சிகரெட் பிடிப்பதால் கிடைக்கும் 16 நன்மைகள்...


நீங்கள் சிகரெட் பிடிப்பவரா உங்களுக்கு வாழ்த்துக்கள். உங்களால் நாட்டுக்கும், உங்கள் நண்பருக்கும், சமூகத்துக்கும் கிடைக்கும் நன்மைகள் அதிகம் அவற்றில் 16ஐ மட்டும் தொகுத்து தருகிறோம்...

 1. சிகரெட் மீது வீதிக்கப்படும் கடுமையான வரிகளால் நாட்டின் பொருளாதாரம் உயரும்.

 2. சிகரெட் புகையினால் மோப்பசக்தி குறைந்து சுற்றுப்பகுதியில் உள்ள நாற்றம் மூக்கிற்கு தெரியாது.வீட்டு உணவில் குறைகள் இருந்தாலும் அது பெரிதாக தெரியாது.


 3. பிரச்சனைகள் ஏற்படும் போது டென்சன் தேவையில்லை, ஒரு சிகரெட்டை பற்றவைத்தாலே போதும்.சிகரெட்டை ஊதி ஊதி தள்ளும் போது பிரச்சனைகளை புகைபோல் ஊதித்தள்ளுவது போல் கற்பனை செய்து கொண்டு காலத்தை ஓட்டலாம்.

 4. லொக்கு,லொக்கு என்று இருமி மற்றவர்களின் கவனத்தையும், அனுதாபத்தையும் தன்பால் ஈர்க்கலாம்.

 5. சிகரெட்டை கொடுத்து வாங்கி நட்பை வளர்த்துக்கொள்ளலாம், முன்பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கூட தீப்பெட்டி,லைட்டர் கேட்டு எளிதில் நட்பு கொள்ளலாம்.

 6. தினம் தோறும் சிகரெட்டிற்கு செலவளிக்கும் பணத்தில் பெட்டிக்கடைக்காரர்கள், பீடி,சிகரெட்,தீப்பெட்டி கம்பெனி தொழிலாளர்கள், உற்பத்தியாளர்கள் வாழ்வு வளம்பெறும்.இதன் மூலம் பிறருக்கு உதவிகிறோம் என்ற மகிழ்ச்சி கிடைக்கிறது.

 7. சிகரெட்டை ஊதித்தள்ளி எப்போதும் புகை பரப்பிக் கொண்டிருப்பதால் கொசுத்தொல்லை பிரச்சனை இருக்காது.சிகரெட்டில் உள்ள புகையிலையில் கொசுமருந்தை கலந்தால் தனியாக கொசுவர்த்தி வாங்கிடும் செலவுகள் மிச்சமாகிவிடும்.

 8. அதிகளவு சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் முதுமை தோற்றம் கிடைத்துவிடும், முதியவர்களுக்கு மரியாதையும், கவுரவமும் கிடைப்பதால் ரயில், பஸ்சில் எளிதாக இடம் கிடைக்கும்.

 9. இரவு முழுவதும் இருமிக்கொண்டேயிருப்பதால் திருடர்கள் பயம் இருக்காது.தனியாக நாய்கள் வளர்க்க வேண்டிய அவசியம் இல்லை.

 10. சிகரெட் நாட்டில் பொறுப்பற்ற மக்களின் ஆயுளை குறைத்து மக்கள்தொகை கட்டுப்பாட்டில் முக்கியபங்காற்றுகிறது.

 11. தொடர்ந்து சிகரெட் பிடிப்பதால் சீக்கிரம் உடல்தளர்ந்து கைத்தடியுடன் நடக்கும் நிலை ஏற்பட்டுவது தெருநாய்களை விரட்டிட உருப்படியாக உதவும்.

 12. வாழ்க்கையின் பிற்பகுதியில் மருத்துவத்திற்கும், மருத்துவமனைகளுக்கும் பணத்தை அள்ளி,அள்ளி தரும் வள்ளால்களாக மாறிவிடலாம்.


13. சிகரெட் பிடிப்பதில் பல்வேறு புதியஸ்டைல்களை கற்றுக்கொண்டு சினிமா துறையில் தனக்கென ஒரு முத்திரை பதித்து எதிர்காலத்தை உருக்கலாம்.

 14. எப்போதும் லைட்டர், அல்லது தீப்பெட்டி வைத்திருப்பது இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படும் போது உதவியாக இருக்கும்.

 15. புகைபிடிப்பதால் கேன்சர் வந்துபடும் அவஸ்தைகளை பார்க்கும் பிள்ளைகள் சிகரெட் பக்கமே போகாமல் நல்லபிள்ளைகளாக வளர்த்திட உதவும்.

 16. வாய்துர்நாற்றத்தை புகைநெடியால் எளிதில் மறைத்துவிடலாம். எப்போதும் புகைபிடித்தபடி இப்பதால் வாய் மற்றும் சுவாச உறுப்புகளில் உள்ள கிருமிகள் செத்துப்போகும்,அல்லது வேறு பாகங்களுக்கு எஸ்கேப் ஆகிவிடும்

-ஜே.எஸ்.செல்வராஜ்.

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

சொல்லித் திருந்தாவர்களை இப்படிச் சொல்லியாவது நோகடிப்போம் . அருமைங்க .
Anonymous said…
yes..you are right.

nagu
www.tngovernmentjobs.in
இளஞ்செழியன் said…
புகைப்பழக்கம் உடையர்களிடம் மிக எளிமையான முறையில், வேறுபட்ட கோணத்தில் உங்கள் அணுகுமுறை செல்கிறது. உங்கள் வார்த்தைகள் நிச்சயம் அனைவரிடம் தாக்கத்தை ஏற்படுத்தும். வித்தியாசமான முறையில் மக்களுக்கு புகைப்பழக்கத்தின் தீமைகளைக் கூறிய நண்பர் செல்வராசுக்கு வாழ்த்துக்கள்
தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பதிந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு அன்போடு அழைக்கிறேன் .
தங்கள் பதிவொன்றை வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன் . நேரமிருப்பின் வலைச்சரம் வருமாறு நட்போடு அழைக்கிறேன் .
  • 15 ஆண்டுகளுக்குப் பிறகு கமல் புதிய சாதனை
    11.08.2015 - 2 Comments
    "என்னால் சும்மா இருக்கமுடியாது"  என்ற படியே தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார் கமல். இன்றைய இளம்…
  • நடிகை அஞ்சலி விவகாரமும் பதிவர்களும்....
    14.04.2013 - 5 Comments
    கடந்த வாரத்தில் ஒரு நாள் நடிகை அஞ்சலி எனது சித்தி கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும்,…
  • எகிப்து மன்னனுக்கு வேற்றுகிரவாசிகள்  கொடுத்த கத்தி
    14.04.2021 - 0 Comments
     ஏராளமான புதையல்களைக் கொண்டிருந்த ஓர் எகிப்திய அரசரின் கல்லறை. அந்த அரசரின் பெயர், துட்டன்காமன்.…
  • எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்கிறது நண்பன்
    13.01.2012 - 1 Comments
    நண்பன் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி என்னவென்றால் உன்னுடைய அறிவு, திறமை போன்ற சமாச்சாரங்கள் உன்னில் இருந்து…
  •  சல்மான்கானுக்கு  திரையுலகமே கண்ணீர் சிந்துகிறது; இவர்களுக்கு...?
    10.05.2015 - 2 Comments
    சல்மான் கார் ஏறியதால் காலை இழந்தவர்தான் அப்துல்லா ரவுப் ஷேக். இவர் ஒரு பேக்கரி தொழிலாளி. அவர் பணியா…