அரசியல் பிரச்சனையில் அல்லாடிய வடிவேலுவை வைத்து படம் செய்ய அனைவரும் தயங்கிய நிலையில் துணிச்சலாக மீண்டும் வடிவேலுவை ஹீரோவாக்குகிறார் இயக்குனர் ஷங்கர். ஆம், இவரின் எஸ் பிக்சர்ஸ் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23 ஆம் புலிக்கேசியின் இரண்டாம் பாகத்தை எடுக்கிறது.
இம்சை அரசனின் முதல் பாகத்தை இயக்கிய
சிம்புதேவனே இந்த இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். படத்தின் கதை, ஸ்கிரிப்ட் என அனைத்தும் பக்காவாக தயாராகியுள்ளது. இன்னும் சில தினங்களில் படத்தைப் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட இருக்கிறார்கள். படத்தின் பட்ஜெட் 18 கோடிகள் என்பது உபரி தகவல்.
அதிமுக கூட்டணிக்கு எதிராக வடிவேலு நடத்திய பிரச்சாரம் அவருக்கு படங்கள் இல்லாமல் செய்தது. அவரை வைத்து படம் செய்யக் கூடாது என்ற ரகசிய உத்தரவு திரையுலகில் போடப்பட்டது. அதை மீறி அவரை ஒப்பந்தம் செய்ய யாருக்கும் துணிச்சல் வரவில்லை. இந்நிலையில்தான் தயாரிப்பிலிருந்து தற்காலிகமாக விலகிவிட்டேன் என்று தெரிவித்த ஷங்கர் வடிவேலுவை ஹீரோவாக்கியிருக்கிறார். அதுவும் அவர் ஏற்கனவே தயாரித்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில்.
இந்தப்படம் குறித்த செய்தி இன்னும் பலருக்கு தெரியாது. அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்போது திரையுலகில் இது புயலைக் கிளப்ப வாய்ப்புள்ளது.
-சத்யஜித்ரே
வடிவேலு குறித்து மேலும் சில பதிவுகள்.....
வடிவேலு-- 2011 தேர்தலுக்கு முன்னும் - பின்னும் நகைச்சுவை வீடியோ
வடிவேலு vs அரசியல்
உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்
Comments
Thanks for sharing
Best Regarding.
More Entertainment
For latest stills videos visit ..
www.chicha.in