''அரவான்'' அனுபவித்து பார்க்க வேண்டிய படம்


படம் எப்ப முடியும்னு இருந்துச்சு சார்? என்றார் அலுவலக நண்பர். விமர்சனங்களும் ரசிகன் ரிஸ்க் எடுக்க வேண்டிய அவசியமில்லை என்ற  பாணியிலேயே இருந்தது. பார்பதா? வேண்டாமா? என்ற குழப்பம். ஆனாலும் இந்த படத்தை பார்க்க எனக்கு மூன்று காரணங்கள் இருந்தன.ஒன்று அரவான் பட கதையின் மூலக்கதை எடுக்கப்பட்ட சாகித்யஆகாடமி விருது பெற்ற நாவலான காவல்கோட்டத்தின் நாவலாசிரியர் சு.வெங்கடேசன், எனக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கம்,அவரின் நாவலிருந்து உருவாக்கப்பட்ட படம் எப்படி இருக்கிறது என்கிற ஆவல்.மற்றொன்று அரவான் படமாக்கப்பட்ட இடங்களுல் ஒன்றான மதுரை அருகில் உள்ள மாங்குளம் ஓவாமலைக்கு நேரில் சென்று வந்து இன்றையவானத்தில் பதிவு செய்துள்ளேன்,(இந்த பதிவின் கீழே இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது) மேலும் இந்த படத்தின் கதைகளமான தென்தமிழகத்தை சேர்ந்தவன், அதிலும் கதைநாயகர்களான கள்ளர்கள் அதிகமாக வாழும் மதுரை,திருமங்கலம்,உசிலம்பட்டி பகுதியை சேர்ந்தவன். எப்படியிருந்தாலும் சரி பாடம் பார்பது என்ற முடிவோடு தான் சென்றேன்.

                பயந்தது போல் இல்லை, ஆனால் இடைவேளைக்கு பிறகு கிளை கதைகள் மூலமாக படம் சற்று இழுவை போல் இருந்தாலும், நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் நிறைவே உண்டு.
200 வருடங்களுக்கு முன் தமிழ் சமுகத்தின் வாழ்க்கை எப்படி இருந்தது. ஒடுக்கப்பட்ட கள்ளர்சமுகம் தன் களவுத் தொழிலில் அனுபவ ரீதியாக கற்றுவைத்துள்ள நுணுக்கங்கள். குறிப்பாக....

       தூங்குறவன் காவலுக்கு போகக்கூடாது...., தும்முறவன் களவுக்கு போகக்கூடாது
       களவுள இருந்து தான் காவல் பெறக்குது...
       போன்ற வசனங்கள் 

பண்டமாற்று முறை வியாபா ரம். கள்ளர்கள் களவு தொழில் மூலம் கொண்டுவரும் நகைகளை கொண்டே செழித்துவாழும் பணக் காரர்கள். இன்றைய இரட்டை நாக்கு மனிதர்களுக்கு நேர்ரெதிராக சொல் லுதான் வாழ்க்கை என்ற கண்ணியத் தோடு ஏழ்மையிலும் கடைபிடிக்க ப்படும் வாழ்க்கை முறைகள். குலதெய்வ வழிபாட்டு முறை உருவான வரலாறு என கதையோட்டத்தில் அனுபவித்து தெரிந்து கொள்ள நிறைய தகவல்கள் உள்ளன.

கதைச் சுருக்கம்....

சின்னவீரம்பட்டி என்றொரு மலைக்கிராமம். பக்கத்து கிராமத்தான் ஒருவன் இந்த ஊரில் மர்மமாகக் கொல்லப்பட, இந்தக் கொலைக்கான காரணம் தெரியாததால், இரு கிராம மோதலைத் தவிர்க்க, பலியான உயிருக்கு பதிலுயிர் தர சின்னவீரம்பட்டி முடிவு செய்கிறது.
கிராமத்தின் காவல்காரன் ஆதிதான் இந்த பலியாள் என்று முடிவாகிறது. பலிபீடத்தில் பூஜையெல்லாம் செய்து பலியாளுக்கு 30 நாள் கெடு வைக்கிறார்கள். இருக்கிற 30 நாளில் இந்தக் கொலையின் உண்மையான பின்னணி தேடிப் புறப்படுகிறார் ஆதி. இடையில் காதலியுடன் கல்யாணமும் நடக்கிறது.
கொலையாளி யாரென்பது தெரிந்து, அவனை ஊர்மத்தியில் நிறுத்த அழைத்து வரும்போது, அருவியில் குதித்து செத்துப்போகிறான். அவனைப் பின்தொடர்ந்து குதிக்கும் ஆதிக்கு கால் முறிந்துவிட, குறித்த நாளில் பலிபீடத்துக்கு வரமுடியாமல் போகிறது.
ஊர் கொந்தளிக்கிறது. ஆதிக்கு பதில் அவன் நண்பனை பலிகொடுத்து, பக்கத்து ஊர் கோபத்தைத் தணித்தாலும், ஆதியால் ஏற்பட்ட அவமானத்துக்காக அவனைக் கண்டதும் பலியெடுக்க உத்தரவாகிறது.

இதெல்லாம் தெரியாத ஆதி, உயிர்பிழைத்து இரவில் ரகசியமாய் வீட்டுக்கு வருகிறான். உண்மை புரிந்து தன்னை ஒப்படைக்கப் போகும்போது, மனைவியும் மாமனாரும், ஒரு பத்தாண்டுகள் தலைமறைவாக இருந்துவிட்டால், ஊர்தண்டனை யிலிருந்து தப்பிக்கலாம் என்கிறார்கள். உயிர்வாழும் ஆசையில் மீண்டும் தலைமறைவாகி, கொள்ளையடித்து வாழ்க்கையை ஓட்டுகிறார் ஆதி.
ஒரு களவின்போதுதான் பசுபதியிடம் சிக்கி நட்பாகிறார். ஒருகளவில் பசுபதியின் உயிரைக் காத்து நெருக்கமாகிறார். ஒருகட்டத்தில் தன் பிளாஷ்பேக்கைச் சொல்கிறார் ஆதி. ஆனால் எதிர்பாராமல் குறித்த காலம் முடிவதற்குள் தன் ஊர் ஆட்களிடம் சிக்கிக் கொள்கிறார் ஆதி.
ஊர்முடிவுப் படி பலியாகிறாரா? உண்மை அவரைக் காப்பாற்றுகிறதா என்பது க்ளைமாக்ஸ்.

- சத்யஜித்ரே

இந்த பதிவுடன் தொடர்புடைய பதிவுகளை படிக்க ....

அரவான் கதைவசனகர்த்தா சு.வெங்கடேசனுக்கு சாகித்ய அகாதெமி விருது

'அரவான்''- 18ம் நூற்றாண்டுத்தமிழன்

''அரவான்'' - லொகேசன் ஓவாமலையின் வரலாற்றுத் தகவல்கள்..

உங்கள் கருத்துக்களை எழுத ....
ஒவ்வொரு படைப்பின் கீழ் இருக்கும் select profile அருகேயுள்ள அம்புக்குறியை சொடுக்குங்கள் அதில் name - url ல் name ல் உங்கள் பெயரை டைப் செய்து continue கொடுத்து அங்குள்ள பெட்டியில் உங்கள் கருத்தை பதிவு செய்யுது postcomment கிளிக் செய்யவும்

Comments

Anonymous said…
உங்களுடைய பதிவுகள் பலரை சென்றடைய வேண்டுமா? உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி இணையத்தளத்தில் இணைக்கலாம். உங்கள் பதிவின் சுருக்கத்தையும் அதன் இணைப்பையும் rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். இது தமிழ்மணம் பரப்புகிறோம் என்று கூறிக்கொண்டு உங்கள் படைப்புக்களை உங்களிடமே பணம் கறந்து பிரசுரிக்கும் கீழ்த்தர சேவை இல்லை.முற்றிலும் இலவசமான சேவை.மேலதிக தகவல்களுக்கு கீழுள்ள முகவரிக்கு செல்லுங்கள் http://www.googlesri.com/2012/03/blog-post_4830.html
அரவான் படத்தை எப்படியும் இந்த வாரம் பார்க்கணும். காவல்கோட்டம் வாசித்துவிட்டேன். எனவே, கதைக்கும் திரைக்கதைக்கும் உள்ள நெருக்கம் எப்படி இருக்கிறது என்று பார்க்க விரும்புகிறேன். அரிட்டாபட்டியில் அரவானுக்காக போடப்பட்ட செட்டை பசுமைநடையின் போது பார்த்த போதே படம் வந்ததும் சீக்கிரம் பார்த்துவிட நினைத்தேன். அருமையான பதிவு. பகிர்விற்கு நன்றி.