தமிழ்த் திரையுலகில் முற்றும் மோதல்


தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் சங்கமான பெப்சி அமைப்பிற்கும் தயாரிப்பாளர்களுக்குமிடையே ஊ திய உயர்வு குறித்த பேச்சு வார்த் தையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக கடந்த மாதம் படப்பிடிப்புகளில் பங்கேற்காமல் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இத னால் பல்வேறு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, அரசு தொழிலாளர் நல ஆணையம் தலையிட்டு தயாரிப்பாளர் மற்றும் பெப்சி தொழிலாளர்களுக்கிடையே சமாதான முயற்சிகள் மேற்கொண்டதால் நிறுத்தப்

பட்ட படிப்பிடிப்புகள் மீண்டும் துவங்கியது. இப்படப்பிடிப்புகளிலும் ஊதியத்தை உயர்த்தி கொடுத்து வரும் தயாரிப்பாளர்களின் திரைப்படங்களில் மட்டுமே தொழிலாளர்கள் பங்கேற்று வருவதா கவும் கூறப்பட்டது. இந்நிலையில், ஞானவேல் ராஜா தயாரித்து நடிகர் கார்த்தி நடித்து வரும் அலெக்ஸ் பாண்டியன் என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை, பழைய விரோதத்தை மனதில் கொண்டு இயக்குநர் அமீர் பெப்சி தொழிலாளர்களை தூண்டிவிட்டு நிறுத்தி விட்டதாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. இதேபோல், நடிகர் விதார்த் நடிக்கும் காட்டுமல்லி திரைப்படத்தின் படப்பிடிப்பும் சர்ச்சையால் நிறுத்தப்பட்டது. இப்படப்பிடிப்புகள் திடீரென நிறுத்தப்பட்டதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டி, பெப்சி தொழிலா
ளர்களின் போக்கை கண்டித்து தயாரிப்பாளர்கள் படப்பிடிப்புகளை ரத்து செய்து கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பெப்சி உடனான உறவை துண்டித்து தன்னிச்சையாக படப்பிடிப்புகளை நடத்த வேண்டும் என பல தயாரிப்பாளர் கள் வலியுறுத்தியதாக தெரிகிறது. மேலும் பெப்சி அமைப்பிற்கு போட்டியாக புதிய தொழிலாளர் அமைப்பை துவங்க வேண்டும். இயக்குநர் அமீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.இதனிடையே பெப்சி அமைப்பிற்கு மாற்றாக புதிய அமைப்பு துவக்க முயற்சிக்கும் தயாரிப்பாளர்களுக்கு கண்டிப்பதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பெப்சி அமைப்பினை சேர்ந்த
இயக்குநர் அமீர், எம்.ராமதுரை, ஜி.சிவா, அங்கமுத்து சண்முகம் ஆகியோர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்
கையில், கடந்த 4 ஆண்டு காலமாக ஊதிய உயர்வு கேட்டு தயாரிப்பாளர்களு டன் போராடி வருகின் றோம். ஆனால் சம்பளத்தை உயர்த்த தயாரிப்பாளர்கள் தொடர்ந்து மறுத்து வரு
கின்றனர். 40 ஆண்டுக்கும் மேலான பாரம்பரியமான பெப்சி அமைப்பை உடைத்து புதிய சங்கத்தை உருவாக்குவோம் என்று சவால் விடும் தயாரிப்பாளர்களை கண்டிக்கிறோம்.
 இதனி டையே, தயாரிப்பாளர்கள் மற்றும் பெப்சி அமைப்புக் கிடையே ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக வெளி வர இருந்த பல்வேறு திரைப் படங்களின் வெளி யீட்டு தேதிகள் தள்ளி வைக் கப்பட்டுள்ளன.

- சத்ஜித்ரே

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments