வடிவேலு-- 2011 தேர்தலுக்கு முன்னும் - பின்னும் நகைச்சுவை வீடியோ


வடிவேலு சும்மா பெயரே கேட்டாலே காமடியா இருக்கல்லுல, 2011 தேர்தலுக்கு முன் எப்படி இருந்த வடிவேலு இன்னைக்கு? தனிப்பட்ட முறையில் விஜயகாந்துக்கும் இவருக்குமான பிரச்சனையை தேர்தலில் தி.மு.க. பயன்படுத்தி கொண்டது. தேர்தல் பிரச்சாரத்திலேயே வடிவேலு மீது செருப்பு வீசப்பட்டது.தேர்தல் முடிவுக்கு அ.தி.மு.க.வுக்கு சாதகமாக வந்ததும் வடிவேலு ஆடித்தான் போனார். கிட்டதட்ட ஒருவருடமாக வடிவேலுவின் படங்கள் வரவில்லை. அவரை வைத்து படமெடுக்க யாரும் விரும்பவும் இல்லை.எல்லாம் அரசியல் பயம். அவரை வைத்து படமெடுத்தால் நாமக்கு எதேனும் பிரச்சனை வந்து விடுமோ என்ற பயம்.
             ஆனாலும் வடிவேலுவின் நகைச்சுவையும், சிலபடங்களில் அவர் ஏற்றுக்கொண்ட குணச்சித்திர வேடங்களையும் திறம்படவே செய்தவர் வடிவேலு. அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்தி கொடுத்த தேவர்மகன் படத்திலிருந்து கடைசியாக வெளிவந்த பிரசாந்த் நடித்த மம்பட்டியான் படம் வரை அவரின் நகைச்சுவை நடிப்பு ரசிக்கதக்கது.
இதே அவரின் நகைசுவை காட்சிகளை வைத்தே 2011 தேர்தலுக்கு முன்னும் பின்னும் நகைச்சுவை காட்சிகள்......




தேர்தல் நேரத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,

‘’அதிமுகவில் இன்றைக்கு கூட்டணியில் சேர்த்திருக்காங்க,    கறுப்பு எம்.ஜி.ஆருன்னு ஒரு பீஸூ.    அது சொல்லுது.   என்னங்க, உங்க கூட்டணி தலைவரோட ஒரே மேடையில உட்கார்ந்து பேசுவீங்களாங்கற கேள்விக்கு,
‘’ நாங்க என்ன ஜோசியமா பார்க்குறோம். என்கிட்ட வந்து கேட்டுக்கிட்டு...’’ன்னு சொல்லுறார். ( விஜயகாந்த் மாதிரியே மிமிக்ரி செய்து காட்டுகிறார்.  வடிவேலுவுக்கு விஜயகாந்த் குரல் நல்லா வருது)நான் சொன்னேன்.   எந்த நேரமும் தண்ணியப்போடுறாருன்னு.   அதனால் இப்போ கண்ணாடி போட்டுக்கிட்டு பேசுது.
கண்ணாடி போட்டா கண்ணை கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைப்பு.   இருந்தாலும் வாய் ரோலிங் ஆகுறப்போ தெரிஞ்சுடும்ல மக்களுக்கு.

அவர பற்றி பேசுறது வேஸ்ட்.  மக்கள் அவர் பேச்சை நம்பமாட்டாங்க.என்ன பேசுனாலும் தெளிவா பேசுறியாங்குறது தெரிஞ்சுடும். ஜெயிச்ச அந்த 5 வருசமா இந்த பீஸூ சட்டசபையில் எங்க உட்கார்ந்து இருந்துச்சின்னு யாருக்குமே தெரியல.   டிவியில  காட்டுனாங்களா பார்த்தீங்களா.  சட்டசபையில் உட்கார்ந்து இருந்துசுச்சா.  எங்காவது எழுந்திருச்சு பேசிச்சா. விருத்தாசலத்தில் என்ன அள்ளி இறைச்சுட்டேன்னு ரிசிவந்தியத்தில் போய் சீட்டு வாங்கி நிக்குற.  
நீ உண்மையான ஆம்பளயா இருந்தா? மனுசனா இருந்தா? நேரே உன் சொந்த தொகுதி மதுரையில நிக்கனும்.   நானும் மதுரைக்காரன்.  நீயும் மதுரைக்காரன். நீ அங்க வந்துல்ல ஜெயிக்கனும்.  அத விட்டுப்புட்டு எதுக்கு இங்க வந்து நிக்குற.டேய் வடிவேலு வந்துட்டாண்டா வாடான்னு அங்குட்டுப்போய் நிக்குற.   எங்க போனாலும் நாங்க விடமாட்டோம்.    அதுவும் குறிப்பா நான் விடமாட்டேன்.ஷூட்டிங் இல்லேன்னு கட்சி ஆரம்பிச்சுட்ட.  இம்...ம்..ம்..ங்குற..( விஜயகாந்த் மாதிரியே பேசிக்காட்டுகிறார்) இப்படியே முக்குறியே.
 முக்காம என்ன செய்யப்போறேன்னு சொல்லு’’ என்று விளாசி எடுத்தார் வடிவேலு.
-சத்யஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Ilanchezhiyan said…
Nalla Nagaichuvai...