரியர்-மாண வர் உறவை மேலும் பலப்படுத்தும். இதற் கான நடவடிக்கைகளை தமிழக அரசும், கல்வித்துறையும் செய்திடுவதன் மூலம் சென்னை பாரிமுனை பள்ளிச்சம்பவங் கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்க முடியும்.

-ப.கவிதா குமார்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும்  select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments